தேர்தல் வந்துவிட்டது. பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவின் அதிகாரம் மிகுந்த ஒரு மனிதரை, ஜனநாயக வழிமுறைகளின் வழியாகத் தேர்வு செய்யும் தருணம் நெருங்குகிறது. உலகின் மாபெரும் மக்களாட்சி நெறிமுறைகளை கேலிக் கூத்தாக்கிடும் செயல்களுக்கும், அதைப் பாதுகாத்திட முனைந்திடும் செயல்களுக்குமான ஒரு போர்க்களம் அருகில் வருகிறது. உயர்ந்தவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே ஆட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்பது சிறந்ததொரு கருத்துதான். ஆனால், இது ஜனநாயகத்திற்குப் பொருந்தாது. நலிந்தவர்களையும், எளியவர்களையும், ஒடுக்கப் பட்டவர்களையும், பெண்களையும், சிறுபான்மையினரையும் இணைத்துப் பிரதிநிதித்துவப் படுத்துவதுதான் ஆட்சி மன்றம். அதுவே உண்மையான ஜனநாயகம் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.""தெரு கூட்டுபவர்களுக்கும், அடிமை வேலை செய்பவர்களுக்கும், கீழ்ச் சாதிக்காரர்களுக்கும் சட்டமியற்றுகின்ற இடத்தில் என்ன வேலை?'' என்று திலகரைப் போன்ற காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது, அம்பேத்கர் வேறுவிதமாக அரசின் அதிகாரத்தைப் புரிந்து கொள்ளும்படி கூறினார். ஜனநாயகத்தின் அடிப்படையானதும், உயிர் மூச்சானதுமான கூறு, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் என்பது அவருடைய எண்ணம். உண்மையில் அவருடைய கருத்துதான் ஜனநாயகத்தின் அடித்தளம்!கருத்தியல் தளத்தோடு மட்டுமே நின்று போய்விடாமல் அதை செயலாக்குவதற்கான வழிமுறைகளை சட்டமாக்கியதன் மூலம் – இந்திய ஜனநாயகத்தின் தந்தையாக அம்பேத்கர் மிளிர்கிறார். இந்தியாவைப் பொருத்தவரை, அவரிடமிருந்துதான்ஜனநாயகத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்று அதிகாரப்பரவல் உருவாகியிருக்கிறது. எளிய மனிதர் தொடங்கி, சமூகத்தின் உயர் மட்டங்களிலிருந்து வருகின்ற மனிதர்கள் வரை, தேர்தல் களத்தில் போட்டிப் போடுகிறார்கள். எல்லோருமே எப்படியாகிலும் அதிகாரத்தின் கருவறைக்குள் நுழைந்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.இத்தேர்தலுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2,500 கோடி ரூபாய்களை வாக்களிப்பதற்கான கையூட்டாக வேட்பாளர்கள் மக்களிடம் அளிக்கப் போகிறார்கள் என்கிற கணிப்பு, ஜனநாயகத்தின்பால் மதிப்பு கொண்டிருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கிறது. 1952 ஆம் ஆண்டில் நடை பெற்ற முதல் மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை 10 கோடியே 40 லட்சம். அது கடந்த தேர்தலில் 1,300 கோடி ரூபாயாகியுள்ளது. செலவு இம்முறை பன்மடங்கு அதிகமாகலாம்.தமது ஞாபக மறதியையல்ல, பகுத்தறிவின்மையை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்கிற உண்மை மக்களுக்குத் தெரிவதில்லை. மிகச்சரியான மனிதரை தேர்வு செய்து, ஆட்சிமன்றத்திற்கு அனுப்பும் விடயத்தில் மக்கள் பல நேரங்களில் தோற்றுப் போய் விடுகின்றனர்.அணி மாறுதல்கள் கூச்சமின்றியும், வெட்கமின்றியும் நடக்கின்றன. சாதி பெரும்பான்மையைப்பார்த்து தொகுதிகளும், ஆட்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். குழாயடிச் சண்டையையும் கூட சில நேரங்களில் மிஞ்சிவிடுகின்றன பிரச்சாரங்கள்! நாள், நட்சத்திரம், ஜாதகம், ராசி என்று எல்லா மூடநம்பிக்கைகளையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன (சில) கட்சிகள். அ.இ.அ.தி.மு.க. எப்போதுமே இதில் முன்னணிதான்! அக்கட்சி அறிவித்திருக்கும் வேட்பாளர்களின் ஜாதகங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று கூட இதை சொல்ல முடியாது, அதை அசிங்கப்படுத்தும் செயல் இது!இவ்வளவு ஆரவாரங்களோடும், ஆர்ப்பாட்டங்களோடும் தேர்வு செய்யப்படும் அரசு, இந்தியாவில் எதை செய்கிறது? எவற்றை சாதிக்கிறது? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? இத்தேர்தலில் வாக்களிக்கப் போகும் 71.4 கோடி வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்க முடியாமலும் இருக்கிறவர்களுக்கும் – இக்கட்சிகள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளன? தேர்தல் அறிக்கை என்கிற பொய்களைத் தவிர! உண்மையில் வாக்காளர்களுக்கு அளிக்கப்படப் போவதாகக் கணித்திருக்கும் 2,500 கோடி ரூபாய் கையூட்டுப் பணத்தை விடவும் மோசமானவை, இந்தத் தேர்தல் வாக்குறுதிகளே! வாக்காளர்கள் மறைமுகமாகப் பெற்றுக் கொள்ளும் கையூட்டுப் பணம் கூட, ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவியாக இருந்து விடும். ஆனால், இப்பொய் வாக்குறுதிகள் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இருப்பதில்லை.தேர்தலில் பணம் ஆற்றும் பங்கைக் காட்டிலும் சொற்கள் ஆற்றும் பங்கே அதிகமானது. தேர்தல் வாக்குறுதிகளே மக்களை ஏமாற்றும் ஆபத்தான சட்டவிரோத செயலை செய்கின்றன. தேர்தல் அறிக்கைகளை செயல்படுத்துவதில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் அக்கறை செலுத்துவதில்லை. பொய்களை எப்படி செயல்படுத்த முடியும்? அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு அவை தமது ஆட்சியை நடத்தத் தொடங்குகின்றன. குறைந்த விலையில் அரிசி, இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கைப்பேசி போன்ற அறிவிப்புகள் வாக்கு அறுவடைக்கானவைதான்.மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை, இந்த வகையான அறிவிப்புகளை தமது தேர்தல் அறிக்கையில் சேர்க்கத் தவறுவதில்லை. சில வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளிக்கின்றன. மக்களும் ஏன் முன்பே நிறைவேற்றவில்லை என்று கேட்பதில்லை. காங்கிரஸ் கட்சி அண்மையில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதாக சொல்லியிருப்பதும் அப்படியான ஒரு மறுபடி பொய்தான்!தேர்தலில் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெறுவது உண்மைதான். ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலோ, எல்லா கட்சிகளும் தோற்றுப் போய்விடுகின்றன என்பது அதைக் காட்டிலும் உண்மை. நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் அடியோடு மாற்றங்கள் நிகழும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், எதிலும் மாறாத நிலையிலேதான் இந்தியா இன்னமும் இருக்கிறது. சாதியை ஒழிக்க இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை. வன்கொடுமைக் குற்றங்களை முற்றிலும் இல்லாமலாக்குவதில் மண்ணைக் கவ்வியிருக்கின்றன இந்த அரசுகள். பெண்களும், குழந்தைகளும் இன்னமும் அதே நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.உழைப்பவர்கள் இந்தியாவில் சுரண்டப்படுவதுபோல, உலக நாடுகள் எவற்றிலும் சுரண்டப்படுவதில்லை. உழவர்களின் விளை பொருளுக்கு இன்னும் கூட அவர்களாலேயே விலையை தீர்மானிக்க முடியவில்லை. விவசாய சங்கங்களுக்குக்கூட அப்படி ஒரு உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் வீட்டுக்கே சென்று விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை அவற்றுக்கு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தனது அண்மைத் தேர்தல் அறிக்கையிலேயே கூட அறிவித்திருக்கிறது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளிலே கூட அதை நிறைவேற்றுமா என்பது அய்யத்திற்குரியதுதான். கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்னமும் களையப்படவில்லை. இன்னமும் கூட தேவையான அடிப்படை வாழ்வாதார வசதிகளான குடிநீர், சுகாதாரம், வீடு, மருத்துவம் போன்றவை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆட்சிகள் அமைகின்றன. மக்கள் ஆளப்படுகின்றனர்.ஆட்சி மன்றத்திற்குப் போகத் துடிக்கின்ற வேட்பாளர்கள் சுமார் 5,350 கோடி ரூபாய்களை செலவு செய்யப் போவதாக சொல்லப்படுகிறது. செல்வந்த வேட்பாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு அறுபது ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரைக்கும் வாடகைக் கட்டணமாக அளித்து, பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர்களையே கூட அமர்த்துகிறார்கள்.வானத்திலிருந்து இறங்கி வரும் தேவதைகளாக தம்மை நம்பிக் கொள்ளும்படி மக்களிடம் கூறுவார்கள் அவர்கள். இப்படி தேர்வு பெற்று செல்கின்ற பிரதிநிதிகளுக்கு அரசு கோடி கோடியாக செலவு செய்கிறது. ஊதியம், படிகள் என்று கோடிக்கணக்காக ஒதுக்கீடுகளை செய்கிறது. அரசு நலத்திட்டங்களோடு இப்பிரதிநிதிகளின் தொகுதி வளர்ச்சிக்கென்றும் கூட நிதியினை ஒதுக்கீடு செய்கிறது. காங்கிரஸ் அரசு 19247.25 கோடிகளை அவ்வாறு ஒதுக்கியது. இந்த நிதி சொந்த சாதி மற்றும் கட்சி நலனுக்காகவே பெரும்பாலும் செலவு செய்யப்படுகிறது என குற்றச்சாட்டுகள் வந்தாலும் ஒதுக்கீடு நிறுத்தப்படவில்லை. இத்தகைய பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்ற அழகை நாடே பார்த்து ரசிக்கிறது! நாடாளுமன்றத்தில் தனது தொகுதிக்காக வினா எழுப்புவதற்குக்கூட கையூட்டு பெற்ற உறுப்பினர்களைப் பற்றி நாம் அறிவோம். இவர்கள்தான் மீண்டும் நம்முன் மேடையேறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அண்மைக்காலமாய் நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியான செய்திகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, இந்த அரசுகளின் செயலற்ற நிலை நமக்குப் புரிந்துவிடும். 2003 இல் இருந்து 2009 வரைக்குமான நிதிநிலை அறிக்கைகளில், குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான நிதி 2.30 சதவிகிதத்திலிருந்து 5.35 சதவிகிதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் எண்ணிக்கையோ 15லிருந்து 19 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 79 சதவிகிதம் பேர் ரத்த சோகை நோயுடன் இருக்கின்றனர். இந்தியாவில் சுமார் 47 சதவிகித குழந்தைகள் எடைக் குறைபாட்டு சிக்கலுடன் இருக்கிறார்கள். இன்னமும் கூட நம் நாட்டிலே எழுபது சதவிகித குழந் தைகள் கல்விக் கூடங்களை எட்ட முடியாமல்தான் இருக்கின்றனர் (ஆதாரம் : FORCES அறிக்கை "டைம்ஸ் ஆப் இந்தியா', 25.2.2009).திருச்சி மாவட்டத்திலுள்ள திருமலையான்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொது சுடுகாட்டில் தலித் மக்களால் பிணத்தைப் புதைக்க அனுமதியில்லை. வழக்குரைஞர் ரத்தினம் இதை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவால், நீதிமன்றம் சாதிப் பாகுபாட்டை கண்டித்திருக்கிறது ("தினகரன்' 25.3.09). உலக காச நோய் நாளான மார்ச் 24 அன்று நமக்கு கிடைத்த செய்தி இதுதான் : மனிதக் கழிவகற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காசநோய் "பணிப்பரிசாகக்' கிடைக்கிறது. முப்பதிலிருந்து எழுபது சதவிகிதப் பணியாளர்கள் இந்த உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 24.3.2009).திருநெல்வேலி சங்கரன் கோயில் அருகில் உள்ள செந்தட்டி கிராமத்தில், முப்பிடாதி அம்மன் கோயிலில் வழிபட உரிமை கேட்ட இரு தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ("தீக்கதிர்', 8.3.09). ஒரு கேலிச்சித்திரத்தில் வரையப்பட்ட விலங்கின் முகம் ஒபாமா சாயலில் இருந்ததற்காக, அமெரிக்காவில் கடந்த மாதத்தில் பெரும் சலசலப்புகள் கிளம்பின. மேற்சொன்ன செய்திகளுக்காக இங்கு எந்த சிறு சலனமும் இல்லை. எந்த ஒரு வன்கொடுமைக்கும் அரசுகளும், அரசியல்வாதிகளும் பதறுவதில்லை. காய்ப்பேறியதும், சாதி மற்றும் மதங்களின் பிற்போக்கு வைரம் பாய்ந்ததுமான இந்தியாவின் நிலையை அரசின் அறிக்கைகளே ஒப்புக் கொள்கின்றன.மய்ய அரசின் பதினோராவது அய்ந்தாண்டுத் திட்ட (2007 – 2012) அறிக்கை அப்படியான ஒன்றுதான். அத்திட்டத்தின் கீழ் செயலாற்றும் "பட்டியல் சாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக்குழு'வின் அறிக்கை, அண்மையில் தமிழில் வெளிவந்திருக்கிறது. தலித் மக்களின் திறன் வளர்ப்புக் குழுவிற்கு பேராசிரியர் தோரட் தலைவராக இருக்கிறார். கல்வி மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமூக அதிகாரமயமாக்கல், துப்புரவுப் பணியாளர் நலன், திட்டம் மற்றும் மய்ய அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றுக்கென இக்குழு மேலும் அய்ந்து துணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிருத்துதாசு காந்தி, இத்துணைக் குழுக்களில் ஒன்றான "திட்டம் மற்றும் மய்ய அரசின் சிறப்பு நிதி ஆணையக்குழு'வின் தலைவராக இருக்கிறார். பெசவாடா வில்சன், பால் திவாகர் போன்றோர் இப்பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர்.துணைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே தமது அறிக்கைகளை 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டக்குழுவிற்கு அளித்துள்ளதோடு, பரிந்துரைகளையும் செய்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் வாய்ப்பந்தல்களின் ஊடாக, ஆரவாரங்களின் வழியே, பகட்டுகள் மற்றும் பம்மாத்துகளின் இடையே இவ்வறிக்கையைப் படிக்கின்றபோது, தலித்துகளின் தற்போதைய நிலை அதிர்ச்சியளிக்கிறது. அரசு எந்திரம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாக அவ்வறிக்கையை நாம் எடுத்துக் கொள்ள முடியும். நேர்மறையாகப் பார்த்தாக வேண்டும் என்றாலோ, விடுதலைக்குப் பிறகு அரை நூற்றாண்டுப் பயணத்தில் சாதியத்தையும், தீண்டாமையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் களைவதற்காக அரசுகள் மேற்கொண்டிருக்கும் முயற்சியாகவும் கருதிக் கொள்ளலாம்.அறிக்கையிலிருந்து சில புள்ளிவிவரங்களை நாம் இங்கே பார்க்கலாம். தலித் மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்னமும் கிராமப் புறங்களிலேயே வசித்து வருகின்றனர். விவசாயத்தை சுய தொழிலாகக் கொண்டிருப்போர் இவர்களில் 16.8 சதவிகிதம்தான். ஆனால், பிறரோ 41.11 சதவிகிதமாக இருக்கின்றனர். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவிகித தலித்துகள் கூலித் தொழிலாளர்கள்தான். தலித் மக்கள் கிராமப் புறங்களில் 35 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 39 சதவிகிதமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தலித்துகள்தான் மிக அதிக அளவில் வறுமையில் (60 சதவிகிதம்) உழல்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான். அங்கு தற்காலிக வேலை செய்யும் தலித்துகளிடையே (69.45 சதவிகிதம்) வறுமை அதிகமாக உள்ளது.தலித் பெண்களின் கல்வி நிலை இன்னமும் கூட 50 சதவிகிதத்தைக் கடக்கவில்லை (41.9 சதவிகிதம்). பிற சமூக குழந்தைகளை விடவும் தலித் குழந்தைகள் குறைவாகவே பள்ளியில் சேர்கிறார்கள். உயர் கல்வியில் தலித்துகளின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவர்களின் பதிவு விகிதம் (எஉகீ) 5.0 சதவிகிதம்தான். ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால பெண்களின் இறப்பு ஆகியவை தலித்துகள் இடையிலேதான் கூடுதலாக உள்ளன. தீண்டாமைக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் இவ்வறிக்கை சுட்டுகிறது. தொழில் செய்வதிலும், கூலி பெறுவதிலும் நிலவும் பாகுபாடுகளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.இவ்வறிக்கையில், நாடெங்கிலும் தலித் மக்களுக்கு எதிராக நிலவி வரும் சில வழக்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன : தேவதாசி மற்றும் ஜோகினி முறைகள், ஆந்திராவில் இன்றளவும் நிலவி வருகின்றன. இவ்வழக்கப்படி, தலித் பெண்கள் கிராம கடவுளர்க்கு தாசிகளாக நேர்ந்து விடப்படுகின்றனர். இப்பெண்கள் பாலுறவுத் தொழிலாளர்களாகப் பின்னர் பாவிக்கப்படுகின்றனர். தொழில்களில் கூட தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. 30 சதவிகித இந்திய கிராமங்களில் தலித்துகள் வீடு கட்டும் பணியில் அமர்த்தப்படுவதில்லை. கேரளாவில் தலித் மக்கள் வீடு கட்டும் பணிக்கு அனுமதிக்கப்பட்டாலும், இறுதியில் தீட்டுக்கழிக்கும் நோக்கத்துடன் ஒரு சடங்கு நடத்தப்படும் வழக்கம் இருக்கிறது. பீகார் போன்ற மாநிலங்களில் தண்ணீர் எடுத்து வர, சமையல் செய்ய, தானியம் புடைக்க, வீட்டு வேலை செய்யும் தலித் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓடை மற்றும் ஏரி நீரை பயன்படுத்த அனுமதி இல்லாததால், தலித் விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது.இவ்வறிக்கையில் தரப்பட்டிருக்கும் தீண்டாமைக் குற்றங்கள் பற்றிய தகவல்கள் கலக்க மூட்டுகின்றவையாக இருக்கின்றன. உத்திரப் பிரதேசதம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தமிழ் நாடு, ஆகிய மாநிலங்களே தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதில் முதல் அய்ந்து இடங்களில் இருக்கின்றன. 2001இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 33,501. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் ஆண்டுக்கு 10,732 குற்றங்கள் பதிவாகின்றன. இவற்றில் 423 கொலைக் குற்றங்கள். இந்திய அளவில் தலித் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்களில்தான், அம்மக்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாகவே நிகழ்த்தப்படுகின்றன என்கிறது அறிக்கை.தலித் மக்களை எல்லா நிலைகளிலும் உயர்த்துவதை இலக்காகக் கொண்டிருக்கும் இத்துணைக்குழு அறிக்கை –பொருளாதார முன்னேற்றம், தரத்துடன் கூடிய வெற்றி, சிறப்பான வெற்றித்திறன், அதிகாரம் பெற்று வலுவடைதல், தீண்டாமைக் கொடுமையொழித்தல், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றைத் தனது அளவுகோல்களாகக் கொண்டிருக்கிறது. மேலும் ஆக்கப்பூர்வமானதும், சிறப்பானதுமான பரிந்துரைகளையும் அளித்துள்ளது (பெட்டிச் செய்தி).சிறப்பு உட்கூறுத் திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும், செய்த பணிகளை மதிப்பீடு செய்யவும் தலித் மேம்பாட்டுத் துறைக்கு எந்த விதமான அதிகாரமும் வழங்கப்படாதது போல், இத்துணைக் குழுக்களின் பரிந்துரைகளையும் கிடப்பில் போட அரசு கள் வழிகோலும் எனில், இன்னொரு அறிக்கை இதைப் போன்றே சில காலம் கழித்து வெளியாவதைத் தவிர, வேறு மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது.சுமார் 10 லட்சம் கோடி ரூபாய், 11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்துக்கென ஒதுக்கப்படுகிறது. அதில் தலித்துகளுக்கு விகிதப்படி 1.6 லட்சம் கோடிகள் ஒதுக்கப்படலாம். தமிழகத்தில் இது 19,000 கோடியாக இருக்கும். இத்தொகை பல துறைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. பகுத்துப் பார்க்க இயலாதவை, பகுத்துப் பார்க்கக் கூடியவை என்ற வரையறைகளில் பல துறைகள் ஒதுக்கீட்டுத் தொகையை தலித்துகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு வழங்குவதே இல்லை. மய்ய அரசில் இருபது துறைகளும், மாநில அரசில் 18 துறைகளும் அவ்வாறு தலித் மக்களுக்குரிய நிதியை மறுத்து வருகின்றன. தலித் மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளே முழுமையாக செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றன.புள்ளிவிவரப்படி, 1997–98 ஆண்டில் 588 கோடி ரூபாய்; 1998–99 இல் 643 கோடி ரூபாய்; 1999–2000இல் 840 கோடி ரூபாய்; 2000–01இல் 887 கோடி ரூபாய் மற்றும் 2004–05இல் 1,363 கோடி ரூபாய் என்ற அளவில் சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் 2005 வரையிலான 8 ஆண்டுகளில், நிதி நிலை அறிக்கையில் சுமார் 20 சதவிகிதம் என்ற அளவில் 7,143 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு ஒதுக்கவில்லை. தலித்துகளுக்கான அந்த நிதி பறிபோகிறது."தாட்கோ'விற்கு என 2000ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 67.98 கோடி ரூபாய் செலவிடப்படாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சிறப்பு உட்கூறுத் திட்ட மானியத் தொகையாக அளித்து வருகிறது. அதைப் பெரும்பாலான மாநிலங்கள் பயன்படுத்துவதில்லை. கணக்குப்படி, 1991 முதல் 96 வரை சுமார் 80.96 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் விட்டிருக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் மேம்பாட்டிற்கென 2000 ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகார மளிக்கும் துறை தமிழக அரசுக்கு வழங்கிய 40.18 கோடியில் 18.57 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை. 2009வரை இத்தொகையை கணக்கிட்டால் இவ்வாறு செலவழிக்கப்படாத தொகை 100 கோடிகளைத் தாண்டலாம். இதோடு மட்டுமின்றி சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கென மய்ய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையில் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் தொகை, பல கோடிகளைத் தாண்டுகிறது. 1997 – 2000 வரை அப்படி திருப்பி அனுப்பப்பட்ட தொகை மட்டுமே சுமார் 1,272.67 கோடி ரூபாய் ஆகும். (ஆதாரம் : சமூகக் கண்காணிப்பகம்)தலித்துகள் தன்னிறைவு அடைந்து விட்டார்கள் என்று கூறி, இனி நிதி ஒதுக்கீடு செய்யாமல் விடுவதற்கான சதியன்றி இச்செயல்கள் வேறொன்றுமில்லை. நிலவும் சூழலில் இத்துணைக் குழுவின் அறிக்கையும் சட்ட வடிவமாக்கப்படாமலோ, ஆணை களாக்கப்படாமலோ போகலாம். அப்படி நடக்குமெனில், தேர்தல் வாக்குறுதிகளைப்போல இந்த அறிக்கைகளும் நீண்டகாலப் பொய்யுரைதான்! திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தாத நிலைதான் தலித்துகளின் முன் இருக்கும் சிக்கல். தலித் மக்களுக்கான பெரும்பாலான திட்டங்களும், சட்டங்களும், துரு பிடித்தும், செல்லரித்தும் கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளை நம்புவதைக் காட்டிலும், இருக்கும் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றனவா என கண்காணித்து செயல்படுத்துவதில்தான் தலித் மக்களின் நிலை மாற்றம் உள்ளடங்கி இருக்கிறது.தலித் தேசிய வங்கி ஏற்படுத்தப்பட வேண்டும்பதினொராவது அய்ந்தாண்டுத் (2007 – 2012) திட்டக் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பரிந்துரைகள் :1. தலித் மக்களுக்கான கல்வி, பொருளாதார முன்னேற்றம், வன்கொடு மைத் தடுப்பு / நடவடிக்கை போன்ற வற்றுக்கென தனியே ஒரு "சமூகத்திறன் வளர்ப்பு ஆணையம்' அமைக்கப்பட வேண்டும். இதற்கு ஆட்சியர் நிலையிலுள்ள அதிகாரி தலைவராக இருக்க வேண்டும். இவர் 1995 ஆம்ஆண்டு அரசு விதிப்படி, இணைப்பு அதிகாரியாக (Nணிஞீச்டூ Oஞூஞூடிஞிஞுணூ) இருந்து செயல்பட வேண்டும்.2. தீண்டாமையை ஒழிக்க, தேசிய அளவிலான பரப்புரையை கரும்பலகைத் திட்டம், போலியோ ஒழிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு இணையாக ஒலிபரப்புத் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும்.3. ஒவ்வொரு அமைச்சகமும், தேசிய தலித் ஆணையத்துடன் கலந்தாலோசித்து, தலித் மக்களுக்காக தனி வரவு செலவுத்திட்ட அறிக்கையை நிதிநிலை அறிக்கையுடன் அளிக்க வேண்டும்.4. தலித்துகளுக்கென 1000 கோடி ரூபாய் மூலதனத்துடன் ஒரு தேசிய வங்கி அமைக்கப்பட வேண்டும்.5. மரபு சார்ந்த தொழில் பயிற்சிகளுக்குப் பதிலாக, புகைப்படம் எடுத்தல், பயண முகவர், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தலித்துகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.6. கழிவகற்றுபவர் மற்றும் உலர் கழிப்பறைகளை கட்டுதல் (தடை) சட்டம் 1993இன் பிரிவுகள் 3(1), 4, 17, 18 ஆகியவற்றை திருத்த வேண்டும் (இச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது).7. இடஒதுக்கீட்டை (மய்ய அரசில்) 15லிருந்து 16.23 சதவிகிதம் என உயர்த்த வேண்டும்.8. ராணுவப் பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு சட்டமியற்ற வேண்டும்.9. தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும்.10. தலித் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க உதவி, முனைவர் பட்ட ஆய்வு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ராஜிவ் காந்தி கல்வி நிதி உதவி, அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டு சட்டம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் - பகுத்துப் பார்க்கக் கூடியவை, பகுக்கவியலாதவை என்கிற முரண்பாட்டை முன்னிறுத்தி – தலித் மக்களுக்குரிய திட்டத் தொகையை கீழ்க்காணும் துறைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனமாநில அரசுத் துறைகள்வேளாண்மைத் துறைவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைதரைவழிப் போக்குவரத்துத் துறைவேளாண்மை ஆய்வு – கல்விஎரிசக்தித் துறைகனரக மற்றும் சிறுதொழில் துறைசுற்றுலாத் துறை சுற்றுலாத் துறைகல்வி (குறிப்பாக உயர் கல்வி)உணவுப்பொருள் வழங்கல் துறைமருத்துவ நலத்துறைகலை மற்றும் பண்பாட்டுத் துறைசமூக நலத்துறைதொழிலாளர் மற்றும் தொழில் துறைசெய்தித் தொடர்புத் துறைசமூக மற்றும் மக்கள் நலத் துறைநீர்ப்பாசனம் மற்றும் மீன்வளத் துறைவிண்வெளி ஆராய்ச்சித் துறைநிலச் சீர்திருத்தத் துறைமத்திய அரசுத் துறைகள்நிலக்கரி, சுரங்கத் தொழில் துறைஎக்கு உருக்காலைத் துறைதரைவழிப் போக்குவரத்துத் துறைவேளாண்மை ஆய்வு – கல்விரசாயன / பெட்ரோலியத் துறைவிமானப் போக்குவரத்துத் துறைநுகர்வு வாணிபத் துறை சர்க்கரை மற்றும் உணவு எண்ணெய்உணவுப்பொருள் வழங்கல் துறைஅஞ்சல்வழித் தொடர்புத் துறைஇந்திய மருத்துவம் மற்றும் ஓமியேõபதிகலை மற்றும் பண்பாட்டுத் துறைபொதுத்துறை நிறுவனங்கள்கனரகத் தொழில்கள் துறைசெய்தித் தொடர்புத் துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுஅணுசக்தித் துறைகடலாராய்ச்சி மற்றும் மேம்பாடுவிண்வெளி ஆராய்ச்சித் துறைநிர்வாகச் செயல்பாட்டுத் துறை
Tuesday, June 9, 2009
மதமாற்றம் திரும்ப கிடைத்த உரிமை அய். இளங்கோவன்
சிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாராம் பாடலாமா? பாடக்கூடாதா? இக்கோயில், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்திலா? பரம்பரை தீட்சிதர்கள் நிர்வாகத்திலா? "இந்து அறநிலையத் துறையின் கீழ் கூடாது' என்கிறார்கள் தீட்சிதர்கள்.அவர்களுக்கு வக்காலத்து வாங்க வருகிறார், ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் சுப்பிரமணிய சாமி. "தீட்சிதர்களின் பொது நல' வழக்கில் தம்மையும் ஒரு பிரதிவாதியாக இணைத்துக் கொள்ளக் கோரி உயர் நீதிமன்றத்தை அவர் அணுகுகிறார். சென்னை உயர் நீதிமன்றமும் சாமியின் "பொது நலப்' பார்வையை கணக்கிலெடுத்து, தீட்சிதர்களின் மேல்முறையீட்டு வழக்கில் அவரை இணைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 522 கல்லூரி விரிவுரையாளர் பின்னடைவுப் பணி யிடங்களை நிரப்பக் கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2006இல் தொடுத்த பொது நல வழக்கை (WP No. 40131/2006) விசாரித்த உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புரையில், ""அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பும் பணி சார்ந்த பிரச்சினையில், ஓர் அரசியல் கட்சி பொது நல வழக்கைத் தொடர முடியாது'' எனக் கூறியது.அண்மையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக் கல்லூரியில் சுமார் 170 மருத்துவர்கள்/துணை மருத்துவப் பணியாளர்கள் பணி நியமனத்தில் – பார்வைக் குறை யுடையோர், செவித்திறன் குறையுடையோர் மற்றும் உடல் குறையுடையோருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தரவேண்டும் என இக்கட்டுரையாளர் தொடுத்த பொது நல வழக்கில் (WP No. 1880/2009) 30.1.2009 அன்று, ""கல்லூரிப் பேராசிரியர் இயலாதோர் சார்பாக பொது நல வழக்கு தொடர முடியாது'' என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது.சமூகத்தின் கடைக் கோடியில் இருந்தபடி இன்றைக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு அன்றாடம் ஆளாகிவரும் தலித் மக்களின் நலனுக்காக, மேம்பாட்டிற்காக; பார்வைக் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர் மற்றும் உடல் குறையுடையோர் சார்பாக – சமூக அக்கறையும், விரிந்த பார்வையுமுடைய சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களை அணுகும்போது, அப்பொது நல வழக்குகள் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யப்படுவது, சமூக ஆர்வலர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது.அஞ்சலட்டையில் எழுதப்பட்ட செய்தியைக்கூட பொது நல வழக்காக எடுத்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நாளேடுகளில் வந்த செய்தியைக்கூட பொதுநல வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்து நீதி வழங்கியுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நீதிமன்றங்கள், நம்பிக்கைக்குரிய ஜனநாயகத் தூண்களாகவே செயல்பட வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டிற்காகப் போராடும்போது, நீதிமன்றங்களை நாடினால், நமது நீதிமன்றங்கள் அப்பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதிலும், அனுமதிப்பதிலும் – தத்தம் மனோநிலைக்கேற்ப நடந்து கொள்வது ஒன்றும் புதிதன்று.இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் முதன் முதலாக நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது, சென்னை மாகாணத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்த மாணவர் சேர்க்கையில் இனவாரி இடஒதுக்கீட்டு அரசாணைதான் (எண். 2208, நாள் : 16.6.1950). இவ்வரசாணை, அன்றைக்கு நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை (எண். 3437, பொதுத்துறை, நாள் : 21.11.1947) அடிப்படையாகக் கொண்டது.இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் இனவாரி இடஒதுக்கீடு, சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. அன்றைக்கு 14 புள்ளி இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இதன்படி கீழ்க்கண்டவாறு அனைவரும் இடஒதுக்கீட்டைப் பெற்றனர் : பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் – 6; பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் – 2; பார்ப்பனர்கள் – 2; தலித்துகள் – 2; ஆங்கிலோ இந்தியர் மற்றும் இந்திய கிறித்துவர்கள் – 1; முஸ்லிம்கள் – 1இவ்வாணையை எதிர்த்து 1950இல் வழக்குத் தொடுத்த பார்ப்பனரான திருமதி செண்பகம் துரைராசன், மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர் அல்லர்; எந்த வகையிலும் இவ்வரசாணையால் பாதிக்கப்பட்டவரும் அல்லர். இருப்பினும், அன்றைக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான பெஞ்ச், இந்த இடஒதுக்கீட்டு ஆணை அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவித்தது. உயர் நீதிமன்ற பெஞ்ச், திருமதி செண்பகம் துரைராசனுக்கு வழக்குத் தொடுக்க தகுதி உண்டா, இல்லையா (டூணிஞிதண் ண்tச்ணஞீடி) என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. இதனை, இத்தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றம் பின்வருமாறு தனது தீர்ப்புரையில் பதிவு செய்துள்ளது :“From the affidavit filed in support of her petition, it does not appear that the petitioner had actually applied for admission in the Medical College. She states that an inquiry she came to know that she would not be admitted to the college as she belonged to the Brahmin community. No objection however was taken to the maintainability of her petition on the ground of absence of any actual application for admission made by her. On the contrary, we have been told that the State had agreed to reserve a seat for her, should her application before the High Court succeed. In the peculiar circumstances, we do not consider it necessary to pursue this matter any further. But we desire to guard ourselves against being understood as holding that we approve of a person who has not actually applied for admission into an educational institution coming to Court complaining of infringement of any fundamental right under article 29(2). The High Court by its judgement delivered on July 27, 1950, allowed this application of Srimathi Champakkam Dorairajan.மேற்கூறியவாறு தனது கருத்தைப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, திருமதி செண்பகம் துரைராசனின் கோரிக்கையை ஏற்று, இடஒதுக்கீடு செல்லாது என அறிவித்தது.இங்கே மிகச் சுருக்கமாக இடஒதுக்கீட்டு வரலாற்றை நினைவு கூரலாம். கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் இந்தியப் பகுதிகளை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தபோது, தமது நிர்வாகத்தில் குறிப்பாக அரசுப் பணியில் ஏகபோக மேலாதிக்கம் செலுத்தி வந்த சாதி இந்துக்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தது. 1853 ஆம் ஆண்டு அளவிலே பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் அரசுப் பணியில் இருந்தது தெரிய வந்தது. சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை நிர்வாகம், ஒரே குடும்பத்தைச் சார்ந்த 49 பார்ப்பனர்களின் கையில்தான் அன்றைக்கு இருந்தது. இவர்களின் செல்வாக்கு மற்றும் குடும்பத் தொடர்புகள் காரணமாக இவர்களின் மோசடிகளையும் தவறுகளையும் கண்டுபிடித்துத் தண்டிக்கவோ, பொதுமக்களை இவர்களின் சுரண்டல்களிலிருந்து காப்பாற்றவோ அரசால் முடியாமல் போனது. இந்தப் பின்னணியில்தான் சென்னை மாகாண வருவாய் வாரியத்தின் நிலை ஆணை, 9.3.1854 அன்று (ஆணிச்ணூஞீண் குtச்ணஞீடிணஞ் Oணூஞீஞுணூ 128(2)/1854) பிறப்பிக்கப்பட்டது :""மாவட்ட ஆட்சியர்கள், தத்தம் அதிகாரத்திற்குட்பட்ட சார்நிலைப் பணிகளில் செல்வாக்குள்ள ஒரு சில குடும்பங்களே ஆதிக்கம் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கியமான பதவிகளில் பல சாதிகளையும் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டாட்சியர்களில் ஒரு பிரிவினர், பிராமணரல்லாதவராக இருத்தல் வேண்டும். அதுபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமையிலான இரண்டு வருவாய்த் துறைப் பணியாளர்கள், எப்போதுமே வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.''இந்த நிலை ஆணையே பிற்காலத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைகளுக்குத் தோற்றுவாயாகும். அரசுப் பணிகளில் அன்று பார்ப்பனர் அல்லாதோருக்குப் போதிய இடஒதுக்கீடு கோரி போராடிய அமைப்புகள் பல இருந்தன. அவை இடஒதுக்கீட்டைக் கோரி மனு அளித்தன :1897இல் விஸ்வகுலோத்தரன் சங்கம், சென்னை மாநில ஆளுநரிடம் மனு அளித்தது (அரசாணை எண். 970, பொதுத்துறை நாள் : 20.7.1897) 1907இல் அஞ்சுமன் ஏ முபதீ அன்லே, இஸ்லாம் முகமதி கல்விச் சங்கம், சென்னை மாகாண முஸ்லிம் லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் வைஸ்ராயிடம் கூட்டாக கோரிக்கை மனு அளித்தன (அர சாணை எண். 263, பொதுத்துறை நாள் : 3.4.1907) 1913இல் மூன்று முஸ்லிம் சங்கங்கள் மற்றும் தென் இந்திய கத்தோலிக்க இந்தியர் சங்கம் சென்னை மாகாணத்திற்கு வைஸ்ராய் வந்தபோது மனு அளித்தன (அரசாணை எண். 1129, பொதுத்துறை நாள் : 8.9.1913).1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக் கட்சி) உருவானது. 1920இல் நீதிக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஆதர வாக வருவாய்த் துறை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள நிலை ஆணையை (128(2)/1854) வழுவாமல் நடைமுறைப் படுத்துவதற்கான தீர்மானம், சட்ட மன்றத்தில் 1921இல் நிறைவேற்றப்பட்டது. இனி அரசுத் துறையில் பணியமர்த்தப்படுபவர்கள் கீழ்க்கண்ட வகையில் இருத்தல் வேண்டும் என வரையறுத்தது :1. பார்ப்பனர்கள் 2. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 3. இந்திய கிறித்துவர்கள் 4. முஸ்லிம்கள் 5. அய்ரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் 6. ஏனையோர் (அரசாணை எண். 613, பொதுத் துறை நாள் : 16.9.1921).இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில் (எண். 1071, பொதுத்துறை, நாள் : 4.11.1927) 12 பணியிடங்களை ஒதுக்கீட்டுப் புள்ளியாகவும், இப்பன்னிரெண்டு புள்ளிகளை முழுமையாக கீழ்க்கண்ட வகையில் ஒதுக்கீடு செய்யவும் வகை செய்தது : பார்ப்பனர் அல்லாதவர் – 5; பார்ப்பனர் – 2; ஆங்கிலோ இந்தியர்களும் கிறித்துவர்களும் – 2; இஸ்லாமியர்கள் – 2; தலித்துகள் – 1. இந்த ஒதுக்கீடே 20.11.1947 வரை நடைமுறையில் இருந்தது. 21.11.1947 அன்று இவ்வொதுக்கீடு, அரசாணை எண். 3437, பொதுத்துறை மூலம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது.மாற்றியமைக்கப்பட்ட அரசாணையின்படி ஒதுக்கீட்டிற்கான மொத்தப் புள்ளிகள் 12இல் இருந்து 14 ஆக உயர்த்தப்பட்டன. அய்ந்து சமூகத்தினருக்கான ஒதுக்கீடு ஆறு சமூகத்தினருக்கென வரையறுக்கப்பட்டது : பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் – 6; பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் – 2; பார்ப்பனர்கள் – 2; தலித்துகள் – 2; ஆங்கிலோ இந்தியர்களும் கிறித்துவர்களும் – 1; இஸ்லாமியர்கள் – 1இவ்வாறு இருந்து வந்த 100 சதவிகித இடஒதுக்கீடு, 1951இல் செண்பகம் துரைராசன் வழக்கால் இல்லாமல் போனது.இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சாதியற்றவர்களாக இருந்த, இந்து வளையத்திற்குள் இல்லாத தலித்துகளை – இந்தியக் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட பட்டியல் சாதியினர் ஆணை (கூடஞு குஞிடஞுஞீதடூஞுஞீ இச்ண்tஞு Oணூஞீஞுணூ 1950), இடஒதுக்கீட்டு உரிமை பெற கட்டாயமாக இந்துக்களாகவே இருக்கும்படி செய்தது. குடியரசுத் தலைவரின் இவ்வாணைப்படி, இந்துக்களும் சீக்கியர்களுமே பட்டியல் சாதியினராகக் கருதப்படுவார்கள் என இறுதியாகவும் உறுதியாகவும் அரசு தீர்மானித்து விட்டது. இதன் காரணமாக, பாபாசாகேப் அம்பேத்கருடன் பவுத்தம் தழுவிய பத்து லட்சம் தலித்துகளும் இடஒதுக்கீட்டு உரிமையை இழந்தனர். சற்றேறக்குறைய 40 ஆண்டுகளாக பவுத்தம் தழுவிய தலித்துகளுக்கு, இடஒதுக்கீட்டு உரிமை இல்லாமல் போனது. வி.பி. சிங் பிரதமர் ஆன பின்னரே அவரது அரசு பவுத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமை வழங்கி, அம்பேத்கரின் மதமாற்றத்தைப் போற்றியது.இதற்கிடையே இந்து மதத்தைவிட்டு வெளியேறி பிற மதம் தழுவிய தலித்துகள் – மீண்டும் இந்து மதத்தைத் தழுவுகின்ற நிலையில், அவர்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. பிற மதத்திலிருந்து இந்து மதம் தழுவிய தலித்துகளின் இடஒதுக்கீட்டு உரிமை, உச்ச நீதிமன்றத்தால் பின்வரும் தீர்ப்புரைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது : சி.எம். ஆறுமுகம் எதிர் எஸ். ராஜகோபால் (19.12.1975); முதல்வர், குண்டூர் மருத்துவக் கல்லூரி எதிர் மோகன் ராவ் (6.4.1976)இந்திய அரசமைப்புச் சட்டப்படி (பிரிவு 25) மத உரிமை என்பது, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இந்தியாவில் எவரும், தாம் விரும்பும் எம்மதத்தையும் பின்பற்றலாம், வழிபடலாம், மாறலாம். ஆனால் இவ்வுரிமை மிகத் தந்திரமாக தலித்துகளுக்கு மட்டும் மறுக்கப்பட்டது; இன்றளவும் மறுக்கப்பட்டே வருகிறது. இந்தியாவில் மதம் தலித்துகளின் விருப்பம் சார்ந்த தேர்வாக இல்லாமல், அரசின் தேர்வாக மாற்றப்பட்டு விட்டது. ஆளும் பார்ப்பன, இந்து சாதி ஆட்சியாளர் கள், தலித்துகள் இந்து மதத்தில் இருந்தால் மட்டுமே நல உரிமைகள் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் என மாற்றிவிட்டனர். மதம் பொருளியல் மற்றும் வாழ்வியல் நிலைகளோடு பிணைக்கப்பட்டு விட்டது.இச்சதியின் தொடக்கம்தான் 1950. இந்திய அரசமைப்புச் சட்டப்படி (பிரிவு 341, 342) குடியரசுத் தலைவரே தலித் மற்றும் பழங்குடியின மக்களை வரையறுத்து அறிவிக்கத் தகுதி உடையவர். அதன் அடிப்படையில்தான் ராஜேந்திர பிரசாத், இந்து மதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டு சலுகை உண்டு என்று அறிவித்தார். இவர் ஓர் இந்துத்துவ சிந்தனையாளர் என்பது கவனிக்கத்தக்கது. சீக்கியர்கள் இதில் விதிவிலக்குப் பெற்றனர். சீக்கிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனில், அம்மதம் பாதிப்புக்குள்ளாகும் அந்நிலை உருவானால், இந்திய இறையாண்மையை எங்களால் ஏற்க முடியாது என்றனர் சீக்கியத் தலைவர்கள். இதனால் தலித் சீக்கியருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.டாக்டர் அம்பேத்கர் 1956இல் பவுத்தம் தழுவியபோது, தலித்துகள் பவுத்தத்திற்கு சென்றனர். அவருக்கு முன்னும் பின்னும் பல தலித்துகள் கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்களுக்கு சென்றனர். அவர்கள் அனைவருக்குமே இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. தலித்துகள் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்புவதாக இருந்தால், அவர்களுக்கு தாய் மதத்திலிருந்து பிரிந்து சென்றதற்கான தண்டனையாக மீண்டும் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்படாதிருந்தது. இத்தகைய முரண்பாடுமிக்க அரசு நிலைப்பாடு, தலித் அரசு ஊழியர்களிடையே ஒரு கண்ணாடிச் சுவரை உருவாக்கியிருந்தது. அது வன்மச் சுவரும் கூட. தலித்துகளில் இந்து மதத்தில் இருப்போர், மதம் மாறி பிறகு இந்து மதம் திரும்பிய தலித்துகளுக்கு எதிராக, பொய்ப் புகார்களை அரசுக்கு அனுப்பி இடைஞ்சல்களை செய்து கொண்டிருந்தனர். தலித் அல்லாதராலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்திய உணவுக் கழகத்தில் போலி சாதிச் சான்றிதழின் அடிப்படையில், ஆதிதிராவிடருக்கான இடஒதுக்கீட்டில் பணியமர்த்தப்பட்ட சுவீகரதாஸ் என்பவரின் சாதிச் சான்று மெய்த்தன்மை தொடர்பாக, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்த வழக்கில் இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்புரையில், ""கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஆதிதிராவிடர்கள் இந்து மதம் தழுவினால், அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது'' என்று சொல்லப்பட்டது (இத்தீர்ப்புரை சுவீகரதாசுக்கு மட்டுமே பொருந்தும்).ஆனால் இந்துத்துவ சிந்தனையாளர்கள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அலுவலர்களாகப் பணியாற்றுவதன் விளைவாக, "சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகம்' வழக்கில் கூறப்பட்ட தீர்ப்புரையை மேற்கோள் காட்டி, இந்து மதம் தழுவிய கிறித்துவ தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை 19.9.2000 அன்று வெளிவந்த அரசுக் கடிதம் எண். 81 (ஆதி திராவிடர் நலத்துறை) மூலம் மறுத்தது, பா.ஜ.க. கூட்டணியில் இருந்த தி.மு.க. அரசு. இதை ""தி.மு.க. அரசின் தலித் விரோத அரசாணை' என "தலித் முரசு' (மார்ச், 2001) கண்டித்தது.இவ்வரசுக் கடிதம் வெளியிடப்பட்ட நாள் முதல் 1.1.2009 வரை, சுமார் ஒன்பது ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான தலித் அலுவலர்கள் வேலையிழந்தனர். ஆதிதிராவிடர் சாதிச் சான்று இவர்களுக்கு மறுக்கப்பட்டது. இவர்களைப் பற்றி எந்த தலித் கட்சியும் தலைவர்களும் கவலைப்படவில்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு நடத்த மல்லுக்கட்டி டெல்லிக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் பறக்கும் அரசு அதிகாரிகளும், கட்சிகளும் தங்கள் சுட்டு விரலைக்கூட தலித்துகள் பலருடைய வாழ்வாதாரப் பிரச்சினையில் அசைக்கவில்லை. இதனை எதிர்த்து அரசுக்கு எழுதிய முறையீடுகளும் அரசின் குப்பைக் கூடைகளில் விழுந்து கிடந்தன! தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் அனைத்து ஆணைகளையும் கடிதங்களையும் நிர்மூலமாக்கும் ஜெயலலிதாகூட, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது முந்தைய கருணாநிதி அரசு பிறப்பித்த இவ்வாணையை சிரமேற்கொண்டு, நீதிபதி அசோக்குமாருக்கு எதிராக ஏவிவிட்டது, அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை.வெகுநாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த சுவீகரதாஸ் தீர்ப்புரை, கோலப்பன், இ.ஆ.ப. அவர்களால்தான் உயிர்ப்பிக்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராகப் பதவி வகித்திருந்த அவர், 19.9.2000 அன்று ஒரு விளக்கக் கடிதத்தை (எண்.81) இத்தீர்ப்பினை ஒட்டி வெளியிட்டார். 2001 – 2002இல் சிவகாமி, இ.ஆ.ப. இந்த அரசுக் கடிதத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக ஆணை வெளியிட்டார். ஆனால் அது அப்போதைய தலைமைச் செயலாளர் சங்கரின் மறு உத்தர வால் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்காக சிவகாமி துறை மாற்றம் செய்யப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. அரசால் பழிவாங்கப்பட்டார்.மதம் மாறும் அடிப்படை உரிமையை இந்தக் கடிதம் மறுக்கிறது. இந்து மதத்திலிருந்து பிற மதம் தழுவியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற இந்து வெறி சிந்தனையையும் இந்த அரசுக் கடிதம் உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த அரசுக் கடிதத்தைச் செல்லத்தக்கதன்று என அறிவிக்கக் கோரி இக்கட்டுரையாளர் 2002இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார் (WP No.14769/02). இப்பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், அரசுக் கடிதத்திற்கு இடைக்காலத் தடையை விதித்தது. நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கோரியது. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்ற தலித் மக்கள் மீண்டும் அம்மதத்துக்கே திரும்புவராயின், எவ்வகையில் அவர் இடஒதுக்கீட்டு உரிமையை துய்க்கத் தகுதியற்றவராவர் என நீதிமன்றம் அரசிடம் கேட்டது.அய்ந்து ஆண்டுகள் கழித்து 13.4.2007 அன்று உயர் நீதிமன்றம் அரசுக் கடிதத்தில் (எண். 81, நாள் : 19.9.2000) இந்து மதம் தழுவும் கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த தலித் பிள்ளைகளுக்கு, ஆதிதிராவிடர்களுக்குரிய சலுகையும் உரிமையும் இல்லை என்ற பகுதியை செல்லாது என அறிவித்ததுடன், இது தொடர்பாக புதிய விளக்கக் கடிதத்தினை மாவட்ட ஆட்சியர்களுக்கு – இத்தீர்ப்பாணை கிடைத்த இரண்டு மாதங்களுக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஒருவருடைய சாதி நிலை என்பது, அவர் சார்ந்திருக்கும் சாதிக் குழுவால் தீர்மானிக்கப்படுகிற ஒன்றாகும். இவ்விஷயத்தில் அரசோ, நீதிமன்றமோ செய்வதற்கு ஏதுமில்லை. சாதியை நிர்ணயிப்பது அச்சாதியைச் சார்ந்த அங்கத்தினர்களே எனக்கூறி, அரசு விளக்கக் கடிதத்தினை செல்லாது என அறிவித்ததோடு புதிய விளக்கக் கடிதத்தினை வெளியிடவும் அரசுக்கு உத்தரவிட்டது.இத்தீர்ப்புரை வழங்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 20 மாதங்கள் வரை, அரசு விளக்கக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்பதால், கட்டுரையாளர் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர அறிவிப்புக் கடிதம் அனுப்பினார். இவ்வழக்கிலிருந்து விலக எண்ணிய அரசு 2.1.2009 அன்று, ஓர் அரசாணையை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஒரு ஆதிதிராவிடர் பின்னாளில் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களுக்கு மாறினால் அவர்களும் இடஒதுக்கீட்டு உரிமையை அனுபவிக்கலாம் என்று கூறுகிறது.– எந்தவித சமூகப் பொறுப்பும், அக்கறையுமற்ற உயர் அரசு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஒரு கடிதம், ஆயிரக்கணக்கான தலித் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்திருக்கிறது. ஓர் அரசுக் கடிதத்தை செல்லாததாக்க, 9 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது! ஆனால் இடஒதுக்கீட்டுப் பயனாளிகளோ, தங்கள் சகோதரர்கள் படும் இன்னல்களைக் கண்டும் "சோற்றாலடித்த பிண்டங்க'ளாகவே இருந்தனர். இந்த 9 ஆண்டுகளில் மும்முறை ஆளுங்கட்சியினருடன் கூட்டணி வைத்திருந்த தலித் கட்சிகள், இக்கடிதத்தை திரும்பப் பெறக் கோரி அரசை இறுதிவரை நிர்பந்திக்கவே இல்லை. மாறாக, அடுத்த அரசியல் அதிகார வேட்டைக்கு அவை தயாராகி விட்டன. பாதிப்பிற்குள்ளாகும் தலித்துகளும் இழந்த உரிமைகளை மீட்க போராடுவதற்கு பதில், தேர்தல் புதைகுழிக்குள் விழ தயாராகி விட்டனர்
பாபாசாகேப் பேசுகிறார்
நாம் எல்லோரும் ஒரே மக்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்படுங்கள் அம்பேத்கர்
புதிய அரசமைப்பில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென சட்டமன்றத்தில் 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுதந்திரத் தொழிலாளர் கட்சி சார்பில், நான் வேட்பாளர்களைப் பரிந்துரை செய்திருக்கிறேன். நாம் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை ஏன் தொடங்க வேண்டும்? இந்தியாவில் ஏற்கனவே இந்திய தேசியக் காங்கிரஸ் என்ற வலிமை வாய்ந்த கட்சி இருக்கும்போது, புதிய கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற நியாயமான கேள்வியை பலர் கேட்கக்கூடும்.காங்கிரசின் முதன்மையான நோக்கம் சுதந்திரம் பெறுவது. நானும் எம் தோழர்களும்கூட சுதந்திரம் பெற விரும்புகிறோம். ஆனால், இது அத்தனை எளிதல்ல. ஓர் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுக்கும் வலிமையும் திறமையும் நமக்கு இல்லை எனில், நமது நோக்கத்தை நிறைவேற்ற – முன்பே முயன்று பலனளித்த செயல்முறைகளைப் பின்பற்றுவதே அறிவுடைமையாகும்.இந்தியா இன்றளவும் ஒரு தேசமாக உருவாகவில்லை. இந்நாடு 4,000 சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறது. இது போதாதென சாதியம், மாநிலப் பிரிவினை, மத வேறுபாடுகள், இன்னும் எண்ணிலடங்கா சச்சரவுகள், மோதல் மற்றும் முரண்பாடுகள் நாட்டைப் பிரித்து வைத்திருக்கின்றன. இத்தனைப் பிரிவினைகள் இருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த இந்தியாவை கற்பனை செய்வதே கடினம். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு என ஒரு பொது லட்சியம் இல்லை. இத்தகைய சூழலில், பிரிட்டிஷ் அரசு முடிவுக்கு வந்தால் இந்தியா ஒரு தேசம் என்ற நம்பிக்கை இல்லாதவர்களும், மதவெறியர்களும், சாதி உணர்வாளர்களும் – அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில், ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருப்பார்களா?உண்மையான சுதந்திரத்தைப் பெறுவதற்கான உண்மையான வலிமை இல்லையெனில், அத்தகைய சுதந்திரத்தைப் பற்றிய கனவுகளில் மூழ்குவதே ஆபத்தானது. இன்னொரு புறம் நமது நிலைக்கும் காங்கிரஸ் நிலைக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. அரசமைப்புச் சீர்திருத்தங்களை காங்கிரஸ் விரும்பவில்லை. அது, சீர்திருத் தங்களுக்கு எதிரானது. அவர்கள் சட்டமன்றங்களில் நுழைந்த பிறகு சீர்திருத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். இத்தகைய சீர்திருத்தங்கள் நமது எண்ணங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்புடையவை அல்ல. இருப்பினும், அவற்றை சரிசெய்து நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைவிட, சட்டமன்றங்களில் கூடுதலான உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக நாம் கருதுகிறோம்.இன்று காங்கிரஸ் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஒரு கலப்படமான மக்கள் கூட்டமாக இருக்கிறது. அதில், மிகவும் வறிய கூலித் தொழிலாளர் கள், ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர் முதல் நிலவுடைமையாளர்கள் வரை, கந்து வட்டிக்காரர்கள், வியாபாரிகள், நடுத்தர மக்கள், முதலாளிகள், சுரண்டல்காரர்கள் என எல்லா தரப்பு மக்களும் இருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், முரண்பட்ட நோக்கம் கொண்டவர்கள் அக்கட்சியில் திரண்டிருக்கின்றனர். ஏழை மக்களின் ரத்தத்தைச் சுவைப்பவர்கள், சுரண்டப்பட்ட மக்களின் நண்பர்களாக இருக்க முடியுமா? காங்கிரஸ் கட்சி கொழுத்த பணக்காரர்களின் மடியில் அமர்ந்திருக்கிறது. அவர்களால் எப்படி ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவி செய்ய முடியும்?காங்கிரஸ் கட்சி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி அல்ல. அது, முதலாளிகளின் பாதுகாவலன். உழைக்கும் மக்களின் நலன்களை யும், பொது மக்களின் நலன்களையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ அக்கட்சியால் முடியாது. இதற்கு மாறாக, நமது அமைப்பான சுதந்திரத் தொழிலாளர் கட்சி, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரசைவிட நாம் எளிதாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.நமது கட்சியின் முக்கிய நோக்கம், தீண்டத்தகாத மக்கள், உழைக்கும் மக்கள், ஏழை மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் போராடுவதே. நமது கொள்கை மற்றும் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமலேயே நம்மால் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.தீண்டத்தகாத மக்களின் பிரச்சினைகளை விட்டுவிட்டு, பிற மக்களுடன் இணைந்து பணிபுரிவதை நான் ஏன் தேர்வு செய்தேன் என்று என்னிடம் பலமுறை கேட்கப்பட்டது. இது தொடர்பாக நான் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். வரவிருக்கும் புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி 175 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 15 பேர் தீண்டத்தகாதவர்களாக இருப்பர். இந்த 15 பேர்களால் திறம்படச் செயலாற்றுவது கடினம்.ஏராளமான மக்களின் உதவி நமக்குத் தேவை. எனவே, நம்மைப் போன்ற கொள்கை கோட்பாடுகள் உள்ள பிற நண்பர்கள் நமக்குத் தேவை. தீண்டத்தகாதோர் அல்லாதோர் இடையிலும் நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நமக்கு நேர்மையாக உதவியிருக்கிறார்கள்; தங்களுடைய நலன்களைத் தியாகம் செய்து, நம்மோடு இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள். அதே போல நாமும் இத்தகையோரை நம்முடைய கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட வைக்க வேண்டும். எனவே, வீண் விவாதங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(3), பக்கம் 391
Monday, June 8, 2009
தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்கோ.ரகுபதி
வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை அடைவதற்கு அவர்கள் முற்படும் பொழுது, அவ்வுரி மையை புறக்கணிப்பதற்கு தலித்தல் லாத சாதிகள் ஒன்றிணைவதில் சாதியே அடிப்படையான முரண்பாடாக செயல் படுவதைக் காணமுடியும். இம்முரண் பாடு தலித்துகளை சமூகப் பொருளாதார தளத்தில் விலக்குவதில் தொடங்கி அவர் களின் சொத்துக்களை சூறையாடுதல், வீடுகளை எரித்தல், பாலியல் வன் புணர்ச்சி, படுகொலை செய்தல் என்ற கட்டத்தை அடைந்து இறுதியில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுகின்ற நிலையில் முடிவடைகிறது. ஆனால் தலித்துகள் பொருளாதாரத்தில் மட்டு மின்றி எண்ணிக்கையிலும் சாதி இந்துக் களை எதிர்த்து தாக்கும் அளவிற்கு வலிமையுடன் இருக்கின்ற பகுதி களில் தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக் கும் இடையிலான முரண்பாடு உக்கிர மான மோதல் வடிவத்திற்கு சென்றுவிடு கிறது. அம்பேத்கரின் நூற்றாண்டு விழா வினையட்டி தலித்துகளின் எழுச்சி, வேலையின்மை, இடஒதுக்கீட்டின் விளைவினால் முன்னேற்றமடையும் தலித்துகளின் மீதான வெறுப்பு போன் றவை தலித்துகளுக்கும் தலித்தல்லாதோ ருக்கும் இடையிலான மோதலுக்கான காரணங்களாக கூறப்பட்டிருக்கின்றன; இவற்றினை புறக்கணிக்க இயலாது அவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இருப்பினும், கிராம அளவில் நுணுக்க மான ஆய்வினை மேற்கொள்கிற பொழுது பன்னெடுங்காலமாய் தலித்து களை சமூகப்-பொருளாதார பண்பாட்டு மற்றும் அரசியல் செயல்பாட்டில் பங் கேற்பதிலிருந்து திட்டமிட்டே விலக்கி வைத்தலும், இவற்றில் முழுமையாகப் பங்கேற்பதற்கு அல்லது அவற்றினை அனுபவிப்பதற்கு தலித்துகள் முயற்சிக் கிற பொழுது அதனையும் சாதி இந்துக் கள் தடுப்பதனால் மோதல் நடைபெற்றி ருப்பதனைக் காணமுடிகிறது. இங்கு நுணுக்கமான ஆய்வினை மேற் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை, மாறாக தலித்துகளுக்கு எதிரான சாதி இந்துக்களின் கொடூர மான வன்முறையில் இந்துத்துவ அமைப்புகள் பெரும் பங்காற்றி இருப்பினும், அது குறித்த விவாதம் சமூக அறிவியல் புலத்தில் இல்லாதிருக்கிறது; மேலும், தலித்து களுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையேயான மோதல் சாதிகளுக்கிடையேயானது என்ற நோக்கு மேலோங்கி இருக்கிறது. எனவே, தலித்துகள் மீதான வன்முறையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கினை எடுத்துரைப்பதற்கு இக்கட்டுரை முயற்சிக்கிறது.தேவர், தேவேந்திரர்: இந்து, இசுலாம்சமூகப்-பொருளாதார பண்பாட்டு மற்றும் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்பதிலிருந்து தலித்துகளை திட்ட மிட்டே விலக்கி வைப்பதில் தென் மாவட்டங்களில் முன்னணியாய் இருந்து வருகின்ற சாதிகளுள் தேவர்களும் ஒரு பிரிவினர். இவர்களோடு கடந்த நூற்றாண்டில் தீண்டாமை உட்பட இதர சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்ற சாதியான நாடார் முதற்கொண்டு பார்ப்பனர் வரை இணைந்திருப்பினும் வெளிப்படையாக பேசப்பட்டிருப்பது தேவர் சாதியினரை குறித்து மட்டுமே. இப்பிரிவினர் தலித்துகளுக்கு எதிரான கொடூர வன்முறையில் முன்னணியாக ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை வெளி உலகம் அடையாளம் கண்டுகொண்டது. ஆனால் அவர்களுக் கும் பல்வேறு இந்துத்துவ அமைப்பு களுக்கும் உள்ள தொடர்பு குறித்தோ அல்லது தலித்துகளுக்கு எதிரான வன் முறையில் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடு குறித்தோ அதிகம் பேசப்பட்டிருக்கவில்லை.காலனிய ஆட்சி உருவாக்கிய குற்றப் பரம்பரை சட்டத்தினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாயிருந்த சாதிகளில் ஒன்றான தேவர்கள் இந்துமதத் தீண்டாமைக் கொடுமையையும் ஏற்றத்தாழ் வினையும் எதிர்த்து செயல்பட்டுவந்த சமூக இயக்கங்க ளோடு தங்களை இணைத்துக் கொள்ளாமல் அதிலிருந்து விலகியே இருந்தனர். ஆனால் சிந்தனை அளவிலும் செயல ளவிலும் பெரும்பான்மையான தேவர் சாதியினர் இந்து மதத்தின் கருத்தியலோடும் அதனை செயல்படுத்துவதிலும் ஒன்றிணைந்திருந்தனர். இதற்கான உதாரணமாக பின்வரும் வரலாற்று நிகழ்வினை குறிப்பிடலாம்: 1930களின் தொடக் கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவர்கள் தலித்துகள் கடைபிடிக்க வேண்டுமென அறிவித்த பண் பாட்டுக் கட்டளைகளானது 1928ம் ஆண்டு மத்திய இந்தியா வில் இந்தூர் மாவட்டத்தில் பார்ப்பனர்கள், ராஜ் புத்திரர்கள் முதலிய சாதி இந்துக்கள் தலித்துகள் மீது விதித்த விதி களோடு ஒத்து இருக்கிறது.2 இது தேவர் சாதியினர் கருத்தியல் மற்றும் செயல்பாட்டு அளவில் பார்ப்பனர் மற்றும் மேல்சாதி இந்துக்களின் இந்துப்பண்பாட்டிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக் கிறது. குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்களுள் ஒருவரும் குறிப்பிடத்தக்க அளவு தேவர் சாதியினரின் ஆதரவினைப் பெற்றிருந்தவருமான முத்து ராமலிங்கத் தேவர் தன்னை இந்து மதத்தோடே ஐக்கியப் படுத்தியிருந்தார். மேலும், முதுகுளத்தூர் அருகே அபிராம் கிராமத்தில் 1946ல் அமைக்கப்பட்ட இந்து மகா சபையின் தலைவராகவும் இருந்தார்.3 இந்துத்துவத்தின் முன்னோடி யான கோல்வால்கரை அழைத்து பொன்முடி பரிசளித்தார்.4 இந்து மகா சபைத் தலைவர் தேஷ் பாண்டே, இந்து மகா சபையின் செயல்பாடுகளை பரீசிலனை செய்யவும், தேர்த லில் இந்து மகா சபைக்கு தமிழகத்தின் தலைமையினை முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக்கொள்ளுமாறும் தமிழகத்தில் கணபதி என்பவர் மூலம் கேட்டுக்கொண்டார். முத்துராமலிங்கத் தேவர் இக்கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் அவர் எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் இந்து மகா சபாவிற்கு ஆதரவாக செயல்படு வதாக உறுதியளித்தார்.5 இந்த நிகழ்வுகள், தேவர்களின் ஒப்பற்றத் தலைவரும் அம்மக்களும் இந்துத்துவத்தோடு அணிசேர்ந்திருந்தனர் என்று முடிவு செய்வதற்கே அழைத்துச் செல்கிறது.சாதிய அமைப்பில் தீண்டாமை உட்பட பல்வேறு ஒடுக்கு முறைக்கு உள்ளாகின்ற தலித்துகளில் பள்ளர் எனப்படும் தேவேந்திரர்களும் அடக்கம். காலனி ஆட்சிக் காலத்தில் சாதிய அமைப்புகள் மூலம் தமது சமூக நிலையினை முன் னேற்றிக் கொள்வதற்கு முயற்சித்த இவர்கள் சாதிய கட்ட மைப்பில் தாக்குதலை ஏற்படுத்தும் மதமாற்றத்தையும் விடுதலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பிற்கு முன்பிருந்தே தேவேந்திரர்கள் மதமாறத் தொடங்கினர். இந்து மயமாகி விட்ட கிறிஸ்துவத்தில் சமூக விடுதலை இல்லை என்பதை புரிந்து கொண்ட தலித்துகள் கிறிஸ்துவத்திற்கு மாற்றாக இசுலாம் மதத்தை தேர்வு செய்திருக்கின்றனர், 1940களில் இம்மாற்றம் தேவேந்திரர்களிடத்தில் நிகழ்ந்திருப்பதனைக் காணமுடிகிறது.6 திருநெல்வேலி அருகே உள்ள சீதைக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்ததால் இசுலாம் மதத்தினை 1944ம் ஆண்டு தழுவினர்.7 1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சில கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் சுமார் 2000பேர் இசுலாம் மதத்திற்கு மாறியுள்ளனர். 1947ம் ஆண்டு ராமநாதபுரத்தில் தேவேந்திரர் ஒருவரை கோயிலி னுள் வழிபடுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் அவர் இசுலாம் மதத்தைத் தழுவினார்.எவ்வித அமைப்புகளின் துணையின்றியும் நடைபெற்ற தேவேந்திரர் களின் இசுலாம் மதமாற்றத்திற்கு எதிரான வன்முறையினை இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், சீதைக்குறிச்சி தேவேந்திரர்களின் இசுலாம் மதமாற்ற நிகழ்வினையட்டி திருநெல்வேலி யில் முகாம் நடத்தியது.8 இந்து மகா சபையோ பொய்ப் பிரச்சாரம் செய்வ தற்கு ஒருவருக்கு பணம் கொடுத்து திருநெல்வேலிக்கு அனுப்பியது. ஆரிய சமாஜம் தலித்துகளை மீண்டும் இந்து மதத்திற்குள் இழுப்பதற்கு முயற்சித்து தோல்வி அடைந்துவிட்ட தால் தேவர் சாதியினரைக் கொண்டு தேவேந்திரர்களைத் தாக்கியது.9 இதனால் அங்கு பதற்றம் உருவாகியது, தாக்குதலும் எதிர்த்தாக்குதலும் நிகழ்ந் திருப்பினும் கொலைகள் நிகழ்ந்திருக்கவில்லை. இச் சூழலில் சென்னையில் இந்து மிஷன் இயக்கம் கோபதி நாராயணசாமி செட்டி தலைமையில் நிறுவப்பட்டது. தலித்துகள் மதம் மாறுவதைத் தடுப்பதும், தீண்டாமை யினை ஒழிப்பதும் இந்த இயக்கத்தின் இலக்கு என அறிவித் தது,10 ஆனால் தீண்டாமையை ஒழிப்பதற்கு அவ்வியக்கம் என்ன முயற்சி எடுத்துக்கொண்டது என்பது தெரிய வில்லை. இதிலிருந்து தலித்துகளின் சமூக விடுதலைக்கு எதிரான செயல்பாட்டினை இந்துத்துவ அமைப்புகள் தேவர் சாதியினர் மூலம் காலனி ஆட்சிக்காலத்திலேயே செயல்படுத்தியிருப்பது தெளிவு. ஆதலால் தேவர்களையும் தேவேந்திரர்களையும் இவ்வாறும் புரிந்துகொள்ள வேண் டும்: மத அரசியலில் முரண்பட்டிருக்கும் இந்துத்துவத் தோடு தேவர்களும் இசுலாமோடு தேவேந்திரர்களும் இணைந்திருந்தனர். சமூக விடுதலையை இலக்காகக் கொண்டிருக்கும் தலித்துகளின் இசுலாம் மதமாற்றம் இந்துத் துவத்தோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் தேவர் சாதியினருக்கு விரும்பத்தக்க ஒன்றல்ல; அது வெறுக்கத்தக்கதே. தேவர்சாதியினர் மட்டுமின்றி, காலனிய ஆட்சிக்குப் பின்னர் இந்துக்களே இந்திய ஆளும் வர்க்கமாக மாறியதால் அவ் வர்க்கத்திற்கும் தலித்துகளின் இசுலாம் மதமாற்றம் விரும்பத்தகாததே. பொது வாகவே, இந்துமதக் கருத்தியல்களையும் அதுசார்ந்த மதிப்பீடுகளையுமே மிகுதி யாக பரப்புரைக்கும் பணியை காட்சி மற்றும் அச்சு ஊடகங் கள் செய்து வருகின்ற பொழுது இசுலாத்தை தழுவுகிற மக்கள்மீது கசப்புணர்வு ஏற்படுவது இயல்பானதாகி விடு கிறது.11 எனவே சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு தலித்துகள் எடுத்துக் கொண்டி ருந்த இசுலாம் மதமாற்றத்திற்கு ஆதாரவான சூழல் நிலவி யிருக்கவில்லை என்ற பின்புலத்தோடு தலித்துகள் மீதான ஒடுக்குமுறையை காண்போம்.இந்துக்களை உலுக்கிய மதமாற்றம் தமிழகத்தில் காலூன்ற முயற்சித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இசுலாம் எதிர்ப்பு அரசியலையே முன் னெடுத்தது; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ‘அரிஜனங்கள்’ இசுலாமிய அமைப்பின் தூண்டுதலால் மதம் மாறத் திட்டமிட்டிருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் 1980களின் தொடக்கத்தில் பிரச்சாரம் செய்தது.12 இதே காலக்கட்டத்தில் தீண்டாமைக் கொடுமை உட்பட பல்வேறு ஒடுக்கு முறைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த தென்காசி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் தேவேந்திரர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்தனர். 1981ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் சுமார் 1500 தேவேந்தி ரர்கள்13 இசுலாம் மதத்திற்கு மாறிய நிகழ்வு இந்திய அளவில் இந்துத்துவவாதிகளை உலுக்கியது, அவர்களில் பலரும் மீனாட்சிபுரத்திற்கு படையெடுத்தனர். ஆர்.எஸ். எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் ஒடுக்குமுறையை கண்டிப்பதற்கு பதிலாக இசுலாமியர்களின் நிர்ப்பந்தத்தால் தலித்துகள் மதம் மாற்றப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்தது.14 விசுவ இந்து பரிஷத் ‘மறுமத மாற்றம்’ என்ற முழக்கத்தினை முன்வைத்து மீனாட்சிபுரம் அருகே உள்ள பண்பொழில் என்ற ஊரைச் சேர்ந்த பார்ப்பன நிலக் கிழாரின் உதவியுடன் மீனாட்சிபுரத்திற்குள் நுழைந்தது, ஆரிய சமாஜமும் இதே செயலைச் செய்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பேய், சுப்பிரமணிய சுவாமி (ஜனதா தள்), ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் ரெங்கசாமித் தேவர் உட்பட பலர் “அரபு நாடுகளின் பணத்தின் மூலம் மத மாற்றம் செய்யப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்தனர்”. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் மற்றும் சாதி இந்துக்களை ஒருங்கிணைத்து நடத்திய கூட்டத்தில் சாதி மோதல் மற்றும் ‘ஹரிஜன்’ இசுலாத்திற்கு மதம் மாறுவது குறித்து பேசப் பட்டது. பின்னர் அவர்கள் அங்கே ‘இந்து முன்னணி’ என்கிற அமைப்பினை ராம்கோபாலன் தலைமையில் உரு வாக்கினர். 15 மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்குப் பின்னர் அப் பகுதியில் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். செயல்படத் தொடங்கியது.16 அவ்வியக்கம் சாதி இந்துக்கள் தலித்துகள் மீது கடைபிடித்து வரும் தீண்டாமை மற்றும் ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கு மாறாக தலித்துகள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிராக தேவர் சாதியினர் மூலம் இடைஞ்சல்கள் செய்யத் தொடங்கியது.இச்சூழலில் புளியங்குடி அருகே ஒரு இடத்தில் 1982 மார்ச் மாதத்தில் தனியார் பேருந்து ஒன்று தேவேந்திரர் சாதி யினைச் சேர்ந்த ஒருவரின் மாட்டு வண்டி மீது மோதியதில் மாட்டுக் கொம்பு ஒடிந்துவிட்டது. அத்தனியார் பேருந்து ஒதுங்கி செல்வதற்கு இடமிருந்தும் மாட்டு வண்டியில் மோதியதால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி உரிமை யாளரும் அவரது மகனும் பேருந்து ஓட்டுநரை தாக்கினர். பேருந்து ஓட்டுநர் தேவர் சாதியினைச் சேர்ந்தவர் என்பதால் தேவர்கள் தேவேந்திரர்களைத் தாக்கினர், பதிலுக்கு தேவேந் திரர்களும் தேவர்களைத் தாக்கினர். பின்னர் தேவர்களோடு காவல் துறையினரும் இணைந்துகொண்டு தேவேந்திரர் களை தாக்கினர், அவர்களின் நெல் வயல், வாழைத்தோப்பு போன்ற சொத்துக்களை அழித்தனர். காவல்துறை பாதிக்கப் பட்ட தேவேந்திரர்களையே கைதுசெய்து சிறையில் அடைத்தது. அரசு அதிகாரிகளிடமும் அரசியல் கட்சி தலைவர்களிடமும் தேவேந்திரர்கள் முறையிட்டும் எந்த வித பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படாததால் வெறுப்புற்ற தேவேந்திரர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கட்சி கொடிகளை அப்புறப்படுத்திவிட்டு தங்கள் சாதிச் சங்க கொடியினை ஏற்றினர். இச்சூழலில் அப்பகுதியினைச் சேர்ந்த முஸ்லீம்களும் தேவேந்திரர்களும் இணைந்து சகோதர சமத்துவ சங்கத்தினை ஆரம்பித்தனர். அரசு சலுகை கள் பெறுவது, சமுக பாதுகாப்புக்கு ஒத்துழைப்பது, வெளி யூர்களிலிருந்து இப்பகுதிக்கு அரசு பணிகளுக்கு வருகின்ற தலித் மற்றும் இசுலாமியர்களுக்கு உதவி செய்வது போன்றவையே சகோதர சமத்துவ சங்கத்தின் நோக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.17 இச்சங்கம் சார்பில் அம்பேத்கர் மற்றும் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா 8 ஜூன் 1982 அன்று கடையநல்லுரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவர், நாடார், வெள்ளா ளர், கோனார் சாதியைச் சேர்ந்தோர், ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் இணைந்து புளியங்குடி செல்லையா கட்டிடத்தில் கூட்டமொன்று நடத்தினர்; அதில் சகோதர சமத்துவ சங்கத்தின் விழா அன்றே தாங்களும் விழா நடத்துவது, கட்சி வேறுபாடின்றி சாதி இந்துக்கள் ஒன்றிணைவது என்று முடிவு செய்தனர்.இந்துத்துவத்தோடு கைகோர்த்திருந்த மேல் மற்றும் இடை நிலைச் சாதிகள், காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சியினர் 8 ஜூன் 1982 அன்று பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். புளியங்குடி நகர் முழுவதும் மஞ்சள் நிறத்திலான பட்டுத் துணியில் ஓம் என்று எழுதி பறக்க விட்டிருந்தனர். மேல் மற்றும் இடைநிலைச் சாதியினர் சுமார் 7000 பேர் ஊர்வலத் தில் பங்கேற்றிருந்தனர்; பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் முசுலீம்கள் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப் படத்தக்கது. ஊர்வலத்தில் அரிவாள், கம்பு மற்றும் வெடி குண்டுகள் வைத்திருந்த அவர்கள் ‘ஆர்.எஸ்.எஸ் வாழ்க’, ‘இந்து சாம்ராஜ்யம் வாழ்க’ ‘பண்ணிக் கறி தின்னும் பள்ளன் ஒழிக’, என்று கூச்சலிட்டனர். இச்சமயத்தில் சகோதர சமத்துவ சங்கத்தின் விழாவில் பங்கேற்பதற்காக கடைய நல்லுர் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த தேவேந்திரர் கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஞானரதம் தங்களின் தெரு வுக்குள் வருகிற செய்தியை அறிந்து ‘நாங்கள் எங்கள் சங்க விழாவுக்குச் செல்ல இருப்பதால் ரதம் எங்கள் தெருவிற்குள் வரவேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டனர். ஞானரதம் நிகழ்ச்சி தொடங்கிய பின்னரே தலித்துகள் மீதான வன்முறையும் தொடங்கப்பட்டது.18 ஞான ரதம் தங்கள் தெருவிற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தி னால் ஆத்திரமுற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடைய நல்லுர் போகும் தேவேந்திரர்களையும் முசுலீம்களையும் சொக்கம்பட்டி முக்கிய சாலையில் உள்ள ஆதிக்கச்சாதியின ரின் வீட்டு மாடிகளில் இருந்து கொண்டு நாட்டு வெடி கொண்டு, சோடா பாட்டில், கற்கள், காய்ச்சிய எண்ணை ஆகியவற்றால் தாக்கியதில் 15 தலித்துகளும் ஒரு இசுலா மியரும் படுகாயமடைந்தனர். அடுத்த நாள் 09 ஜூன் 1982 சொக்கம்பட்டி வழியாக வந்து செல்கின்ற பேருந்துகளை நிறுத்தி ‘’பஸ்ஸில் யாராவது பள்ளன், பறையன், துலுக்கன் இருந்தால் கீழே இறங்கு’’ என்று கூச்சலிட்டனர்; தலித் மற்றும் இசுலாமியரை தேவர்கள் தாக்கினர். 10 ஜூன் 1982 தேவர் சாதியைச் சேர்ந்த சுமார் 1500 பேர் அய்யாபுரம் மற்றும் வெள்ளையக்கவுண்டன்பட்டி தேவேந்திரர்களை தாக்கி வீடுகளுக்கு தீ வைத்தனர், பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. மேலும் காவல் துறையினரும் தேவேந்திரர்களை தாக்கினர். 15வயதுடைய தேவேந்திரர் சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் பலியானான்; ஆனால் வன் முறை கும்பல் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்க வில்லை. காவல் துறையினர் தேவேந்திரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு செயல்படவிடாமல் தடுத்தனர் ஆனால் வன்முறையாளர்களை ஒன்றும் செய்யவில்லை, அவர்கள் தங்களின் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர். அய்யாபுரத்து தேவேந்திரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தப்பித்து ஓடிய பொழுது ஓடஓட வன் முறைக் கும்பல் வெட்டியதில் சந்திரன், ஜெயசீலன், யோவான், மாசிலாமணி, மாடத்தியம்மாள் ஆகிய தேவேந் திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் மிதிக்கப்பட்டார், சில பெண்களின் நகைகள் காது களோடு சேர்த்து வெட்டி எடுக்கப்பட்டது, 6 வயது குழந்தை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப் பட்டது.19 ஒரு பெண்ணின் கைக்குழந்தையை கிணற்றில் தூக்கி எறிந்தனர். ஆண்டு முழுவதற்கும் சேமித்து வைத்தி ருந்த கம்பு, கேழ் வரகு, சோளம் போன்ற உணவு தானியங் களை எரித்தனர். மேலும் அடுத்தநாள் புளியங்குடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் தேவேந்திரர்கள் மேற்கூறப் பட்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்; தேவேந்திரர் மற்றும் முசுலீம்களின் சொத்துக்கள் எரித்துச் சூறையாடப்பட்டது. இக்கொடூர அடக்குமுறைகள் பெரும் பாலும் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்தது.20 தேவேந்திரர் மற்றும் முசுலீம் மக்களின் மீதான இவ்வொடுக்குமுறைக்கு காரணம் அரபுநாட்டு பணம், மதமாற்றுவதற்கு விரும்பும் முசுலீம் மக்களின் செயல் என இந்துத்துவ அமைப்புகளாலும், பார்ப்பனரால்லாத மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளின் தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். துக்ளக் இதழானது, அரிஜனங்கள் இப்பொழு தெல்லாம் பிற சமுகத்தினரை தரக் குறைவாக பேசி வருகின்றனர், இசுலாமியரோடு சேர்ந்து கொண்டு இந்துக் களின் நலன்களுக்கு உலைவைக்கப் பார்க்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்தது.21புளியங்குடி வன்முறைக்கு நான்குநாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் தேவேந்திரர்கள் தாக்கப்பட்டனர். 1982ம் ஆண்டு ஜூன் மாதம் 4ந்தேதி திருநெல்வேலியில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமையாத் தேவர், சுடலைக்கண்ணுத் தேவர் ஆகியோரின் ஆதரவாளர்கள் தேவேந்திரர்களைத் தாக்கினர். இதற்கு நீதி கேட்பதற்காக ராமையாத் தேவரின் வீட்டுக்கு தேவேந்திரர்கள் சென்ற பொழுது ராமையாத் தேவரும், அவரது ஆதரவாளர்களும் வெடிகுண்டுகளையும், சோடா பாட்டில்களையும் வீசி தேவேந்திரர்களைத் தாக்கியதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். அன்றிரவு சுமார் 11மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தேவர்கள் குருந்துடையார்புரத்தில் நுழைந்தனர். ஒவ்வொரு தேவேந்திரர்களின் வீடுகளின் கதவுகள் தட்டப் பட்டது. கதவினைத் தட்டியவர்கள் காக்கிச் சீருடை அணிந் திருந்த காரணத்தினால் தேவேந்திரர்கள் காவல்துறையினர் என்று கருதி கதவுகளைத் திறந்த பொழுது தேவேந்திரர்கள் தாக்கப்பட்டனர். திருநெல்வேலியில் உள்ள கொக்கிரக் குளம், ஜோதிபுரம் பகுதிகளில் உள்ள தேவேந்திரர்களையும் தாக்குவதற்கு தேவர்கள் முயற்சித்தனர். காக்கிச் சீருடை அணிந்து வந்து தங்களை தாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப் பினைச் சேர்ந்த தேவர்களே என்று தாமதமாகவே தேவேந் திரர்கள் அறிந்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த தேவர் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று வரு வதும், அது தேவேந்திரர்களை தாக்குவதற்கான தயாரிப்புப் பணியே என்ற செய்தியும் நிலவியது.22 இச்செய்தியினை மேற்குறிப்பிட்ட தாக்குதல்களோடு இணைத்து நோக்கும் பொழுது உண்மை என்றே படுகிறது. இதற்குப் பின்னர் இந்துத்துவத்தோடு இணைத்திருந்த முத்துராமலிங்கத் தேவரின் சிலை தென்மாவட்டத்தில் பல இடங்களிலும் நிறுவப்பட்டது; இது தேவர்களை இந்துத்துவத்தோடு மேலும் ஐக்கியப்படுத்துகிற செயலே தவிர வேறல்ல. 1980 களின் இறுதியில் குறிப்பாக 1989ம் ஆண்டு போடி, தேவாரம் ஆகிய பகுதிகளில் தேவேந்திரர் மீதான ஒடுக்கு முறையில் இந்து முன்னணியும் இணைந்திருந்தது இவ் விடத்தில் நினைவு கூறத்தக்கது.23 1990களில் தான் தேவேந் திரர்கள் தேவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந் தெழுந்து பதில் தாக்குதல் தொடுத்தனர். 1980களில் தேவேந் திரர்கள் மீது இந்துத்துவ அமைப்புகளின் பின்னணியில் நிகழ்த்தப் பெற்ற வன்முறைக்கும் 1990களில் நிகழ்த்தப் பட்ட வன்முறைக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகி றது. 1995 தேவர்களின் வன்முறையும் அதற்கெதிரான தேவேந்திரர்களின் எதிர்தாக்குதலும் தொடங்கிய இடம் வீரசிகாமணி, இவ்வூர் 1981ல் இசுலாம் மதத்திற்கு மாறிய மீனாட்சிபுரத்திற்கு மிக அருகாமையிலேயே உள்ளது. எனவே, 1995 வன்முறையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கு இல்லை என்று கூறுவதற்கில்லை.முடிவுரைஇந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்துக் கொண்டாலும்கூட ஆளும் வர்க்கம், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பிரச்சாரம் இந்துத்துவத்தையே அடிப்படை யாகக் கொண்டிருக்கிறது; இசுலாம் மீது ஒருவித வெறுப் பையும் கொண்டிருக்கிறது. இது இசுலாம் மீதான வெறுப்பு மட்டும் அல்ல அதில் தலித் விடுதலையை வெறுக்கும் போக்கும் ஆழப் பொதிந்திருக்கிறது. தலித் மற்றும் இசுலா மியர்களின் முன்னேற்றத்தை வெறுப்பதில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், காங்கிரஸ், திராவிடக் கட்சிகள் என்ற பாரபட்சம் இன்றியும், பார்ப்பனர், சாதி இந்துக்கள், இடை நிலைச் சாதிகள் அனைவரும் எவ்வித வேறுபாடு இன்றியும் ஒன்றிணைந்திருக்கின்றனர். இதிலிருந்து, இந்து-சாதி மத வெறி அமைப்புகளுக்கும், விடுதலை இயக்க மரபினர், பார்ப்பனர் எதிர்ப்பின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சி களுக்கும் இடையே வேற்றுமை அரிதே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.தலித்துகளின் முன்னேற்றத்தினை வெறுக்கின்ற, அவர்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கின்ற சாமானிய இந்துக்களுக்கும், தலித்துகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தலித்துகளின் சமூக விடுதலைக்கான ஆயுதமான மதமாற்றத்திற்கு எதிராக வன்முறையை செயல்படுத்தும் இந்துத்துவவாதிகளுக்கும் உணர்வு நிலையில் ஒற்றுமையே நிலவுகிறது. தங்களை அடிப்படையில் இந்துக்களாக உணர்ந்து கொண்டு இந்து மதத்தின் கருத்தியல்களைப் பின்பற்றிக் கொண்டு இந்து மதத்தோடு தொடர்பற்ற நாட்டுப்புற கோயில்களில் புனிதம் தீட்டு என்ற கருத்தியல்களை செயல்படுத்தி அக்கோயில் களில் வழிபடுவதற்கு தலித்துகளுக்கு அனுமதி மறுத்து வருகின்ற பார்ப்பனரல்லாத சாதி இந்துக்கள் மற்றும் இடை நிலைச் சாதிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. தன்னை இந்துவாக உணர்ந்து கொண்டு இந்து மரபுப்படி தலித்துகள் இவ்வாறுதான் வாழவேண்டும், தலித்துகளுக்கு வரையறுக்கப்பட்டிருக் கிற எல்லைக் கோட்டினை மீறுவது தவறு என்று கூறுகின்ற சாமானிய இந்து உளவியல் வன்முறையை செயல்படுத்து கின்றனர், இந்துத்துவவாதிகளோ உடலியல் மற்றும் உளவியல் வன்முறையை தலித்துகள் மீது ஏவுகின்றனர். இங்கு வன்முறையை செயல்படுத்துவதில் சிறிய வேறு பாடு மட்டுமே இருக்கிறது, உண்மையில் சாமானிய இந்துக் களும் இந்துத்துவவாதிகளும் அடிப்படையில் தலித் விடுதலைக்கு எதிரான ‘எதிர்ப்புரட்சி’ பிரிவினரே. தென்மாவட்டத்தில் தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறை யும் அதற்கெதிரான அவர்களின் பதில் தாக்குதலும் தேவர் மற்றும் தேவேந்திரர்களுக்கு இடையிலான மோதலாகவே பார்க்கப்படுகிறது. இதில் தேவர் சாதியினர் ‘எதிர்ப் புரட்சி யின்’ முன்னணிப்படையே. எனவே தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையிலான மோதல் சாதிய மோதல் மட்டுமல்ல அது இந்துமதம் சார்ந்த ஏற்றத்தாழ் வினை நிலைநிறுத்தும் சாதியினருக்கும், சமத்துவத்தை அடைவதற்கு மதமாற்றம் உட்பட பல்வேறு போராட்டங் களை வலியுறுத்துவோருக்கும் இடையிலான மோதலாகும். இத்தன்மை தென்மாவட்டச் சாதிய மோதலில் அடிப்படையாய் இருந்திருப்பதனைக் காணமுடியும்.மேற்கோள்கள்:1.அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 16, (புது டில்லி: இந்திய அரசு, 1999), ப. 275.2.அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 10 (புதுடில்லி: இந்திய அரசு, 1993), ப. 55-6.3.ஆண்டியப்பத் தேவர், பசும்பொன் தெய்வீக திருமகனார் தேவர் வீர வரலாறு (மதுரை: தேவர் முரசு, 1993), ப. 82-3.4.தமிழவேள், சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் (புதுவை: பண்பாட்டு ஆய்வகம், 2003), ப. ஜ்வீஜ்.5.Fortnightly Report, 1957, Tamil Nadu State Archives (Hereafter TNSA), Chennai.6.Sandberg, Emma. ‘Being a Dalit Woman in Seethai kurichy: Religious Affiliations and Social Situations’.In Lars Berge and Gunnel Cederlof,eds., Political Visions and Social Realities in Contemporary South India. (Sweden: Hogskolan Dalarna, 2003), pp. 27-8.7.Ibid.8.Fortnightly Report, 1944, TNSA, Chennai.9.கா.அ.மணிக்குமார்,நவீன தமிழகத்தில் சமூக வன்முறைகள், மனோரமா ஆண்டு புத்தகம், 2002, ப. 265.10.Fortnightly Report, 1945, p.110, TNSA, Chennai.11.A.R. Desai,‘Caste and Communal Violence in Post-Partition Indian Union’, in Asghar Ali Engineer (Ed.), Communal Riots in Post-Independence India (Hyderabad, 1984), pp.12-20.12.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? (சென்னை: புதிய ஜனநாயகம், 2004), ப. 18-9.13.ஆ. சிவசுப்பிரமணியன், எந்தப் பாதை? (சென்னை: மக்கள் வெளியீடு, 2000), ப. 144-7.14. Organizer (June: 1981), p.6.15. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ப. 26-7.16.Editorial, Economic and Political Weekly, 1982, p.1006.17.மருதமலர், ஜூன், 1982, ப. 8.18.Editorial, Economic and Political Weekly, 1982, p.1006.19.மருதமலர், (ஜூன்: 1982).20.இலக்கிய வெளிவட்டம், (அக்டோபர்: 1982), ப. 23-8.21.துக்ளக், (ஆகஸ்ட்:1982).22.மருதமலர், (ஜூன்: 1982).23.அய். பால்ராஜ், ஞா.தேவராஜ், சாதிக் கொடுமைகளின் சாட்சி (சென்னை: இந்திய மக்கள் முன்னணி, 1990).குறிப்பு: அம்பேத்கர் படிப்பு வட்டம் மதுரையில் (ஏப்ரல், 2005) ஏற்பாடு செய்திருந்த தலித் வரலாற்று மாதத்தில் இக்கட்டுரை வாசிக்கப்பெற்றது.
Subscribe to:
Posts (Atom)