அருந்ததியர் உள் ஒதுக்கீடு: ஜெ.வுக்கு கலைஞர் கோரிக்கை சென்னை, டிச.1 : அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கு இல்லை என அறிக்கை விட்டிருந்தாட் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா. ஜெ. அறிக்கையை தொடர்ந்து , அருந்ததியினருக்கு இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கொடுக்க தான் எடுத்த முயற்சிகளைப் பற்றியும், பஞ்சாப் அரசின் முன்மாதிரி பற்றியும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. அந்த அறிக்கையிலிருந்து...திமுக அரசு செய்து வரும் சாதனைகளை கடும் சொற்களால் அர்ச்சித்து வருவதை ஜெயலலிதா தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். நல்லவை நடக்கும்போது பாராட்டாவிட்டாலும் கூட பழி சொல்லாமலாவது இருக்க வேண்டும். அருந்ததியர் ஒதுக்கீடு தொடர்பாக நான் ஏமாற்றுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அருந்ததியரை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தின் 341 (2) பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் அறிவிக்கையின்படி 76 ஜாதியினர் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் அடங்குவர். 12.3.2008ல் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நீதிபதி ஜனார்தனன் தலைமையில், அருந்ததியர் இடஒதுக்கீடு தொடர்பாக ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது.அந்த குழு அளித்த பரிந்துரையின்படி திமுக அரசு செயல்பட முனந்தபோது, அதற்கு முரண்பட்ட கருத்துக்களை ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வேடிக்கை அரசியல் நடத்துவதை கைவிட்டுவிட்டு, நாட்டு மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வ அரசியல் நடத்த ஜெயலலிதா முன் வர வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் அருந்ததியர் இன மக்களின் தனி ஒதுக்கீட்டுக்கு தடைக்கற்களைப் போடாமல் ஜெயலலிதா ஒதுங்கி இருக்க வேண்டும். thanks to : Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment