Sunday, November 30, 2008

வென்றது போராட்டம் - பின்னடைவும் பின்னிழுப்பும் : அழகிய பெரியவன்

“பின்னடைவு, பின்தங்கல், தாழ்ந்து போதல் - இவை மனித சமுதாயத்தினுடைய உரிமைகளை மாத்திரம் அல்ல; வாய்ப்புகளை மாத்திரம் அல்ல; அவர்களுடைய சுயமரியாதையையே கெடுக்கக் கூடியவை என்பதால் - யாரும் பின்னடைவுக்கு ஆளாவதோ அல்லது பின்தங்குவதோ கூடாது.''- முதலமைச்சர் மு. கருணாநிதி, விரிவுரையாளர் பணி நியமன விழாவில் ஆற்றிய உரையிலிருந்து..."தினத்தந்தி' 1.10.2008 பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் விட்டு வைக்கப்பட்டிருந்த தலித் மக்களுக்கான கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்டன. தமிழக முதல்வர் அவர்களே ஒரு விழாவில், புதிதாகப் பணியில் அமரப் போகிறவர்களை நெஞ்சார வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை வழங்கினார்! கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், புதிய பணி நியமனங்கள் இந்த ஆட்சியில் செய்யப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அப்படி செய்யப்படும் அனைத்துப் பணி நியமனங்களுக்கும் இதுபோலவே விழாவினை நடத்தி, பணி ஆணைகளை முதலமைச்சர் நேரடியாக அனைவருக்கும் வழங்குவதில்லை. பணி நியமன ஆணை பெறுகின்றவர்களில் அடையாளமாக சிலரை மட்டும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வரோ, அத்துறை சார்ந்த அமைச்சரோ ஆணையை வழங்கி விடுவார்கள். கடந்த ஆண்டு இதைப்போலவே சுமார் 1000 கல்லூரி விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட போது கூட, இப்படி விழா ஒன்றை நடத்தி அந்த ஆணைகளை வழங்கவில்லை.இப்போது மட்டும் தலித் மக்களுக்கான நிரப்பப்படாமல் இருந்த பின்னடைவுப் பணியிடங்களில் கல்லூரி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்கிறபோது, விழா வைத்து ஆணைகளை வழங்குவதன் நோக்கம் என்ன? இந்த அரசு தலித் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று காட்டிக் கொள்வதற்குத்தான். எல்லோருக்கும் நலம் பயக்கும் அரசு இப்படி விளம்பரப்படுத்திக் கொண்டு, ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று வலிந்து சொல்வது - அவ்வரசு கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சியையும், தயக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.30.9.2008 அன்று பணி நியமனம் செய்யப்பட்ட 482 கல்லூரி விரிவுரையாளர்களின் நியமனத்தைப் பொறுத்தவரை, அரசு குற்ற உணர்ச்சி கொள்வதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன. நிரப்பப்பட்டவை அனைத்தும் பின்னடைவுப் பணியிடங்கள் (Backlog Vacancies) ஆகும். தமிழக அரசின் பணி நியமனங்களின் போது தலித் மக்களுக்கு 18 சதவிகித இடங்களும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இடமும் வழங்கப்படுவது, தமிழக அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும்.இந்த இடஒதுக்கீட்டு விகிதப்படி பணி நியமனங்கள் நடைபெறுவதாக ஒரு பொதுக்கருத்து இங்கு நிலவுகிறது. ஆனால் அரசு செய்யும் எல்லா பணி நியமனங்களிலும், இந்த இடஒதுக்கீட்டு விகிதம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதனால் பல்வேறு அரசுத் துறைகளில் தலித்துகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமலேயே விடப்பட்டுவிடும். இன்றளவும் கூட சுமார் 16,943 பணியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்பணியிடங்களை நிரப்பக்கோரி அவ்வப்போது பல்வேறு தலித் அமைப்புகளும், கட்சிகளும் வெறும் கோரிக்கைகளை மட்டும் வைத்தபடியே இருந்தன.1996இல் இக்கோரிக்கைகள் வலுவடைந்தன. அவ்வாண்டில் தி.மு.க. அரசு பதவியேற்ற போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலராக கிருத்துதாசு காந்தி, இ.ஆ.ப. அவர்கள் இருந்தார். அவரின் முயற்சியால் வெளிச்சத்திற்கு வந்த தலித் மக்களின் பின்னடைவுப் பணியிடங்கள் குறித்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமாக இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், சட்ட மன்றத்தில் பிரச்சினையை எழுப்பினார். அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்றார் அவர். டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டது. முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் இதற்கென ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.தமிழ் நாடு பொதுப்பணிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பு குறித்து அறிக்கை தர அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக அன்றைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சமயநல்லூர் எஸ். செல்வராஜ் நியமிக்கப்பட்டார். 13.9.1997 அன்று ஏற்படுத்தப்பட்ட இக்குழுவிலே சட்டப் பேரவை உறுப்பினர்களான கோமதி சீனிவாசன், ஏ.எஸ். பொன்னம்மாள், செங்கை சிவம், எஸ்.அழகுவேலு, வி.பி. ராஜன், எஸ். புரட்சிமணி, ஜி. பழனிச்சாமி, சோ. கருப்பசாமி, டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் உறுப்பினர்களாகவும், கிருத்துதாசு காந்தி செயல் உறுப்பினராகவும் இருந்தனர். சுமார் ஓராண்டுக்குப் பிறகு 3.8.98 அன்று இக்குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. இவ்வறிக்கையின் படி, தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்துத் துறை பணியிடங்களில் 17,538 இடங்கள் நிரப்பப்படாமலிருந்தது தெரிய வந்தது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 86 துறைகளில் கல்லூரிக் கல்வித் துறையில் மட்டும் அதிகபட்சமாக 595 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே விடப்பட்டிருந்தன.இந்தப் பின்னடைவுப் பணியிடங்களை படிப்படியாக நிரப்பி விடுவதாக அரசு வாக்குறுதி அளித்தது. படிப்படியாக முன்னேறி வரும் ஒரு சமூகத்துக்கு, இந்த வாக்குறுதியே நம்பிக்கையின் ஒரு படியாக இருந்தது. ஆனால், வாக்குறுதி காற்றில் கலந்த ஒலியைப்போல் படிப்படியாய் மங்கி மறைந்தது. தி.மு.க. அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட தலித் பின்னடைவுப் பணியிடங்களை, அவர்கள் தந்த வாக்குறுதியின் படி நிரப்பக்கோரி எடுக்கப்பட்ட இரண்டு முயற்சிகளை இங்கு கவனமாக நாம் நினைவில் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் பி.ஆர். சுபாஷ் சந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே அவை.தி.மு.க. ஆட்சியின் போது பத்திரிகையாளரான பி.ஆர். சுபாஷ் சந்திரன், தலித் மக்களுக்கான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக்கோரி 1999இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் (எண்.16087/99). இன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது 14.1.2000 அன்று அவர்கள் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன் அவர்கள் சுபாஷ் சந்திரனுக்காக அன்றைக்கு வழக்குரைஞராக வாதிட்டார். தலைமைச் செயலர் மூலமாக பதிலளித்த அரசு, 5 ஆண்டுகளுக்குள் இப்பணியிடங்களை நிரப்பி விடுவதாக உறுதியளித்தது. அதை ஏற்ற நீதிபதி, 5 ஆண்டுகளுக்குள் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பும்படி உத்தரவிட்டார். ஆனால் அரசு அவ்வாறு செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவு அலட்சியப்படுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சி போய் அ.தி.மு.க. அரசு மே 21, 2001இல் ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க. அரசும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்தியது. அய்ந்தாண்டுகளுக்கு யாரையும் வேலை என்று வாய் திறக்கவிடவில்லை. "பூச்சாண்டி' அதட்டிய குழந்தையாகக் கிடந்தனர் மக்கள். மீண்டும் மே 26, 2006இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்கிடையில் 18.9.2006 அன்று 1000 கல்லூரி விரிவுரையாளர்களை நிரப்புவதாக விளம்பரம் அளித்திருந்த இன்றைய அரசு, அதிலும் 522 தலித் பின்னடைவுப் பணியிடங்களைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. 14.1.2000 அன்று வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை அரசு மதிக்கவில்லை. அது கொடுத்த வாக்குறுதிகள் அலட்சியத்தாலும், அதிகார மெத்தனத்தாலும் அந்த நீதிமன்ற வளாகத்திலேயே பறக்க விடப்பட்டுவிட்டன. எங்களுக்குரிய ஒதுக்கப்பட்ட, பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புங்கள் என்று கேட்க உணர்வுள்ள எந்த தலித் பட்டதாரிகளும் முன் வரவில்லை. பொதுநல வழக்கொன்றின் மூலம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பின்னடைவுப் பணியிடங்களில் விரிவுரையாளர் பதவிகளை உடனே நிரப்பும்படி கேட்டிருந்தார். முந்தைய தீர்ப்புக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்துப் போடப்பட்ட இவ்வழக்கின் மீது (W.P. 50131/06) 26.7.2007 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பினை அளித்தது. நீதிபதி எஸ்.கே. முகோபாத்தியா, “அரசியல் கட்சிகள் பொது நல வழக்கினை தொடுக்க முடியாது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் உயர் கல்வித் துறை செயலாளரிடமோ, ஆதிதிராவிடர் நலத்துறையிடமோ விண்ணப்பம் தரலாம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடலாம்'' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். நாட்டிலுள்ள குடிமக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள் தான் இருக்கின்றன. அந்த நீதிமன்றங்கள் கூட, தலித்துகளுக்கு புகலிடமளிப்பதில்லை; அவர்களை உள்நாட்டு ஏதிலிகளாக்கி விடுகின்றன. டாக்டர் கிருஷ்ணசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அப்படித்தான் பார்க்க வேண்டும்.2003இல் "டெஸ்மா' சட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செ. குப்புசாமியும்; உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் டி.கே. ரங்கராஜனும் தொடுத்த பொது நல வழக்குகளை தள்ளுபடி செய்யாமல் விசாரித்து தீர்ப்பளித்த நீதிமன்றங்கள், ஒரு தலித் அரசியல் கட்சித் தலைவர் பொது நல வழக்கு தொடுத்த போது மட்டும் அதைத் தள்ளுபடி செய்து விட்டன. எல்லா வழிகளும் அடைபட்டு விட்டன. மேலும் நகர முடியாதபடி தடுப்பரண் எழுப்பப்பட்டுவிட்டது. இப்படியே ஓராண்டு காலம் கழிந்தது.திடீரென்று கவிந்த அந்தக் கொடும் மவுனத்தை உடைப்பதற்கு முன் வந்தõர் பேராசிரியர் அய். இளங்கோவன். கல்லூரிப் பணியிலே அவர் இருப்பதால் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த பல மனுதாரர்களை அணுகுவதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் அணுகியவர்கள் வழக்குப் போட மறுத்து விட்டார்கள். இதற்கு முன்னர் வழக்குப் போட்ட ஒருவருக்கு வேலைக்கான உத்தரவாதம் பறிபோனது என்று உயர் கல்வி பட்டதாரிகளிடையேயும், வேலை தேடுவோரிடையேயும் நிலவிய வதந்தி அதற்கொரு காரணம். ஆனால் சில பெண்கள் வழக்குப் போட முன்வந்ததாக இளங்கோவன் கூறுகிறார்: “பெண்கள் தான் வழக்குப் போட முன்வந்தார்கள். வாணியம்பாடியைச் சேர்ந்த தென்னமுதன் மகள் வித்யா குமாரியும், வேலூரைச் சார்ந்த கவுதமின் மகள் செல்வகுமாரியும் தான் அவ்வாறு முன்வந்தவர்கள். அதே போல சென்னையில், ‘புரொபஷனல் கூரியரில்' பணியாற்றி வந்த டி. தனபால் என்பவர் கூட முன்வந்தார். வாணியம்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கையெழுத்து மட்டும் போடுவேன் என்றார்.''மேலே குறிப்பிடப்பட்ட இம்மூவருக்கும் 522 விரிவுரையாளர் பணிநியமனத்தில் வேலை கிடைக்கவில்லை! அதற்குக் காரணம் இவர்களுக்குப் போதிய அனுபவ மதிப்பெண்கள் இல்லை என்பது தான். செல்வகுமாரி பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்; வித்யாகுமாரி பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். டி. சுப்பிரமணியன், புரபஷனல் கூரியரில் பணி புரிகிறார்.உயர் கல்வி பட்டதாரிகள் யாரும் முன்வராத நிலையில், ‘தலித் முரசு' சார்பாக 25.9.2007 அன்று அவ்விதழ் ஆசிரியர் புனித பாண்டியன் ஒரு பொது நல வழக்கினைத் தொடர்ந்தார் (W.P. எண்.31258/07). அவரைத் தொடர்ந்து வித்யாகுமாரி மற்றும் செல்வகுமாரி ஆகியோர் (வ.எண்.31603/07) வழக்கினைத் தொடர்ந்தனர். இவ்வழக்குகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட உயர் கல்வித் துறை அரசாணையில் (எண்.216, நாள் 5.7.2007), “1998 அறிக்கையின்படி ஆதிதிராவிடருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 595 என கணக்கிடப்பட்டது. இவற்றுள் 73 விரிவுரையாளர்கள் அரசாணை 635/14.12.98இன் படி பணியமர்த்தப்பட்டு விட்டனர்.மீதமுள்ள 522 பணியிடங்கள் 3 கட்டங்களாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, முதற்கட்டமாக 300 பணியிடங்களை நிரப்ப அரசு ஆணையிடுகிறது. மீதமுள்ள 222 பின்னடைவுப் பணியிடங்களை, அரசுக் கல்லூரிகளில் சுயநிதிப்பாடப் பிரிவுகளை முறையான பாடப்பிரிவுகளாக மாற்றுவதாலும் மற்றும் சுழற்சி முறையை அறிமுகப்படுத்துவதாலும் உருவாக்கப்படும் விரிவுரையாளர் பணியிடங்களில், 122 பணியிடங்களை இவ்வினத்தவரைக் கொண்டு சிறப்பு நியமனம் மூலம் நிரப்பலாம் எனவும், மூன்றாவது கட்டமாக ஓய்வு பெறுபவர்களால் இக்கல்லூரிகளில் காலியாகும் விரிவுரையாளர் பணியிடங்களில், மீதமுள்ள 100 பணியிடங்களை சிறப்பு நியமனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களைக் கொண்டு நிரப்பலாம் எனவும் முடிவு செய்து, அரசு அவ்வாறே ஆணையிடுகிறது'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே உருவாகி நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களே பின்னடைவுப் பணியிடங்கள் என்று கருதப்படும். ஆனால் இனிமேல் உருவாகப் போகும் பணியிடங்களையும் இதனோடு சேர்த்து அரசு கணக்குச் சொன்னது. எனவே, இப்பின்னடைவுப் பணியிடங்களை உடனடியாக முழுவதுமாக நிரப்ப ஆணையிட வேண்டும் என்று பேராசிரியர் அய். இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் 22.10.2007 அன்று பொது நல வழக்கு ஒன்றினை தொடர்ந்தார் (W.P.33637/07). இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் வி. ராமசுப்பிரமணியம் ஆகியோர், இரண்டு மாதங்களுக்குள் 522 தலித் விரிவுரையாளர் பணியிடங்களையும் அரசு நிரப்ப வேண்டும் என 19.11.2007 அன்று உத்தரவிட்டனர்.வழக்கம் போலவே அரசு இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப முயற்சிக்காததால், பேராசிரியர் இளங்கோவன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று மேலும் ஒரு வழக்கை (நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 296/2008) 11.3.2008 அன்று தொடுத்தார். வழக்கு விசாரணை, நீதிபதி டி. முருகேசன் மற்றும் நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பென்ஞ்ச் முன்பு 18.3.2008 அன்று விசாரணைக்காக வரவிருந்தது.வழக்கிலிருந்து தப்பிக்க அவசர அவசரமாக 18.3.2008 அன்று பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான செய்தித்தாள் விளம்பரம் வெளியிடப்பட்டது. இப்போதும் அரசின் அலட்சியம் போகவில்லை. இளங்கலைப் பட்டத்தையும் முதுகலைப்பட்டத்தையும் ஒரே முதன்மைப் பாடத்தில் வைத்திருப்பவரே - இப்பணி நியமனத்திற்கு தகுதியானவர் என்று அந்த விளம்பரத்தில் அரசு அறிவித்திருந்தது. பேராசிரியர் அய். இளங்கோவன் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அவரால் மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது (W.P. 9586/2008). கல்லூரி விரிவுரையாளர் பணியிடம் முதுகலைப் பட்டத்தைக் கொண்டே தேர்வு செய்யப்படுவதால், அடிப்படைத் தகுதியாக ஏதாகிலும் ஒரு பட்டப் படிப்பு இருந்தால் போதும் என்ற அவரின் வாதத்தை நீதிமன்றம் ஒப்புக் கொண்டு, அதையே தீர்ப்பாகவும் 28.4.2008 அன்று அளித்தது. இதனைத் தொடர்ந்து அவமதிப்பு வழக்கு விசாரணை இறுதியாக வரவிருந்த 19.9.2008 அன்று, விரிவுரையாளர் பணி நியமனப் பட்டியல் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆறு ரிட் மனுக்கள் தொடுக்கப்பட்டு, மிக நீண்ட நீதிமன்றப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற ஆணையின் படி நிரப்பப்பட்ட பணியிடங்களை அரசு இன்று தாமே முன்வந்து நிரப்பியதாகக் கூறி விழா வைத்து நம்பச் சொல்கிறது. கோப்பையில் நெய் வழிகிறது என்றால், கேட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது!தலித் மக்கள் தங்களுடைய உரிமைகளை இழக்கிறபோது தன்னை நாடி கெஞ்ச வேண்டும் என்று அரசு நினைக்கிறது. நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வந்தாலோ, நானே செய்தேன் என்று தனது அதிகாரத்தை காட்டிக் கொள்கிறது. எப்படியானாலும் அதிகாரத்தின் காலடியில் தலித் மக்கள் எப்போதும் விழுந்து கிடக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். இருக்கின்ற சட்டங்களையும், உரிமைகளையும் கூட நீதிமன்றத் தலையீடும், அறிவுறுத்தலும் இன்றி தலித் மக்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது எனில், ஜனநாயக அரசின் கடமைதான் என்ன?“சட்டம் எவ்வாறு இயற்றப்படுகிறது என்பதை விடவும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியமானது'' என்கிறார் அம்பேத்கர். உண்மைதான். சட்டத்தை நடைமுறைப்படுத்த தடையாக இருப்பது, நமது நாட்டு நிர்வாகத்தினரின் ஆதிக்க சிந்தனைதான். இதற்கு மிகச்சிறந்த சான்றாக இவ்வழக்கின்போது நடைபெற்ற நீதிமன்ற வாதமே இருக்கிறது. பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களின் வழக்கிற்கு எதிராக அரசுத் தரப்பில் நேர்நின்ற வழக்குரைஞர் அரசின் கருத்தினை தமது வாதத்தில் தெளிவாக்கியுள்ளார்:“அரசு ஏற்கனவே பணிநியமனம் செய்த 1000 விரிவுரையாளர்களில், 222 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கியுள்ளது. இப்போது பின்னடைவுப் பணியிடங்கள் என்ற வகையில் 522 இடங்கள் கோரப்படுகின்றன. இன்னும் செய்யப்போகிற 1000 பணி நியமனத்திலும் இடஒதுக்கீட்டின்படி மேலும் 200 இடங்கள் வழங்கப்படலாம். இப்படி ஒரே நேரத்தில் 900-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்களை நியமித்தால் உயர் கல்வியின் தரம் பாதிக்கப்படும்...'' அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “தமிழ்நாட்டில் 69 சதவிகித இடங்கள் ஒதுக்கீட்டின் படிதான் நிரப்பப்படுகின்றன. அப்படியெனில் இந்த ஒதுக்கீட்டின் படி நிரப்பப்படும் இடங்களால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்று சொல்ல விரும்புகிறீர்களா?'' என்று கேட்டிருக்கிறார். அய். இளங்கோவன் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் அரி பரந்தாமன், “அரசின் கருத்து இதுவானால், அதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அரசு பிரமாணப் பத்திரம் எதையும் வழங்கவில்லை. அப்படி வழங்காவிட்டாலும், அரசின் நிலைப்பாடு தெளிவாகிவிட்டது!“அடித்தள மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டதுதான் கழக அரசு'' என்று இப்பணி நியமன ஆணை வழங்கும் விழாவிலே பேசியிருக்கிறார், உயர் கல்வித்துறை அமைச்சர். “பின் தங்கியவர்கள் என்பதற்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் என மாற்றியது தி.மு.கழகம்'' என்றிருக்கிறார் முதல்வர். மகிழ்ச்சிதான். ஆனால் பேசுவதும், எழுதுவதும் மட்டுமே தலித் மக்களுக்கான தீர்வாக ஒருபோதும் ஆகிவிடாது. பின்னடைவு என்பது சுயமரியாதைக்கு கேடானது. தலித் மக்கள் பின்தங்கிவிடக்கூடாது என்பது முதல்வரின் விருப்பமாக அவ்விழாவில் ஒலித்திருக்கிறது. தலித் மக்களின் உள்ளக்கிடக்கையும், உரிமைக் குரலும் கூட அதுவேதான். ஆனால் இச்சாதிய சமூகமும், அரசதிகாரமும் தான் அவர்களைப் பின்னடைய வைக்கிறது. அவர்களாகவே ஒருபோதும் பின்தங்கி விடுவதில்லை.30.9.2008 அன்று சென்னைப் பல்கலைக் கழக பவழ விழா அரங்கில் முதல்வரால் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட விழாவிலே, சுபாஷ் சந்திரன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் முயற்சிகளைப் பற்றியோ, பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களின் தொடர் வழக்குகளால் நீதிமன்றம் அரசுக்கு விதித்த உத்தரவு மற்றும் கெடு ஆகியவற்றை குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த முயற்சிகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. இப்பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இம்முயற்சிகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி இன்று பல கருத்துக்கள் நிலவுகின்றன.செத்த பிணங்களை தூக்கி வைத்துக் கொண்டு நிவாரணம் கோரி அழுகிறவர்களால், ஒரு காலும் போராட முடியாது. நமக்குத் தேவை நிவாரணமல்ல; உரிமை. இலக்கை அடையும் வரை போராடுவதே போராட்டம்! அப்படிப் போராடிய "தலித் முரசு' மற்றும் பேராசிரியர் அய். இளங்கோவன் ஆகியோரின் முயற்சிகள் இல்லாமல் இருந்திருந்தால், இப்பின்னடைவுப் பணியிடங்கள் அடைவிலே போடப்பட்டிருக்கும். நிரப்பப்பட்டிருக்காது.1996 தொடங்கி, 2008 வரையுள்ள நெடுங்காலத் தொடரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் அவை போராட்டங்களாக மாற்றப்படவில்லை. அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் அறிக்கைப் போர் நடத்துவதோடு நின்றுகொண்டன. டாக்டர் கிருஷ்ணசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கூட ஒரு போராட்டமில்லை. உயர் கல்விப் பட்டதாரிகளோ நாகரீக வார்த்தையில் சொல்வதெனில், "தன்னுணர்வோடு' ஒதுங்கி நின்று கொண்டனர். போராடினால் வாழ்க்கை போய்விடும் என்ற முட்டாள்தனமான பொதுக் கருத்து அவர்களிடையே நிலவியது. அய். இளங்கோவன் அவர்களின் முயற்சியால் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகே அரசு இப்பணியிடங்களை நிரப்பியிருக்கிறது. நீதிமன்ற ஆணை மூலம் "தலித் முரசு'ம் பேராசிரியர் இளங்கோவனும் அரசை செய்ய வைத்திருக்கிறார்கள்.இப்பணி நியமனங்களை அடிப்படையாகக் கொண்டு தலித் மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சுபாஷ் சந்திரன் வழக்கில், அய்ந்து ஆண்டுகளுக்குள் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பிவிடுவதாக வாக்குறுதி கொடுத்த முந்தைய தி.மு.க. அரசும், அடுத்து வந்த அதிமுக அரசும் 1998லிருந்து 2006-க்குள் ஏன் அதை நிறைவேற்றவில்லை? புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு முதலில் நியமனம் செய்த 1000 விரிவுரையாளர் பணி இடங்களுடன் 522 பின்னடைவுப் பணியிடங்களை ஏன் இணைக்கவில்லை? அதற்குப் பின்னர் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவான 2 மாதங்களில் இப்பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? நீதிமன்ற அவதூறு வழக்கு போடும் வரைக்கும் காத்திருந்தது எதற்காக? 2007ஆம் ஆண்டு டிசம்பரில் நிரப்பப்பட்ட 1000 விரிவுரையாளர்களுக்கு விழா வைத்து ஆணை வழங்கப்படவில்லையே. இதற்கு மட்டும் எதற்கு விழா? பிற துறைகளில் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிற தலித் மக்களுக்கான 16,943 பணியிடங்களை எப்போது நிரப்பப் போகிறார்கள்?அரசின் வாக்குறுதிகளில் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆண்டுக்கு ஒரு முறை சட்டப் பேரவையில் தரப்படும் அரசின் வாக்குறுதி நிறைவேற்றத்தை ஆய்வு செய்வதற்கு என்று ஒரு குழு உண்டு. அந்த சட்டப்பேரவை உறுதி மொழிக் குழுவுக்கே கூட, அரசின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை இருக்காது என்றே தோன்றுகிறது. சமூக அளவிலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளிலும், கல்வியிலும் நம்பிக்கைகளை இழந்து நிற்கும் தலித் மக்களுக்கோ வாக்குறுதிகள் வெறும் சொற்களே. சொற்களை உயிராக்கி அம்மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வது, அரசின் செயற்பாட்டில்தான் இருக்கிறது.தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த வேறுபாடுமின்றி, எல்லா அரசுகளும்தங்களின் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த பொதுக் கருத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. அரசு நினைக்குமானால், உடனடியாக நிரப்பப்படாமல் இருக்கின்ற 16,943 பணி இடங்களை நிரப்ப வேண்டும். அப்போது தான் எதிர் வரும் காலங்களில் தலித் மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை கொள்வார்கள். "ஆத்தாள் பெருமையை அண்ணன் வீட்டில் போய் சொன்ன கதை'யாக, தங்கள் பெருமையை மட்டுமே தம்பட்டம் அடித்துக் கொண்டு தொடர்ந்து இந்த அரசும் இருக்குமானால், அதனால் அவர்களுக்குக் கிடைக்கப் போவது தலித் மக்களின் வெறுப்பும், புறக்கணிப்புமே

உத்தபுரத்தில் உண்மை அறியும் குழு

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து விடுவதையும், கடந்த அக்.1-ந்தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’(தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை ஒட்டி போலீஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதையும் அறிந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த நாங்கள் உண்மையை அறிந்து வெளிப்படுத்துவது என முடிவு செய்தோம். மதுரை வழக்குரைஞர் ரஜினி அவர்கள் தலைமையில் பூர்வாங்க ஆய்வு செய்வதற்கென எம் குழுவின் ஒரு பகுதி சென்ற அக்.14 அன்று உத்தபுரம் சென்றது. 144 தடை உத்தரவைக் காட்டி நாங்கள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டோம். தடை உத்தரவு திருவிழாவிற்குத்தானே என நாங்கள் கேட்டபோதும் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. எனவே பெண்கள் ஐக்கியப் பேரவை அமைப்பைச் சேர்ந்த பேச்சியம்மாள் உத்தபுரம் செல்ல அனுமதி கோரி உயர்நீதி மன்றத்தை அணுகினார். அக்.20 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதியரசர் ராஜசூர்யா அவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஏழு பேர் கொண்ட எம் குழு அங்கு சென்றுவர தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.காமரா, வீடியோ முதலிய கருவிகளைப் பயன்படுத்துவதையும் தடுக்கக்கூடாது எனவும் ஆணையிட்டார். இதன்படி சென்ற அக்.25 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு எம் குழு உத்தபுரத்தை அடைந்தது. குழுவிருந்தோர்: அ.மார்க்ஸ், ரஜினி, கு.பழனிச்சாமி (மனித உரிமை மக்கள் கழகம் - பி.யூ.எச்.ஆர்), வெரோனிகா, பேச்சியம்மாள் (பெண்கள் ஐக்கியப் பேரவை), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி), ம.இளங்கோ (பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி), கே.கேசவன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்).நாங்கள் அங்கு சென்றபோது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மோகன், மதுரை கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் கே.சுவாமிநாதன். ஜனநாயக மாதர் சங்க புற நகர் மாவட்டச் செயலாளர் பொன்னுத்தாய், எழுத்தாளர் சு.வெங்கடேசன் மற்றும் பலர் அடங்கிய குழு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பணியை செய்து கொண்டிருந்தனர்.தொடர்ந்து இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் இத்தலைவர்களிடம் விரிவாகப் பேசிச் செய்திகளைத் தொகுத்து கொண்டோம். உத்தபுரத்தில் பிறந்து தற்போது தேனி பகுதியில் சமூகத் தொண்டாற்றும் வேலுமணி மற்றும் தலித் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களான மு.பஞ்சவர்ணம்(25), தர்மராஜ்(40), நாகம்மாள்(45), நா.பஞ்சவர்ணம்(35), பார்வதி(25), பவுன்தாயி(40), வெள்ளையம்மாள்(60) எனப் பலரையும் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துக் கொண்டோம், சேதமடைந்த வீடுகளையும், பொருட்களையும் படம் எடுத்துக் கொண்டோம்.பின்னர் பிள்ளைமார் பகுதிக்குச் சென்று பாண்டியன்(32), ராஜா(28), பானுமதி(38) ஆகியோரிடம் பேசினோம். பாண்டியனும் ராஜாவும் விரிவாகத் தம் கோரிக்கைகளை முன்வைத்தனர். உத்தபுரத்தி ல் ‘டூட்டி’யில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சி.பாலசுப்பிரமணியத்திடம் சில தகவல்களைத் தெளிவுபடுத்திக் கொண்டோம். ஐ.ஜி. சஞ்சீவ் குமார் அவர்கள் தான் வெளியூரிலிருப்பதாகவும் கண்காணிப்பாளர் மனோகரனிடம் பேசுமாறும் கூறினார். தொலைபேசியில் கண்காணிப்பாளர் அவர்களையும் தொடர்பு கொண்டு பேசினோம்.நடந்தவை:மே 6ந்தேதியே உத்தபுரத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரில் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட்டபோதும், அங்கே சில காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டபோதும், இடிக்கப்பட்ட பகுதி வழியே தலித் மக்கள் சுதந்திரமாக சென்று வர இயலவில்லை. குறிப்பாக வாகனங்களை அவ்வழியே செலுத்த இயலவில்லை. வாகனங்கள் வரும்போது வழியில் வேண்டுமென்றே அமர்ந்து பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலித் மக்களின் வாகனப் போக்குவரத்தை பிள்ளைமார்கள் தடுத்துள்ளனர். இதுகுறித்து ஐந்து முறை புகார்கள் செய்யப்பட்டபோதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் பலத்த விளம்பரங்களுடன் மே 6ல் இடிக்கப்பட்ட சுவரின் வழியே சுமுகமான போக்குவரத்து ஏற்படுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.எந்த நோக்கத்திற்காக சுவர் இடிக்கப்பட்டதோ அது முழுமையாக நிறைவேறவில்லை. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத மற்ற பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியிலும் மாவட்ட நிர்வாகம் இறங்கவில்லை. எடுத்துக்காட்டாக பிள்ளைமார் பகுதியிலிருந்து சாக்கடை ஒன்று வழிந்தோடி தலித் பகுதியில் தேங்குகிறது. குடிநீரையும் அது மாசுபடுத்துகிறது. இதை தடுத்து நிறுத்தி கழிவுநீரை வேறு வழியில் செலுத்தும் முயற்சியையும் அரசு செய்யவில்லை.காவல்துறையின் ‘அவுட்போஸ்ட்’ பிள்ளைமார் சங்க உறவின் முறை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை உள்ள ஒரு ஊரில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த உறவின்முறை கட்டிடத்தில் ‘அவுட்போஸ்ட்’ திறப்பது என காவல்துறை எடுத்த முடிவை எங்களால் விளங்கிக் கொள்ளவே இயலவில்லை. தலித் மக்கள் தங்கள் குறைகளை அங்கு எப்படிச் சென்று தயக்கமின்றி பதிவு செய்ய முடியும்?முத்தாலம்மன் கோவில் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து வருகின்ற ஒன்று. பொது இடத்தில் அக்கோவிலும், அரச மரமும் அமைந்துள்ள போதும் அது தமக்குச் சொந்தமென பிள்ளைமார்கள் கூறுகின்றனர். அந்த நிலத்திற்கு பட்டாவும் கோருகின்றனர். பிள்ளைமார் பகுதியையும், தலித் பகுதியையும் பிரிக்கிற சுவர் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்ட 1989 ஒப்பந்தம் ரொம்பவும் பக்கச்சார்பானது. தலித்களுக்கு எதிரானது. அரச மரத்தைச் சுற்றி திருவிழாக் காலங்களில் தலித் மக்கள் பாரம்பரியமாக செய்து வந்த முளைப்பாறி எடுக்கும் உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் மறுக்கப்பட்டுள்ளது. அரச மரத்தைச் சுற்றி பிள்ளைமார்கள் சுவர் ஒன்றையும் அமைத்துள்ளனர்.இந்நிலையில் சென்ற அக்.1 அன்று திருவிழாவைக் காரணம் காட்டி அரச மரத்தைச் சுற்றியிருந்த சுவருக்கு பிள்ளைமார்கள் வெள்ளை அடிக்க முனைந்தபோது, அதை தலித் மக்கள் தடுத்துள்ளனர். இருபக்கமும் மக்கள் திரண்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், உறுதியற்ற தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டி அன்று டூட்டியில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் ஜெகதா என்பவர் தலித் பகுதியில் தாக்குதலைத் தொடங்கியுள்ளார். ‘வாக்கி டாக்கி ’ மூலம் தகவல் தெரிவித்து வெளியிலிருந்து காவலர்கள் வருவிக்கப்பட்டு சுமார் 12 மணி நேரம் திரும்பத் திரும்ப தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜெகதாவும், எஸ்.பி.சி.ஐ.டி பிரிவை சேர்ந்த பூவேந்திரனும் (முன்னாள் அமைச்சர் துரைராஜின் சகோதரர்) தாக்குதல் அனைத்திற்கும் காரணமாக இருந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் தப்பி ஓட, அங்கிருந்த தலித் பெண்களே எல்லாத் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். வீடுகளில் புகுந்து பொருட்கள் நாசப்படுத்தப்பட்டள்ளன. கதவுகள், கண்ணாடி சன்னல்கள், ஃபேன் முதலான சாமான்கள் உடைக்கப்பட்டுள்ளன.‘‘வாடி அவுசாரி, உத்தபுரத்தை உழுவ போறண்டி, ஓடுங்கடி’’ என்று சொல்லி துணை ஆய்வாளர் ஜெகதா தம்மை அடித்ததாக பெண்கள் பலரும் வாக்குமூலம் அளித்தனர். தன் மீது தண்ணீரை ஊற்றி ஊற்றி அடித்ததாக இன்னொரு பெண் கூறினார். மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையுடன் கூடிய ஒரு பெண் உட்பட பலரும் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மோகன் எம்.பி. தலையிட்டு சிலரை விடுதலை செய்துள்ளார். மூன்று வெள்ளைத்தாளில் ரேகை பதித்துக்கொண்டே தாங்கள் விடுவிக்கப்பட்டதாகப் பெண்கள் கூறினர்.பிள்ளைமார் பகுதியில் எந்த தாக்குதலையும் போலீஸ் நடத்தவில்லை. காவல்துறையை பிள்ளைமார்களை வெகுவாகப் புகழ்ந்தனர். தமது வீடுகளில் இரண்டும், சிறிய முருகன் கோவில் ஒன்றின் கதவும் தலித்களால் உடைக்கப்பட்டதாகக் கூறினர். தலித் தரப்பிலிருந்து சொற்ப அளவில் சிறு தாக்குதல்கள் நடந்திருக்கலாம். ஆனால் தலித் மக்கள் மத்தியில் போலீஸ் மேற்கொண்ட பெருந்தாக்குதலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சொற்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனவும், சுவர் அமைத்துக் கொள்வது தமது உரிமையெனவும், தங்கள் சொந்த நிலத்தில் தாங்கள் சுவர் எழுப்பியுள்ளோமெனவும், 1989 ஒப்பந்தத்தின்படி அரச மரத்திலோ, கோவிலிலோ தலித்களுக்கு உரிமையில்லை எனவும், கட்டப்படவிருக்கும் பஸ் ஷெல்டரை ஊர் பொதுவான அரச மரத்தடியில் கட்டாமல் தங்கள் பகுதியிலுள்ள பஞ்சாயத்துக் கட்டிடத்தின் அருகில் கட்ட வேண்டுமெனவும் பிள்ளைமார்கள் வலியுறுத்தினர். எல்லாவற்றிற்கும் இந்த கம்யூனிஸ்ட்கள்தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினர்.உத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சி.பாலசுப்பிரமணியத்திடம் நாங்கள் பேசியபோது தலித் பகுதி மீதான தாக்குதலுக்கு போலீஸ் காரணமல்ல என்றார். சரி யார் காரணம் என்று கேட்டதற்கு, தெரியாது என்றார். தலித் பகுதியிலிருந்துதான் வெடிகுண்டு வீசப்பட்டது என்றார். ஆனால் வெடிகுண்டு வீசப்பட்டதற்காக தடயம் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அன்று மாலை மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரனை தொடர்பு கொண்டு பேசியபோது போலீஸ் அவுட்போஸ்டை மாற்ற இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.எமது பார்வைகளும், பரிந்துரைகளும்:1. அக்.1, 2 தேதிகளில் தலித் மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கொடுந்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னதாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மிகவும் வன்மத்துடன் தலித்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது. காவல்துறையின் தலித் விரோதப் போக்கு வெளிப்படையாக உள்ளது.2. பிள்ளைமார்களில் 24 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடாமல் மொத்தம் 150 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யார் மீதும் தீண்டாமை தொடர்பான வன்கொடுமை சட்ட விதிகளைப் பயன்படுத்தவில்லை. மிகச் சாதாரண பிரிவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.3. தலித்களில் 19 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடப்படாமல் மொத்தம் 240 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெடிமருந்து பொருள் சட்டம் உட்பட, கடும் பிரிவின் கீழ் இவ்வழக்குகள் போடப்பட்டுள்ளன.4. மாவட்ட நிர்வாகம் எள்ளளவும் பொறுப்பற்று செயல்பட்டுள்ளது. சுவர் இடிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அக்.1,2 தாக்குதலுக்கு பின்னும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மருத்துவ உதவி அளித்தல், மின் தொடர்பை சரி செய்தல் என எந்த முயற்சியும் 13-ந் தேதி வரை மேற்கொள்ளப்படவில்லை. சாக்கடைப் பிரச்சினை, பஸ் ஷெல்டர் கட்டுதல் உட்பட எதற்கும் தீர்வு ஏற்படுத்த முனையவில்லை.5. தலித் விரோதப் போக்குடன் செயல்பட்ட இரு காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.6. அக்.1,2 சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்.7. தற்போது உசிலம்பட்டி பகுதியிலுள்ள காவல்துறையினர் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். 50 விழுக்காட்டினர் தலித்களாக அமைய வேண்டும். உத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருப்பவர்களிலும் பாதிப் பேர் தலித்களாக இருக்க வேண்டும்.8. போலீஸ் ‘அவுட்போஸ்ட்’ உடனடியாக பொது இடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.9. சாக்கடைக் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.10. சுவரை முற்றிலுமாகத் தகர்த்து போக்குவரத்துக்கு எவ்வித தடையுமில்லாமல் செய்ய வேண்டும். இது தொடர்பான புகார்களை காவல்துறை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.11. அரச மரத்தைச் சுற்றியுள்ள சுவர் நீக்கப்பட்டு அங்கே பஸ் ஷெல்டர் கட்டப்பட வேண்டும்.12. முத்தாலம்மன் கோவில் உள்ள இடத்திற்கு பிள்ளைமார்களுக்கு பட்டா அளிக்கக்கூடாது. தவிரவும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக முத்தாலம்மன் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.13. இப்பிரச்சினையை உலகறியச் செய்து தொடர்ந்து நீதிக்காகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியை இக்குழு பாராட்டுகிறது.(சிவா அப்பார்ட்மெண்ட்ஸ், 4/787, அன்னை வீதி, அண்ணாநகர்,மதுரை-20. செல்: 94441 20582, 94432 94892, 90471 44854)01.11.2008

ஆனந்த விகடனின் சாதி வெறி ! தொம்பன்

“பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்”“நீங்க எந்த ஊரு தம்பி?”மதுர….. மதுரையில….எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுமே.. என்கிற அச்சம்.மதுர டவுணு சார்.டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுண்ல எங்க இருக்கீங்க?சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது. நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம்.சட்டக் கல்லூரிக்காக ஊடகங்களில் எழுதுகிற, பேசுகிற ஒவ்வொருவனின் சாதியையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம். நட்பு முறிந்தாலும் பரவாயில்லை “தலித்துக்களின் காட்டுமிராண்டித்தனம்” பற்றிப் பேசுகிறவனின் யோக்கியதையை அம்பலப்படுத்துவதற்கு ‘அவர்களின்’ சாதியைத் தெரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக் கட்டாயம் கூட சாதி வெறியர்கள் நம் மீது திணித்ததுதான்.கடந்த 12 -ஆம் தேதி சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த ‘தாக்குதலின் இரண்டாவது பாகத்தை’ மட்டும் ஒளிபரப்பிய, எழுதிய தமிழக ஊடகங்கள் பொதுப் புத்தியில் தலித்துக்கள் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் எண்ண ஓட்டங்கள்தான் தலித் விரோத அரசு வன்முறையாக மாறி போலீஸ் ஒட்டுக்குமுறையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. இச்சூழலில் ஊடகங்களில் சாதி குறித்து எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?ஒருவனை பத்து பேர் சேர்ந்து புரட்டி எடுப்பதையும், அதை வேடிக்கை பார்த்த போலீசையும் நோக்கி இன்று வீசப்படும் கேள்விகள், இதுவரை தமிழக ஊடகங்களால் கேட்கப்படாதவை. இதுவரை தலித் மக்கள் தாக்கப்பட்ட எல்லா இடங்களிலும் வேடிக்கை மட்டுமே பார்த்தது போலீஸ். சில இடங்களில் சாதி வெறியர்கள் செய்ய வேண்டிய வேலையை போலீசே செய்தது. அடிப்பவன் ஆதிக்க சாதிக்காரனாகவும் அடிபடுபவன் தாழ்த்தப்பட்டவனாகவும் இருந்த எல்லா தாக்குதல்களிலும் போலிஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. வெண்மணியில் தொடங்கி மேலவளவு, கொடியங்குளம், தாமிரபரணி படுகொலைகள், உத்தபுரம் என வரலாற்றின் நீண்ட பக்கங்கள் அனைத்திலும் போலீசு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.இன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.இந்த நீண்ட வன்முறைப் பட்டியலில், சட்டக் கல்லூரியில் மட்டும் ஒரு வித்தியாசம். இது வரை எவன் அடித்தானோ அவன் இங்கே அடிவாங்குகிறான். இது வரை எவன் இங்கே அடிவாங்கினானோ அவன் அடிக்கிறான்.சரி, ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கும் போது போலீஸ் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்?நண்பர்களே, உண்மையில் போலீசும் சரி ஊடகங்களும் சரி பொது மக்களும் சரி முதலில் என்ன நினைத்தார்கள் என்றால் “வழக்கம் போல தலித் அடிவாங்குகிறான் ஆதிக்க சாதிக்காரன் அடிக்கிறான்” என்றுதான் நினைத்தார்கள். அதனால்தான் நீண்ட நேரம் லத்தியைச் சுருட்டி கமுக்கட்டுக்குள்ளாற வெச்சிக்கிட்டிருந்தது போலீஸ். ஊடகங்களும் முதலில் குழம்பித்தான் போயின. அடிவாங்கியவர்கள் பற்றி சரியான தகவல் இல்லாத சூழலில், நடப்பது சாதிக்கலவரம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு அடித்ததும் அடிவாங்கியதும் எந்த சாதிக்காரன் என்று தெரியாத சூழலில் பிரபல ஊடகவியலாளர்கள் முக்கிய பிரமுகர்களுக்குப் போன் செய்து, “சார் தேவர் சாதிப் பசங்க ரெண்டு தலித் பசங்கள போட்டு அடிச்சிட்டாங்களாமே சார். பொழைக்கிறதே கஷ்டமாமே?” என்று கேள்வியாகக் கேட்டு பதிலை தெரிந்திருக்கிறார்கள்.தமிழ் சினிமாவுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், அவசர அவசரமாக கிடைத்த வன்முறைக் காட்சிகளை வைத்து ‘சட்டக் கல்லூரியில் வன்முறை’ என்றுதான் முதலில் ஆரம்பித்தது சன் டிவியும் ஜெயா டிவியும். கிடைத்த க்ளிப்பிங்ஸை வைத்து அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் நோக்கம் மட்டுமே அப்போது அவர்களுக்கு. அரை மணிநேரத்திற்கு அப்புறம்தான் தெரிந்தது - இங்கே அடிவாங்கியது நம்பியார் அல்ல எம்.ஜி.ஆர் என்று. ரத்தம் சொட்ட சொட்ட எம்.ஜி.ஆர் விழுந்து கிடந்ததை பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இடைவேளை. இதற்குப் பின் வன்முறைகளைப் பற்றி எழுதிய பத்திரிகைகள் இதன் மூன்றாவது பாகத்தை துவங்கி வைத்தன. அது ஒட்டு மொத்தமாக தலித் சமூகத்தையே அச்சுறுத்தும் அளவுக்கு பிரச்சாரம் செய்து, பொது நீரோட்டத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தும்படியான பிரச்சாரம்.“கொடூரமான காட்டுமிராண்டிகள்”“இவங்கெல்லாம் ஜட்ஜ் ஆனா என்ன நடக்கும்”“சட்டம் படிச்சு இவங்க என்ன செய்யப் போறாங்க”‘இவங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்ல இருந்து அடிச்சு துரத்தணும்”இம்மாதிரியான தலித் விரோத வசவுகளை தொடந்து பரப்பி வந்தன ஊடகங்கள். இன்று வரை இந்த பிரச்சாரம் ஓய்ந்த பாடில்லை. இந்தப் பிரச்சாரங்கள் இவ்வளவு கொடூரமாக அப்பட்டமான சாதி வெறியாக இதற்கு முன்னரும் தமிழக அச்சு, காட்சி ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், “இந்த அளவுக்கு மோசமாக இதற்கு முன் இருந்ததே இல்லை” என்று சிலர் சொல்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்,உண்மையில் தலித் விரோத ஊடகப் பிரச்சாரத்திற்கு என்ன காரணம்? காட்சி, அச்சு ஊடகங்கள் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு சதம் இருப்பது ஆதிக்க சாதி ஆட்கள்தான். சாதி இந்து வெறியின் வன்மம்தான் தலித் விரோதப் போக்காக ஊடகங்களில் வளர்ந்திருக்கிறது. அனைத்து ஊடகங்களுமே இவ்விதமான விஷத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையில், முற்போக்கு முகமூடியைக் கொண்ட ஆனந்த விகடனின் 26-11-08 இதழில் “சட்டம் சதி சாதி” என்ற தலைப்பில் சட்டக் கல்லூரி நிகழ்வு பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.எல்லா ஊடகங்களுமே ஆதிக்க சாதிக் கருத்தியல்களை வாந்தியெடுத்துக் கொண்டிருப்பவைதான். “நாம் ஆனந்த விகடனை மட்டும் எடுத்து குறை கூறுவது ஏன்?” என நண்பர்கள் சிலர் கேட்கக் கூடும். ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் இது முற்போக்கு அது பிற்போக்கு என்பார்கள் (முன்னால போறது முற்போக்கு பின்னால போறது பிற்போக்கு) அதில் ஆனந்த விகடன் முற்போக்கு நாளிதழ் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளி வாசகர்களுக்காக மட்டுமே நாம் ஆனந்த விகடனை அம்பலப்படுத்தியிருக்கிறோம்.சங்கர்ராமன் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரனுக்காக வரிந்து கட்டிய ஆனந்த விகடனின் பூணூலை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதே பார்ப்பனத் திமிரை கையிலெடுத்து தலித்துக்களை செருப்பால் அடிக்கிற ஆனந்த விகடனைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள் 26-11-08 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்க்கவும்.“சட்டம்….சதி…சாதி” என்கிற தலைப்பில் சட்டக் கல்லூரி கலவரத்தையொட்டி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இப்படி துவங்குகிறது…“அதிகாரத்துடன் அதட்டித் தடுக்க வேண்டியவர்கள் ஒதுங்கி நிற்க, பட்டப்பகலில், தலைநகரத்தில், உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்டடத்தில் அரங்கேறி முடிந்தது அந்த அட்டூழியம்!உருட்டிப் புரட்டியதில் உணர்ச்சியற்றுக் கிடக்கும் ஓர் இளைஞனை இன்னமும் ஆத்திரம் தீராமல் அடித்து எலும்புகளைச் சில்லு சில்லாக்குகிறது அடாவடிக் கும்பல். அருகில் நிற்கும் மாணவர் கூட்டம் உற்சாகப்படுத்துகிறது. வளாகத்துக்குள் என்ன நடந்தாலும், பொறுப்பேற்க வேண்டிய கல்லூரி முதல்வரோ, தன் அறைக் கதவைப் பூட்டிக்கொள்கிறார். கொடுமையிலும் கொடுமையாக, போலீஸ்காரர்களோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.”(ஆனந்த விகடன் 26-11 –08)வார்த்தைகளை உருட்டி வசன மெருகேற்றி இப்படி துவங்குகிற அந்தக் கட்டுரை கிலோ கணக்கில் மலத்தை எடுத்து தலித்துக்களின் வாயில் திணிக்கிற வக்கிரத்துடன் துவங்குகிறது. ஒரு வேளை வழக்கம்போல அடிவாங்கியது தலித்தாக இருந்திருந்தால் வழக்கம்போல் போலீஸ் வேடிக்கை பார்த்திருந்தால் அது கொடுமையிலும் கொடுமையாக ஆனந்தவிகடனுக்கு தெரிந்திருக்காது. காட்சி மாறியதுதான் இந்தக் கொதிப்புகளுக்குக் காரணம்.அந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த வரிகளைப் படியுங்கள்..“மாணவர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அனைவரின் முகத்திரைகளையும் கிழித்துக் கடாசியிருக்கிறது ஒரே ஒரு வெறிச்செயல்!”“இப்படி நடுரோட்டுல நாயா அடிபடுறதுக்கா புள்ளையைப் பெத்து தங்கமா வளர்த்து பட்டணத்துக்குப் படிக்க அனுப்புனேன். யய்யா, பட்டணத்து மவராசனுங்களா, கண்ணு முன்னாடி ஒருத்தனை உசுர் போக அடிக்கிறப்போ, ‘என்ன ஏது?’ன்னுகூடக் கேக்க மாட்டீங்களா? மனுசனாயா நீங்க?” - சுளீரெனக் கேள்வி கேட்கிறார் ஆறுமுகத்தின் தாயார். கட்டை, கம்பி, மண்வெட்டி கொண்டு கால்கள் இரண்டும் உடைக்கப்பட்ட பிறகும் மரக் கிளையைப் பற்றி எழுந்து, தப்பித்து ஓடத் தடுமாறினானே அவன்தான்… ஆறுமுகம். மூன்றாவது அடியிலேயே நினைவிழந்து, நிலைகுலைந்து சாவைத் தொட்டு நிற்பவனை விடாமல் மொத்தி எடுக்க, வெறும் சதைப் பிண்டமாகக் குப்புறப் படுத்திருந்த இளைஞன்… பாரதி கண்ணன்.”படித்ததுமே பற்றிக் கொண்டு பாரதிகண்ணன் மீது பரிதாபம் வருகிற மாதிரியான இந்த வார்த்தை உருட்டல்களில் ‘கத்தியோடு பாய்ந்து வந்த பாரதி கண்ணன்’ குறித்து ஒப்புக்கான ஒரு வரி கூட இல்லை. ஆனால் அடுத்தடுத்து வருகிற வார்த்தைகளும் வரிகளும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரப்பூர்வ ஏட்டுக்குக் குறையாத விஷ வரிகள். பாரதிகண்ணன் மேல் பரிதாபத்தை வரவழைக்கும் ஆனந்த விகடன் பாரதி கண்ணனால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வனின் பதில் தாக்குதலை பயங்கர பழிவாங்கல் வன்முறையாக சித்தரிக்கிறது.“சட்டக் கல்லூரி மாணவர்களிடையே அனலைக் கிளப்பியதில் இவர்கள் இருவருக்கும் பங்கு உண்டு என்றாலும், அதற்கான தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை மாணவர்கள் கையில் யார் கொடுத்தது? ‘எவன் பார்த்தால் என்ன? நாங்கள் மாணவர்கள், அதுவும் சட்டக் கல்லூரி மாணவர்கள். எங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை!’ என்ற மமதையைத்தான் வெளிப்படுத்தியது அந்த ஒவ்வொரு அடியும்!”“சமீபத்தில் முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில், ‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி’ என்ற கல்லூரியின் பெயரில், டாக்டர் அம்பேத்கர் பெயர் மிஸ்ஸிங். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று மற்றொரு தரப்பு கேள்வி கேட்க, கேட்டவர்களுக்கு அடி விழுந்தது. பாலநாதன், ஜெகதீஸ் ஆகிய இருவருக்கும் பலத்த அடி...”அந்த பலத்த அடியை வழங்கிய மாணவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் வழக்கு போடப்படவில்லை? இந்தக் கேள்விகளை ஆ.வி எழுப்பவில்லை. ‘இந்த’ ஸ்டோரிக்கு ‘அந்த கதை’ தேவையில்லை!“பழி வாங்கக் குறிக்கப்பட்ட நாள்தான் நவம்பர், 12. பொதுவாக, நவம்பர் மாதம் சட்டக் கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் நடக்கும். கொஞ்சம் சேட்டைகளைக் குறைத்துவிட்டு படிக்கத் துவங்குவார்கள். தேர்வு நேரமென்பதால், கூட்டம் குறைவாக இருக்கும். தேவையானவர்களைப் பொளந்து கட்டிவிடலாம் என்பது பிளான். கத்தி, உருட்டுக்கட்டைகள், இரும்பு ராடுகள், கூர்மையான கற்கள், மண்வெட்டி போன்ற ‘பொருள்கள்’ விடைத் தாள், வினாத்தாள்களுக்கு முன்னரே வந்து இறங்கிவிட்டனவாம்.” (ஆனந்த விகடன் 26-11 –08)கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணனின் சாதிவெறியை மறைத்த ஆனந்த விகடன், அனலைக் கிளப்பிய பாரதிக்கண்ணனுக்கும் ஆறுமுகத்துக்கும் தண்டனை வழங்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்புகிறது. ஏண்டா, உங்க சட்டப்படிதானே ஒரு தலித் மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக வந்தார். ஆனால் வந்தவர் தலித்துங்கறதாலதானே சட்டத்தை நீங்களே கையிலெடுத்து வெட்டிக் கொன்னீங்க?“என்ன தோழர் நீங்க, ஏதோ மேலவளவு முருகேசனை ஆனந்த விகடன் ஆட்கள் கொன்னுட்ட மாதிரி நீங்க என்று ஆனந்த விகடனை கைகாட்டுறீங்களே?” என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா? அதற்கும் பதில் இருக்கிறது.மிகவும் ஒரு தலைபட்சமாக தலித் மாணவர்களையும் ஆம்ஸ்ட்ராங்கையும் குற்றம் சாட்டும் கட்டுரையின் எந்த இடத்திலும் கள்ளரின மாணவர்களை அடியாட்களாக உருவாக்கும் ஸ்ரீதர் வாண்டையார் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.அடுத்து கட்டுரை வரவேண்டிய இடத்துக்கு வருகிறது. அது பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இன்றும் உறைவிடமாக இருக்கின்ற, ஹாஸ்டல்கள் என்ற பெயரிலான திறந்தவெளிக் கழிப்பிடங்கள்தான். கள்ளர் சாதி வெறியர்களின் பிரதானமான இரண்டு கோரிக்கைகளில் ஒன்று - ‘ஹாஸ்டல்களை மூட வேண்டும்’ என்பது.ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் ஹாஸ்டல்களை ‘அனைவருக்கும் பொதுவான ஹாஸ்டல்’ என கரடி விடும் ஆனந்த விகடன், “பொது ஹாஸ்டலை தலித்துக்கள் ஆக்ரமித்துக் கொண்டார்களாம்” என்று திரி கொளுத்துகிறது. தாங்கள் வாழும் சேரிகளை விடக் கேவலமாக இருக்கும் ஹாஸ்டலுக்குள் உணவு, கழிப்பறை வசதி கேட்டுப் போராடும் மாணவர்களின் குரலை இப்படிப் பதிவு செய்கிறது ஆனந்தவிகடன். “அப்பளம் போடவில்லை, ஆப்பம் வேகவில்லை!” என்று தொடங்கி, நித்தமும் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம்தான்!“மோதல்கள் வெடிக்கின்றன என்றால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து களைய வேண்டும். அதை விட்டுவிட்டு, சட்டக் கல்லூரியையே மூட வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? நிச்சயமாக இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் இந்த மாணவர்களை அரசியல்மயப்படுத்த முன்வர வேண்டும். வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. (ஆனந்த விகடன் &26&11&08)மோதலுக்கான காரணங்களைக் கண்டெடுத்து தீர்க்க வேண்டும் என்று சொல்கிற அஜிதா அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த சாதி இந்து சாக்கடைக்குள் தான் இருக்கிறது என்கிற உண்மையை பேச மறுத்து விட்டதன் பின்னணி என்ன? குறைந்த பட்சம் தாக்குதலுக்கான காரணங்களைக் கூட கேள்வி கேடகத் தோன்றாதது ஏன் என்றும் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.அடுத்து நம்ம கம்யூனிஸ்ட் கனகராஜாவது உண்மையைப் பேசுவாருண்ணு பார்த்தா...“பொதுமக்களில் பல தரப்பினரும் இயக்கங்களும் ஜனநாயகரீதியாகப் போராடும்போது, இதே போலீஸ் எந்தப் புகாரும் இல்லாமல் தடியடி தொடங்கி துப்பாக்கிச்சூடு வரை நடத்துவதில்லையா? கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முதல்வரின் அனுமதி வேண்டுமென்றால், வளாகத்துக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தடுத்திருக்கலாமே. இந்த மாதிரியான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கனகராஜ்.(ஆனந்த விகடன் 26&11&08)எப்பா, எவ்ளோ பெரிய உண்மையைச் சொல்லிட்டாரு பாருங்க. கள்ளனும், தலித்தும் ஒண்ணாச் சேந்து விலைவாசிக்கு எதிரா போராடினாதான் போலீஸ் உதைக்கும். அதுவே தலித்தை கள்ளர் தாக்கினால் போலீஸ் அடிக்காது குண்டாந்தடியைக் கொடுத்து அடிக்கச் சொல்லும். சட்டக் கல்லூரியில் ஏமாந்தது ஆதிக்க சாதிக்காரங்க மட்டுமல்ல, சாதி இந்துப் போலீசும்தான். அதனாலதான் ஒரு கள்ளர் சமூக இளைஞன் அடிவாங்கினதும் உங்களுக்கெல்லாம் உதறுது. இத்தனைக் காலமும் தலித் அடிவாங்கும் போதெல்லாம் மௌனமாக இருந்த போலீசைப் பார்த்து கேள்வி கேட்காத இவர்கள் இப்போது கேட்கிறார்கள்.அடுத்து வந்தார் நம்ம கொம்யூனிஸ்டு நல்லக்கண்ணு“ஏற்கெனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்களை விசாரிக்க போடப்பட்ட கார்த்திகேயன் கமிஷன், பக்தவச்சலம் கமிஷன் ஆகியவை ‘பிரச்னைக்குரிய சூழலில் காவல் துறை, கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமலே கல்லூரிக்குள் நுழையலாம்’ என்று சொல்லியிருக்கிறது. எனவே, காவல் துறையின் வாதங்கள் எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. மேலும், இப்படி மாணவர்கள் இரு தரப்பினர் மோதலில் ஈடுபடுவதை போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பதைப் பொதுமக்களும் பார்த்தனர். இந்த போலீஸ், நாளை பொதுமக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறது என்கிற நியாயமான அச்சம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.(ஆனந்தவிகடன் 26&11&08)அதாவது அடிபட்ட கள்ளரைப் பாதுகாக்காத போலீஸ் எப்படி ஏனைய சாதி இந்துக்களை பாதுகாக்கப் போகிறது என்று கேட்டிருக்கிறார், இந்த மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர். அஜிதாவோ, கனகராஜோ, நல்லகண்ணுவோ யாருமே கள்ளர் சாதி வெறியைப் பற்றிப் பேசவில்லை. குறைந்த பட்சம் ஜனநாயக ரீதியில் எழுப்பியாக வேண்டிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை என்பதோடு ஆதிக்க சாதி தடித்தனத்துக்கு ஒத்து ஊதியிருக்கிறார்கள்.கட்டுரைக்கு தோதாக பாரதிகண்ணன் அடிவாங்குகிற மூன்று படங்களை வெளியிட்டிருக்கிறது ஆனந்த விகடன். அதன் லேஅவுட் கூட மிகத் தந்திரமாக உசுப்பேற்றும் வகையில் உள்ளது. ஒரு படத்தில் காது அறுந்து தொங்குகிற சித்திரைச் செல்வன் பாரதிக்கண்ணனை அடிப்பதைப் போட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் பாரதிகண்ணன் கத்தியோடு கொலைவெறியோடு ஓடிவரும் படத்தை மட்டும் போடவில்லை.அப்படி ஓடி வந்து சித்திரைச் செல்வனின் காதையும் கழுத்தையும் அறுத்த பிறகுதான் சித்திரைச் செல்வன் கொல்லப்படுவார் என்ற சூழலில் தலித் மாணவர்கள் சேர்ந்து பாரதிகண்ணனை புடைத்து எடுத்தார்கள்.இந்த உண்மைகளை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.பத்திரிகைத் தொழிலில் மூன்று வகையான ஜர்னலிசம் உள்ளதாக அடிக்கடி பீற்றிக் கொள்வோர் உண்டு. ஒன்று “ரியல் ஜர்னலிசம்”. இன்னொன்று “கவர் ஜர்னலிசம்”. மூன்றாவது “டெஸ்க் ஜர்னலிசம்”இதில் ரியல் ஜர்னலிஸ்ட் உண்மைக்காக எழுதுவான். ஆனந்த விகடன் சட்டக் கல்லூரி பிரச்சனை பற்றி எழுதிய மாதிரி.கவர் ஜர்னலிஸ்ட் கவர் கொடுக்கிறவனை புகழ்ந்து எழுதுவான் வாராவாரம் ஆனந்த விகடன் விஜயாகாந்தை சொறிகிற மாதிரி. இப்படி சொறிவதுதான் கவர் ஜர்னலிசம்.மூன்றாவது வருகிற டெஸ்க் ஜர்னலிசம் எந்நேரமும் வாந்திதான். இந்த வாந்தி எடுக்கிற பேர்வழிகள் அரைகுறையாக இன்டர்நெட்டை திறந்து எதையாவது படித்து விட்டு அப்படியே உவ்வே… பண்ணி வைப்பார்கள்.இதை எழுதும் போது விகடன் பாணி ஜோக் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது…ஒருவன்: “விகடன் ஏன் உப்பு சப்பில்லாம இருக்கு”விகடன் ஓனர்: “ நீ ஏண்டா அதை நக்கிப் பாக்கிறே?”.இந்த நக்கலுக்கும் வாந்திக்கும் இடையில் ஆனந்த தாண்டவம் ஆடுவதுதான் விகடனின் பவர் ஜர்னலிசம்.இதே பிரச்சனை குறித்து ஜுனியர் விகடனும் கடந்த இருவாரங்களாக கட்டுரை வெளியிட்டபடி இருக்கிறது. முதல்வாரத்தில் வெறித்தனமான கட்டுரையை வெளியிட்ட ஜூவி, இந்த வாரம் ‘தனது நடுநிலையை நிலைநாட்டுவதற்காக’ ரஜினிகாந்த் என்கிற வழக்கறிஞரின் நேர்காணலை வெளியிட்டது. அதில் தேவர் ஜாதி அரசியல் சட்டக் கல்லூரிக்குள் வளர்ந்த கதை, பாரதிகண்ணனின் வன்முறை வரலாறு, முக்குலத்தோர் பேரவை சட்டக் கல்லூரிக்குள் துவங்கப்பட்டமை என பல விஷயங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.ஆனால் அந்தக் கட்டுரையின் முடிவில் ரஜினிகாந்த் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்று போகிற போக்கில் போட்டு விட்டுப் போகிறது. அதாவது ‘தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் இப்படித்தான் பேசுவார் அதனால் கண்டு கொள்ளாதீர்கள்’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தது. ஆனால் இதே ஜுவி அதற்கு முந்தைய வாரம் எழுதிய சட்டக் கல்லூரி கட்டுரையில் ராஜாசெந்தூர்பாண்டி என்ற ஒரு வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்திருந்தது. அவரும் வெறுப்பில் தலித் விரோத விஷத்தைக் கக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த சாதி என்று போடவில்லை.எப்பா ரியல் ஜர்னலிஸ்டுகளே. ரஜினிகாந்தை ஒரு தலித் வழக்கறிஞர் என்று போடத் தெரிந்த உங்களுக்கு ராஜாசெந்தூர்பாண்டியை நாடார் என்று போடத் தெரியாதா…. குறைந்த பட்சம் சாதி இந்து என்றாவது போட்டிருக்காலமே…சரி அதெல்லாம் கிடக்கட்டும்..தமிழ் மக்களின் மனசாட்சி என்று சொல்லப்படும் ஆனந்த விகடன் வார இதழில் எப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக இவ்வளவு மோசமான கட்டுரைகள் வெளிவரும் என்று ஆராய்ந்தால்.தோழர்களே….விசாரித்த பின் தான் தெரிந்தது. ஆனந்த விகடனில் தலைமை இணை ஆசிரியரில் தொடங்கி முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அனைவரும் தேவரினத்தைச் சேர்ந்தவர்கள் என்று.குறிப்பிட்ட ஒரு சாதி ஒரு ஊடகத்தை ஆக்ரமிப்பது என்பது மிகவும் நுட்பமான விஷயம். இந்த ஆதிக்க சாதி ஆக்ரமிப்பை மறைக்கத்தான் ஆனந்த விகடன் முற்போக்கு முகமூடி போட்டிருக்கிறது. அது அம்பேத்கர் பற்றியும் எழுதும் அம்பேத்கரின் மக்களை காட்டிக் கொடுக்கவும் செய்யும்.ஜுனியர்விகடனில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிக் கூட்டு உணர்வுதான் வழக்கறிஞர் ரஜினிகாந்தை தலித் என்று அடிக்குறிப்போடு கட்டுரையை வெளியிடத் தூண்டுகிறது. ராஜாசெந்தூர்பாண்டி என்னும் நாடார் இன வழக்கறிஞரின் ஜாதியைக் குறிப்பிடாமல் அவரைப் பொதுவாக வைப்பதும் அதே சாதி இந்து உண்ர்வுதான். அது போல ஆனந்த விகடனைக் கைப்பற்றியிருக்கும் தேவர் சாதி உணர்வுதான் சட்டக் கல்லூரி நிகழ்வில் தலித்துக்கள் மேல் இவ்வளவு வன்மத்தைப் பாய்ச்சுகிறது.இது தொடர்பாக விசாரித்தபோது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆனந்த விகடனில் இருந்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டு ஓரம் கட்டப்பட்டு வந்தது தெரிகிறது. ஒரு தலித் பத்திரிகையாளர் தன் ப்ளாக்கில் தன் கிராமத்தின் மீது படர்ந்துள்ள சாதி வெறி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை ஆனந்தவிகடனுக்குள் கடும் சர்ச்சைகளை உருவாக்க அன்றிலிருந்து கட்டம் கட்டப்பட்ட அவர் கடைசியில் ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.உத்தபுரத்தில் கொடிக்கால் பிள்ளைமார் தலித் மக்களை தனித்துப் பிரித்துக் கட்டிய சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதை ஒட்டி எழுந்த பதட்டத்தின் போது அனைத்து ஆதிக்க சாதிகளும் பிள்ளைமாரை ஆதரிக்க, அதைத் தொடர்ந்து எழுந்த விவகாரங்கள் பற்றி அனைத்து பத்திரிகைகளுமே செய்திகளைப் பதிவு செய்திருந்தன.அதே செய்தியை மதுரையில் இருந்து ஒரு விகடன் நிருபர் ரிப்போர்ட் பண்ணியிருக்கிறார். ஆனால் அந்தச் செய்தி ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி இந்த தேவர் சாதிக் கும்பல் அதனை ஒரு துண்டுச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை என்ற குமுறல் அப்போதே அங்குள்ள நிருபர்கள் சிலரிடம் எழுந்ததாம்.மீண்டும் சொல்கிறோம். சட்டக் கல்லூரி விவாகரத்தில் மிக மிக ஒருதலைப்பட்சமான கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டிருப்பதோடு, ‘முக்குலத்தோர் பேரவை’க்காக அடியாள் வேலை பார்த்திருக்கிறது. மற்றெல்லா ஊடகங்களும் அனைத்து சாதி ஆதிக்க சக்திகளிடம் சிக்கியிருக்கின்றன என்றால், ஆனந்த விகடனை குறிப்பிட்ட ஒரு சாதி கைப்பற்றியிருக்கிறது.பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்பதாலேயே இதை நாம் எழுதுகிறோம்.(நன்றி: http://vinavu.wordpress.com/)

Thursday, November 27, 2008

வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணிஆர். நல்லகண்ணு

காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.1968 டிசம்பர் 25கிறிஸ்துமஸ் பண்டிகைஏசுநாதர் பிறந்த நாள் விழாஉலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.அதையொட்டி அப்பொழுது ‘உழவுச் செல்வம்’ பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத் தங்களுக்குத் தருகிறேன்.“பாவிகள் வைத்த நெருப்புஉடலைக் கருக்கிய போதும்பெற்றெடுத்த தங்கத்தைக் கைவிடவில்லை.பாசத்தால் பற்றிக் கொண்டாய்.வலது கை வெந்து விட்டது.பிள்ளையைத தாங்கியஇடது திருக்கரத்திலும்சதையெல்லாம் தீ தீய்த்துவிட்ட போதிலும் -எலும்புக் கரத்தால்பிள்ளையை ஏந்திக்கொண்டே பிணமாக கருகிவிட்டாயே.உன் பிறப்பு உறுப்பெல்லாம்நெருப்பு தின்று விட்டபோதும் தாயேபெற்றெடுத்த பிள்ளையைஅணைத்துக் கொண்டிருந்ததாய்ப் பாசத்தைதரணியெல்லாம் போற்றிப்புகழப் போகிறது.நீ உழைக்கும்பெண்ணினத்துக்கு பெருமைதேடித் தந்து விட்டாய்.தாய்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறாய்.நமது வர்க்கத்தின் சிறப்புச்சின்னமாய் - அழியாதஓவியமாய் - உயர்ந்துவிட்டாய்.உனது தியாகம் கவிஞர்களின்கருப் பொருளாய் -ஓவியர்களின் திரு உருவாய்விளங்கட்டும்உனது ஆசை நிறைவேற,வர்க்கம் வாழஎன்றென்றும் உழைப்போம்என உறுதி கூறுகிறோம்.(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.‘இந்து பத்திரிகை’44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.விடுதலை விடுதலை விடுதலைபறையருக்கும் இங்கு தீயர்புலையருக்கும் விடுதலைபரவரோடு குறவருக்கும்மறவருக்கும் விடுதலை.என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்1. சுந்தரம் (45)2. சரோஜா(12)3. மாதாம்பாள்(25)4. தங்கையன் (5)5. பாப்பா (35)6. சந்திரா (12)7. ஆசைத் தம்பி (10)8. வாசுகி (3)9. சின்னப்பிள்ளை (28)10. கருணாநிதி(12)11. வாசுகி (5)12. குஞ்சம்பாள் (35)13. பூமயில் (16)14. கருப்பாயி (35)15. ராஞ்சியம்மாள் (16)16. தாமோதரன் (1)17. ஜெயம் (10)18. கனகம்மாள் (25)19. ராஜேந்திரன் (7)20. சுப்பன் (70)21. குப்பம்மாள் (35)22. பாக்கியம் (35)23. ஜோதி (10)24. ரத்தினம் (35)25. குருசாமி (15)26. நடராசன் (5)27. வீரம்மாள் (25)28. பட்டு (46)29. சண்முகம் (13)30. முருகன் (40)31. ஆச்சியம்மாள் (30)32. நடராஜன் (10)33. ஜெயம் (6)34. செல்வி (3)35. கருப்பாயி (50)36. சேது (26)37. நடராசன் (6)38. அஞ்சலை (45)39. ஆண்டாள் (20)40. சீனிவாசன் (40)41. காவிரி (50)42. வேதவள்ளி (10)43. குணசேகரன் (1)44. ராணி (4)

கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவன்தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினான். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தான்.சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தான். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. அதனினும் கொடுமை, அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் ஆதிக்க சாதியினர் அந்தப் பேருந்துகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து தீயிட்டுக் கொளுத்தியதும், பெரும் சாதிக்கலவரத்தை உண்டாக்கியதும் தமிழக வரலாற்றின் அவமானகரமான கருப்புப் பக்கங்கள்.

பெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியது ஏன் -I

கடவுள்களை வழிபடுவது என்பது, எங்கும் சாதாரணமாக வழக்கில் உள்ளது. ஆனால் பெண் கடவுள்களை வழிபடுவது சாதாரணமானதல்ல. காரணம், கடவுள்கள் பொதுவாக திருமணமாகாதவர்களாகவே இருக்கிறார்கள். பெண் கடவுள்கள் என்று உயர்த்தி வைப்பதற்கு, கடவுள்களுக்கு மனைவிகள் இல்லை. கடவுளை மணமானவராகக் கருதுவது, எந்தளவுக்கு மனம் ஒவ்வாததாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஏசுவைக் கடவுளின் மகன் என்று யூதர்களை ஏற்கச் செய்வது, தொடக்கக் காலத்தில் கிறித்துவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைக் குறிப்பிடலாம்.கடவுளுக்கு மணமாகவில்லை என்றும், அதனால் ஏசு எப்படிக் கடவுளின் மகனாக இருக்க முடியும் என்றும் யூதர்கள் கேட்டார்கள்.இந்துக்கள் விஷயத்தில் நிலைமை முற்றிலும் வேறு விதமாக உள்ளது. அவர்கள் ஆண் கடவுள்களை வழிபடுவது மட்டுமின்றி, பெண் கடவுள்களையும் வழிபடுகிறார்கள்...இதுவரை கூறியதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, இந்துக் கடவுள் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதும், அவர் சாதாரண மனிதனைவிட உயர்வாக நடந்து கொள்ளவில்லை என்பதால், அவரோ, அவரை வழிபடுகிறவர்களோ கூச்சப்பட வேண்டியதில்லை என்பதும் ஆகும். இரண்டாவது, கடவுளின் மனைவி அவரை மணந்து கொள்ளும் காரணத்தாலேயே, அந்தக் கடவுளை வழிபடுபவர்களின் வழிபாட்டுக்குத் தகுதி பெற்றுவிடுகிறார்.வேத காலத்தைவிட்டு புராண காலத்திற்கு வந்தால், பல பெண் கடவுள்களின் பெயர்களைக் காண்கிறோம்: தேவி, உமா, சதி, அம்பிகை, பார்வதி, ஹேமாவதி, கவுரி, காளி, நிர்நிதி, சண்டி, காத்யாயினி, துர்கை, தஷ்புஜா, சிங்கவாகினி, மகிஷாசுர மர்த்தினி, ஜகதாத்திரி, முக்தகேசி, தாரா, சின்னமுஸ்தகா, ஜதக் கவுரி, பிரத்யங்கிரா, அன்னப்பூர்ணா, கணேஷ் ஜனனி, கிருஷ்ணக்ரோரா, லட்சுமி ஆகியோர். இந்தப் பெண் கடவுள்களில் யார் எவர் என்ற பட்டியலை வரைவது கடினம். முதலாவதாக இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பெண் கடவுள்களைக் குறிக்கின்றனவா அல்லது ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா என்று கூறுவதும் கடினம். இதேபோல இவர்களின் தாய் தந்தை யார் என்று கூறுவதும் கடினம். இவர்களின் கணவர்கள் யார் என்பதையும் யாரும் உறுதியாகக் கூற முடியாது...இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரும் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதாகக் காட்ட முயலுகின்றனர். இவர்களில் சரஸ்வதி பிரம்மாவின் மனைவி, லட்சுமி விஷ்ணுவின் மனைவி, பார்வதி சிவனின் மனைவி என்பதையும், இந்த மூன்று கடவுள்களும் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் பார்க்கும்போது, வராகப் புராணம் கூறும் விளக்கம் விந்தையாக உள்ளது.கவுரி யார்? பார்வதியின் மற்றொரு பெயர் தான் கவுரி என்று புராணம் கூறுகிறது. இதற்குக் காரணம் பின்வருமாறு கூறப்படுகிறது: சொர்க்கத்தில் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருக்கும்போது, அவர்களிடையே சிறு சிறு சண்டைகள் வரும். அப்படியொரு நேரத்தில் சிவன் பார்வதியின் கருப்பு நிறத்தை சுட்டிக்காட்டி அவரைச் சீண்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த பார்வதி, சிலகாலம் சிவனை பிரிந்து சென்று கடும் தவம் புரிந்தார். அதன் விளைவாக பிரம்மா அவருடைய மேனி பொன் நிறமாக விளங்கும் என்று வரம் கொடுத்தார். இதனால் அவருக்கு கவுரி என்று பெயர் வந்தது.மற்ற பெண் கடவுள்களைப் பார்த்தால், அவை ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா? அல்லது தனித்தனி கடவுள்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை...வேதத்தில் கூறப்படும் பெண் கடவுள்களையும் புராணங்களில் கூறப்படும் பெண் கடவுள்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வரலாற்றை எழுதுவது மட்டுமின்றி, அதற்குப் பொருள் கூறுவதையும் பணியாகக் கொண்டுள்ள ஒரு மாணவனுக்கு தவிர்க்க முடியாததாகும். ஒரு விஷயத்தில் இந்த இரண்டு வகை பெண் கடவுள்களுக்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.வேதத்தின் பெண் கடவுள்கள், கடவுள்களின் மனைவியர்களாக இருந்ததின் காரணமாகத்தான் வணங்கப்பட்டார்கள். புராணப் பெண் கடவுள்கள் அப்படியல்லர். இவர்கள் கடவுள்களின் மனைவியர் என்பதினாலன்றி, தங்களுடைய சொந்த முறையிலேயே வழிபாட்டைப் பெறுகிறார்கள். இந்த வேறுபாட்டிற்குக் காரணம், வேதப் பெண் கடவுள்கள் போர்க்களத்திற்கு சென்றதோ, வீரச்செயல்கள் புரிந்ததோ கிடையாது. ஆனால், புராணங்களின் பெண் கடவுள்கள் போர்க் களம் சென்று பெரும் வீரச் செயல்கள் புரிந்துள்ளார்கள். துர்கைக்கும் இரண்டு அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே துர்கைக்கு பெரும் புகழைக் கொடுத்தது...தொடரும்(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு : 8, பக்கம்: 131)

கோழைகளான ஆண் கடவுள்களா பெண் கடவுள்களுக்கு சக்தி கொடுத்தார்கள்? - II

வேதத்தில் வரும் பெண் கடவுள்களையும் புராணப் பெண் கடவுள்களையும் ஒப்பிடும்போது, சில சுவையான கேள்விகள் எழுகின்றன. வேத இலக்கியத்தில் அசுரர்களுக்கு எதிரான போர்கள் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அசுரர்களுக்கு எதிரான இந்தப் போர்களில் எல்லாம் ஆண் கடவுள்களே போர் புரிகிறார்கள். வேதங்களில் பெண் கடவுள்கள் போரில் பங்கேற்கவில்லை. வேத காலத்தில் அசுரர்களுடன் ஆண் கடவுள்கள் மட்டுமே போரிட்டதற்கு பதிலாக, புராண காலத்தில் பெண் கடவுள்கள்தான் போரிடுகிறார்கள்.வேதகாலக் கடவுள்கள் செய்ததைப் புராணப் பெண் கடவுள்கள் செய்ய வேண்டியிருந்தது. ஏன்? புராண காலங்களில் கடவுள்கள் இல்லாமல் போனார்கள் என்பது காரணமாக இருக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் இருந்தார்கள். அசுரர்களுடன் போரிடுவதற்கு இவர்கள் இருந்தபோது, ஏன் பெண் கடவுள்கள் போரிட வைக்கப்பட்டார்கள்?புராணங்களில் பெண் கடவுள்களில் பல பெயர்கள் காணப்பட்ட போதிலும் உண்மையில் அய்ந்து பெண் கடவுள்கள் தான் இருக்கிறார்கள். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, துர்க்கை, காளி. சரஸ்வதியும், லட்சுமியும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் மனைவிகள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் புராணக் கடவுள்களாக ஏற்கப்பட்டவர்கள். பார்வதி, துர்க்கை, காளி ஆகியோர் சிவனின் மனைவிகள். ஆனால் சரஸ்வதியும் லட்சுமியும் எந்த அசுரர்களையும் கொல்லவில்லை. வீரச் செயல்கள் எதையும் செய்யவில்லை. இது ஏன் என்பது தான் கேள்வி.பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஆற்றல் உண்டு. சக்தி கொள்கையின்படி இது அவர்களுடைய மனைவிகளிடம் உறைந்திருக்க வேண்டும். அப்படியானால் சரஸ்வதியும் லட்சுமியும் அசுரர்களுடன் போர் செய்யாதது ஏன்? சிவனின் மனைவிகள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். இங்கேயும் பார்வதியின் பங்கு துர்க்கையின் பங்கிலிருந்து வேறுபட்டுள்ளது. பார்வதி ஒரு சாதாரணப் பெண்ணாகக் காட்டப்படுகிறார். துர்க்கைக்குக் கூறப்படுவது போன்ற வீரச் செயல்கள் பார்வதிக்குக் கூறப்படவில்லை.துர்க்கையை போலவே பார்வதியும் சிவனின் சக்தியாவாள். அப்படியென்றால் அவளிடம் றைந்த சிவனின் சக்தி மந்தமாகவும், உறங்குவதாகவும், இன்னும் சொல்லப்போனால் இல்லை என்று கூறும் அளவுக்குச் செயலற்றதாகவும் இருந்தது ஏன்?தர்க்கரீதியாகப் பார்க்கும் போது, ஒவ்வொரு கடவுளுக்கும் சக்தி இருக்கிறது என்றால், வேதக் கடவுள்களுக்கும் அது இருந்திருக்க வேண்டும். அப்படியானால் வேதக் கடவுள்களின் மனைவிகளுக்கு இந்தக் கொள்கை ஏன் கூறப்படவில்லை? வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, புராணக் கடவுள்களிடம் சக்தி இருந்தது என்று கூறுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. மேலும், பார்ப்பனர்கள் துர்க்கையை மட்டுமே அசுரர்களை அழிக்கவல்ல வீராங்கனையாக ஆக்கியதன் மூலம் - தங்களுடைய கடவுள்களையெல்லாம் பரிதாபமான கோழைகளாக ஆக்கி விட்டதை உணரவில்லை.கடவுள்கள் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாது என்றும், தங்களைக் காப்பாற்றுவதற்குத் தங்கள் மனைவிகளின் உதவியைக் கெஞ்சிக் கேட்க வேண்டியிருந்தது என்றும் தோன்றுகிறது. அசுரர்களை எதிர்ப்பதில் புராணக் கடவுள்கள் எவ்வளவு திறனற்றவர்களாகப் பார்ப்பனர்களால் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு, மார்க்கண்டேய புராணத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டே போதுமானது:“அசுரர்களின் அரசனான மகிஷன் ஒரு முறை தேவர்களைப் போரில் தோற்கடித்து, அவர்களை வறுமைக்குள்ளாக்கினான். தேவர்கள் பிச்சைக்காரர்களாகி பூமியில் திரிந்து கொண்டிருந்தனர். இந்திரன் இவர்களை முதலில் பிரம்மாவிடமும் பின்பு சிவனிடமும் கூட்டிச் சென்றான். இவர்கள் இருவரும் தேவர்களுக்கு உதவ முடியாததால் விஷ்ணுவிடம் சென்றார்கள். விஷ்ணு தேவர்களின் பரிதாப நிலையைக் கண்டு உள்ளம் வருந்தியதால், அவரது முகத்திலிருந்து ஒளி வெள்ளம் புறப்பட்டது. அவற்றிலிருந்து ‘மகாமாயை' (துர்க்கையின் மற்றொரு பெயர்) என்ற பெண் உருவம் தோன்றியது.மற்ற கடவுள்களின் முகங்களிலிருந்தும் ஒளி வெள்ளங்கள் புறப்பட்டு, மகாமாயையினுள் புகுந்தன. இதனால் மகாமாயை ஒரே ஒளிமயமாக நெருப்பு மலையைப் போல ஆகிவிட்டார். பின்னர் கடவுள்கள் தங்களுடைய ஆயுதங்களை அந்தப் பயங்கரமான உருவத்திடம் கொடுத்து விட்டார்கள். அவள் அச்சமூட்டும்படியான பெரும் கூச்சல் எழுப்பிக்கொண்டு, காற்றில் மேலே பாய்ந்து அசுரனைக் கொன்று தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தாள்.''இப்படிக் கோழைகளான கடவுள்களிடம் என்ன வல்லமை இருக்க முடியும்? அவர்களிடம் வல்லமை இல்லையென்றால், அவர்கள் எப்படி அதைத் தங்கள் மனைவிகளுக்குக் கொடுக்கமுடியும்? பெண் கடவுள்களிடம் சக்தி இருப்பதால் அவர்களை வழிபட வேண்டும் என்று கூறுவது, ஒரு புதிர் மட்டுமல்ல; பொருந்தாத பொருளற்ற கூற்றுமாகும். சக்திக் கொள்கை ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. சந்தையில் ஒரு புதிய பொருளை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக, பார்ப்பனர்கள் பெண் கடவுள்களை வழிபடும் முறையைத் தொடங்கி வைத்து, தங்கள் கடவுள்களைத் தாழ்ந்த நிலைக்கு இறக்கி விட்டார்களா?

எனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் வெளியேறினேன் - VI

என் பதவி விலகும் முடிவை எடுக்க இத்தனை காலம் பிடித்ததற்கு காரணங்கள் உண்டு. முதலாவதாக, அமைச்சரவையின் உறுப்பினராக இருந்த பெரும்பாலான காலத்தில், 1950 சனவரி 26 வரை, அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியிலேயே மூழ்கியிருந்தேன். அதற்குப் பிறகு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட வரைவிலும், எல்லைகளை நிர்ணயிக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வந்தேன். ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யாமல் விட்டு விட்டுச் செல்வது ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டாவதாக, இந்து சட்டத் தொகுப்பின் பொருட்டு தொடர்ந்து பதவியில் இருப்பது அவசியம் என்று எண்ணினேன். இந்து சட்டத் தொகுப்பிற்காக பதவியில் நான் நீடித்தது தவறு என்று சிலர் எண்ணக்கூடும். நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தேன். இந்து சட்டத் தொகுப்பு இந்த நாட்டின் சட்டமன்றம் மேற்கொண்ட மிகப் பெரிய சமூக சீர்த்திருத்த நடவடிக்கையாகும்.கடந்த காலத்தில் இந்திய சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட எந்த சட்டமோ, இனி இயற்றக்கூடிய எந்த சட்டமோ - இதற்கு இணையான முக்கியத்துவம் உடையதாக இருக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் பாலின ஏற்றத்தாழ்வுகளுமே இந்து சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. அதனை அப்படியே விட்டுவிட்டு, பொருளாதார சிக்கல்கள் குறித்த சட்டங்களை மட்டும் இயற்றிக் கொண்டே போவது, நமது அரசமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதாகும். இது, சாணிக் குவியலின் மீது அரண்மனையைக் கட்டுவதற்கு ஒப்பானதாகும். இந்து சட்டத் தொகுப்புக்கு நான் வழங்கும் முக்கியத்துவம் இதுதான். இதன் பொருட்டே எனது மன வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நான் பதவியில் நீடித்திருந்தேன்.ஆகவே நான் ஏதேனும் தவறை செய்திருப்பேனாகில், ஏதேனும் நல்லதைச் செய்யலாம் என்ற நம்பிக்கையில்தான் அவ்வாறு செய்திருப்பேன். இது தொடர்பாக அவையில் பிரதமர் கொடுத்த மூன்று அறிக்கைகளை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 1949 நவம்பர் 28 அன்று பின்வரும் உறுதிமொழிகளைப் பிரதமர் வழங்கினார்: “இந்து சட்டத்தொகுப்பை செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான சட்டவரைவை அது பரிசீலித்து வருகிறது.''“இந்து சட்டத் தொகுப்பை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்வது அவையின் விருப்பம். ஆனால் அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, அவை அதை நிராகரிக்குமானால் அது அரசையே நிராகரிப்பதாகும். அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகளுள் இதுவும் ஒன்று என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பொருத்தே அரசு நிலைப்பதும் வீழ்வதும் இருக்கிறது.''1949 டிசம்பர் 19 அன்று மீண்டும் பிரதமர் இவ்வாறு கூறினார்: “இந்து சட்டத் தொகுப்பு முக்கியமானதல்ல என அரசு கருதுவதாக இந்த அவைக்கு சிறிதளவு எண்ணம் வருவதைக் கூட நான் விரும்பவில்லை. ஏனெனில், நாங்கள் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளில் ஆகப் பெரியதான இந்த பிரச்னை குறித்த அதன் அடிப்படை அணுகுமுறைக்காகவே அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நாம் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். நமது பயணத்தில் இது ஒரு கட்டமாகும். இதோடு, பொருளாதாரம், சமூகம் என்று இன்னும் பல கட்டங்கள் உள்ளன. நமது சமூகம் முன்னேற வேண்டுமெனில், எல்லா முனைகளிலும் இப்படியான ஓர் ஒருங்கிணைந்த முன்னேற்றம் தேவை.''1951 செப்டம்பர் 26 அன்று பிரதமர் கூறியதாவது: “சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் எந்த அளவு முடியுமோ அந்த அளவில் இந்த சட்டத் தொகுப்பை நிறைவேற்ற அரசு கொண்டுள்ள விருப்பம் குறித்து இந்த அவைக்கு உறுதி அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நம்மைப் பொருத்த வரையில் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் வரையில், இது தள்ளிவைக்கப்பட்டதாகவே கருதுகிறோம். அந்த வாய்ப்பை இந்த நாடாளுமன்றமே அளிக்கும் என நம்புகிறேன்.''இது இந்த சட்டவரைவைக் கைவிடுவதாகப் பிரதமர் அறிவித்த பிறகு கூறியது. பிரதமரின் இந்த அறிவிப்புகளை யார்தான் நம்பாமல் இருக்க முடியும்? பிரதமரின் வாக்குறுதிகளுக்கும் செயல்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றால், அத்தவறு கண்டிப்பாக என்னுடையதல்ல. அமைச்சரவையிலிருந்து நான் வெளியேறியது, இந்நாட்டில் எவரும் அக்கறை கொள்ளக் கூடிய ஒரு செய்தியாக இல்லாதிருக்கலாம். ஆனால் எனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் எனில், நான் வெளியேறுவதன் மூலமே அது சாத்தியம். அதற்கு முன் அமைச்சரவையின் உறுப்பினராக நான் இருந்தபோது என்மீது காட்டிய அன்புக்காகவும் பாசத்திற்காகவும் எனது சகாக்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு நான் விலகவில்லை என்ற போதும், என்னை இதுநாள் வரையில் சகித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-முற்றும்(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1325)

இந்து சட்டவரைவை பிரதமர் நேரு திட்டமிட்டே நிறைவேற்ற மறுத்தார் - V

சட்ட வரைவு அவையின் முன்னால் இருந்த போதே, அது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. ஓர் ஆண்டுவரை அதைப் பொறுக்குக் குழுவுக்கு அனுப்புவது அவசியம் என்றே அரசு கருதவில்லை. 1948 ஏப்ரல் 9 அன்று தான் அது பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 12 அன்று தான் அந்த சட்டவரைவு குறித்த அறிக்கை அவைக்கு வழங்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 31 அன்று அந்த அறிக்கையை ஆய்வு செய்யக்கோரும் தீர்மானத்தை, அவையில் கொண்டு வந்தேன். தீர்மானத்தைக் கொண்டு வருவதற்காகவே சட்ட வரைவு அவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், 1949ஆம் ஆண்டின் பிப்ரவரி கூட்டத்தொடர் வரை, இந்தத் தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் விவாதம் அனுமதிக்கப்பட்டது. அப்போதும் கூட தொடர்ந்த விவாதத்திற்காக அது அனுமதிக்கப்படவில்லை. அது விட்டுவிட்டுப் பத்து மாதங்களும், பிப்ரவரியில் 4 நாட்களும், மார்ச்சில் 1 நாளும், 1949 ஏப்ரலில் 2 நாட்களும் நடைபெற்றது. இதற்குப் பின்னர் 1949 டிசம்பரில் இச்சட்ட வரைவுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. அது டிசம்பர் 19 ஆகும். அன்று தான் பொறுக்குக்குழுவினால் பரிந்துரைத்தபடியான எனது சட்ட வரைவு, பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டில் சட்ட வரைவுக்கு நேரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அடுத்தபடியாக, அவையின் முன் சட்ட வரைவு வந்தது 1951 பிப்ரவரி 5ஆம் தேதியாகும். அப்போது சட்ட வரைவு ஒவ்வொரு விதியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிப்ரவரி 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே சட்ட வரைவுக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.இது, இப்போதைய நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடராதலால், இந்த நாடாளுமன்றம் முடிவடைவதற்கு முன்பே இந்து சட்டத் தொகுப்பு சட்ட வரைவை நிறைவேற்றுவதா அல்லது புதிய நாடாளுமன்றத்திற்கு அதனை விட்டு விடுவதா என்பதை அமைச்சரவை தீர்மானிக்க வேண்டியிருந்தது. இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே இந்த சட்ட வரைவை நிறைவேற்றுவது என்று அமைச்சரவை ஒருமித்ததாக முடிவு செய்தது. ஆகவே சட்ட வரைவு நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது. மேற்கொண்டு விதி வாரியான பரிசீலனைக்காக 1951 செப்டம்பர் 17 அன்று அது எடுத்துக் கொள்ளப்பட்டது.விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். அதாவது, கிடைக்கக்கூடிய கால நேரத்திற்குள் சட்ட வரைவை முற்றிலுமாக நிறைவேற்ற இயலாது. ஆகவே சட்ட வரைவு முழுவதையும் நிறைவேற்ற அனுமதி அளிப்பதற்குப் பதிலாக, அதன் ஒரு பகுதியை சட்டமாக இயற்றுவது விரும்பத்தக்கது என்று அவர் யோசனை கூறினார். “மொத்தமும் இழந்துவிடக்கூடிய நிலையில் இருக்கும் போது, ஒரு பகுதியையாவது பாதுகாப்பது நல்லது” என்ற முதுமொழிக்கு இணங்க நானும் அதை ஏற்றுக் கொண்டேன்.திருமணம் மற்றும் மணவிலக்குக்கான பகுதியை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை கூறினார். இந்த வகையில், சிதைக்கப்பட்ட வடிவத்தில் சட்ட வரைவு தொடர்ந்தது. சட்ட வரைவு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதங்களுக்குப் பின்னர், பிரதமர் மற்றுமொரு யோசனையை முன்வைத்தார். திருமணம் மற்றும் மணவிலக்குப் பகுதி உட்பட, சட்ட வரைவு முழுவதையுமே கைவிட்டு விடலாம் என்பது அவரது யோசனையில் இருந்தது.தலைமீது இடி விழுந்தது போல, இது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் பெரிதும் திகைத்துத் திணறிப் போய் எதையும் சொல்ல முடியாத நிலைக்கு வந்தேன். இந்த சிதைக்கப்பட்ட சட்ட வரைவும் போதிய கால நேரம் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. அமைச்சரவையின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பிற உறுப்பினர்களின் சட்ட வரைவுக்கும் பத்திரிகைத் துறை சட்ட வரைவுக்கும் எப்படி முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை...ஆகவே அவகாசம் இல்லை என்பதால் சட்ட வரைவைக் கைவிடும் பிரதமரின் முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனது பதவி விலகலுக்காக இந்த விரிவான விளக்கத்தை நான் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாகவே பதவி விலகுவதாகக் கூறும்படி என்னிடம் சிலர் யோசனை கூறியுள்ளனர். இத்தகைய யோசனைகள் எதையும் நான் ஏற்கத் தயாரில்லை. நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக எனது கடமையைக் கைவிடும் கடைசி மனிதன் நான்தான்.எனது பதவி விலகல் காலங்கடந்து நடந்துள்ளது என்றும், அரசின் வெளியுறவுத் துறைக்கொள்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் நடத்தப்படும் விதம் எனக்கு நிறைவளிப்பதாக இல்லை என்றும் நான் எண்ணியிருந்தால், முன்னதாகவே நான் பதவி விலகியிருக்க வேண்டும் என்று சிலர் கூறலாம். இக்குற்றச்சாட்டு நியாயமானது போல் தோன்றக்கூடும். -தொடரும்(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1324)

காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது என் உறுதியான கருத்து

அசாத்தியமானதைச் செய்ய முனையும் இந்த கொள்கை (வெளியுறவுக் கொள்கை) மிகவும் ஆபத்தானது. இதனால் ராணுவத்துக்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் விபரீத விளைவு என்ன? பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை; நமது நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் நாம் பெறும் 350 கோடி ரூபாய் வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 180 கோடி ரூபாயை ராணுவத்திற்காகச் செலவழிக்கிறோம். இது மிகப் பெரிய செலவாகும். இந்த அபரிமிதமான செலவீனம், நமது வெளியுறவுத் துறைக் கொள்கையின் நேரடி விளைவாகும். அவசரத் தேவையின் போது நம் உதவிக்காக நாம் நம்பியிருக்கக்கூடிய நண்பர்கள் எவரும் நமக்கு இல்லை என்பதால், நமது பாதுகாப்புக்கான செலவு முழுவதையும் நாமே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய வெளியுறவுக் கொள்கை சரியானதுதானா என நான் வியப்படைகிறேன்.பாகிஸ்தானுடனான நமது மோதல், நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது குறித்து நான் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளேன். பாகிஸ்தானுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன: ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்திலுள்ள நமது மக்களின் நிலைமை. கிழக்கு வங்காளத்தில் நமது மக்களின் நிலைமை காஷ்மீரில் இருப்பதைவிட சகிக்க முடியாததாக இருக்கிறது. அனைத்து செய்தி ஏடுகளும் இதனை உறுதி செய்துள்ளன. எனவே, நாம் கிழக்கு வங்காள விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சினையில் நம் ஆற்றல் முழுவதையும் வீண்விரயம் செய்து வருகிறோம்.ஒரு போலியான பிரச்சினைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்ற பிரச்சினைக்காகவே நாம் பெரும்பாலும் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான பிரச்சினை, யார் செய்வது சரி என்பது அல்ல; எது சரி என்பதே. இதையே முக்கியப் பிரச்சினையாக வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது எப்போதுமே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்திய வரைபடத்தில் செய்தது போல, இந்து மற்றும் பவுத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுங்கள்.காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பகுதிகளைப் பற்றி உண்மையில் நாம் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை அது. இப்பிரச்சினை குறித்து அவர்கள் விரும்புவதுபோல முடிவு செய்யட்டும்; அல்லது நீங்கள் விரும்பினால் அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அதாவது போர் நிறுத்தப் பகுதி, பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் ஜம்மு - லடாக் பகுதி என்று பிரிக்கலாம். பள்ளத்தாக்கில் மட்டும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம். இது தொடர்பாக எனக்கு ஓர் அச்சம் உள்ளது. அதாவது ஒட்டுமொத்த வாக்கெடுப்பாக இருக்கக்கூடிய உத்தேச பொதுமக்கள் வாக்கெடுப்பில், காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்களும் பவுத்தர்களும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் பிணைக்கப்படும் ஆபத்து உள்ளது.இந்நிலைமையில் கிழக்கு வங்கத்தில் இன்று சந்திக்கும் அதே பிரச்சினைகளையே நாம் சந்திக்க நேரிடும். எனது பதவி விலகலுடன் பெரிதும் தொடர்புடைய நான்காவது விஷயத்துக்கு இப்போது வருகிறேன். அமைச்சரவை என்பது ஏற்கனவே பல்வேறு குழுக்களால் எட்டப்பட்ட முடிவுகளைப் பதிவு செய்யும் வெறும் பதிவு அலுவலகமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் சொல்லியது போல, அமைச்சரவை இப்போது குழுக்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறை தொடர்புடைய அனைத்து முக்கிய விஷயங்களையும் அக்குழுவே கையாண்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புக் குழுவினரால் சரி செய்யப்படுகின்றன.அமைச்சரவையின் உறுப்பினர்கள் இக்குழுக்களால்தான் நியமிக்கப்படுகின்றனர். இதில் எந்தக் குழுவிலும் நான் இல்லை. இரும்புத் திரைக்குப்பின்னால் அவர்கள் செயல்படுகின்றனர். இங்கு முக்கிய உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் கொள்கையை உருவாக்குவதில் பங்கு கொள்ளும் எந்த வாய்ப்புமின்றி, கூட்டுப் பொறுப்பை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஓர் முரண்பாடான நிலையாகும்.பதவி விலக வேண்டும் என்ற முடிவுக்கு நான் வர என்னை இறுதியாக இட்டுச்சென்ற ஒரு விஷயம் குறித்து இப்போது கூறுகிறேன். இந்து சட்டத் தொகுப்பிற்கு நேர்ந்த கதிதான் அது. 1947 ஏப்ரல் 11 அன்றுதான் இந்த சட்டத்தொகுப்பு வரைவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நான்காண்டு காலம் உயிரோடிருந்தது. அதன் நான்கு சட்டக் கூறுகள் ஏற்கப்பட்ட பின்னர் அது கேட்பாரின்றி செத்து மடிந்தது.பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 14(2), பக்கம் : 1322

வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III

வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III
இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை' என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். "அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்'' என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். "நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது' என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.- தொடரும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320