Monday, December 1, 2008

தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம் -3

தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம் திங்கள், 1 டிசம்பர் 2008( 13:03 IST ) இவ்வாறு அருந்ததியருக்கான தனி இட ஒதுக்கீடு தொடர்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வழி முறைகளைச் சிறிதும் பிசகாமல் தமிழக அரசு பின் பற்றி வருகிறது. எனவே அருந்ததிய சமுதாயத்தினருக்குக் கிடைத்திட போகும் விருந்தில் விஷம் கலக்கலாம் என்ற ஜெயலலிதாவின் கனவு வீண் கனவு, பகல் கனவு!ஏதோ, தான் முதலமைச்சராக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை அருந்ததிய இன மக்கள், ஆதிதிராவிட மக்கள், மற்றும் தேவேந்திர குல வேளாள மக்கள் தன்னிடம் வைத்ததாகவும், அவர்களது கோரிக்கையை நிறை வேற்றுவது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததாகவும் தனது அறிக்கையிலே கதை அளந்திருக்கிறார் ஜெயலலிதா. அப்படி அவர் செய்ததற்கான அரசாங்கத்தின் கோப்பை சுட்டிக்காட்ட முடியுமா? அதற்கு அரசு ஆவணங்களோ, ஆதாரங்களோ உண்டா? போகிற போக்கில் பொய்யையும், புரட்டையும், புளுகையும் அவிழ்த்து விட்டால், அதனை நம்புவதற்குத் தமிழர்கள் என்ன இளித்தவாயர்களா? அப்படி ஒரு சிலர் இருந்தால் அவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளவும்.வெற்று அறிக்கைகள், வீணான ஆரவாரங்கள், வேடிக்கை அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை விடுத்து, ஆரோக்கியமான அரசியலைப் பின்பற்றி நாட்டு மக்கள் நலன்கருதி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இனியாவது வழங்குவது ஜெயலலிதா போன்றவர்களுக்கு நல்லது. "நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்!'' என்னும் புறநானூற்று வாசகம் அவர்களுக்கெல்லாம் நல் ஒளியும்-நல் வழியும் காட்டட்டும்.அருந்ததிய சமுதாயத்தினருக்குக் கிடைத்திட இருக்கும் தனி இட ஒதுக்கீட்டினைத் தடுத்திட முனைபவர்கள், அதனைக் கொண்டு வர பாடுபடுபவர்கள் யார் என்பதை அந்தச் சமுதாயத்தினர் இப்போதாவது அடையாளம் கண்டு கொள்ளட்டும்.கடைக்கோடியில் இருக்கும் அருந்ததிய சமுதாயத்தினருக்கான தனி ஒதுக்கீட்டிற்கு தடைக் கற்களைப் போட எண்ணாமல் ஜெயலலிதா போன்றவர்கள் தள்ளி நிற்கட்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

No comments: