கிறிஸ்தவருக்கான தனி ஒதுக்கீடு ரத்து - முதல்வர் உத்தரவு சென்னை அக்-13.(டிஎன்எஸ்) கிறிஸ்தவ சமுதாயத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு என அரசு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கு என அறிவித்த ஆணையை திரும்பப் பெறுவது என்று அரசு முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சர் மு கருணாநிதி அக்-13 அன்று அறிவித்துள்ளார்.ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டில் உயர் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்பிலும் கிறிஸ்தவர்கள் பெற்ற வாய்ப்புக்களைவிட இந்த தனி இடஒதுக்கீடு மூலம் மிகக் குறைவாகவே பெற முடிகிறது என்று கிறிஸ்தவ சமுதாயத்தினர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அந்த கோரிக்கையை மிகுந்த பரிவோடும், கனிவோடும் ஆய்வு செய்த முதலமைச்சர், இத்தகைய உத்தரவை பிறப்பித்திருப்பதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.தலைமைச் செயலகத்தில் அக்-13 அன்று கிறிஸ்தவ சமுதாயத்தின் பிரதிநிதிகளான சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, நாகர்கோயில் பேராயர் பீட்டர் ரெமிஜியஸ், சென்னை சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், நெல்லை சிஎஸ்ஐ பேராயர் ஜெயபால் டேவிட், நாகர்கோவில் சிஎஸ்ஐ பேராயர் தேவகடாட்சம் மற்றும் தனிஸ் லாஸ் கிளாட்சன் ஜெய்சிங், பெனி, பிரகாஷ் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொரடா பீட்டர் அல்போன்ற சிறபானமையினர் நல ஆணையத்தின் தலைவர் வின்சன்ட் சின்னதுறை, பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் முதலமைச்சர் மு கருணாநிதியை நேரில் சந்தித்து பிற்படுத்தப்பட்ட கிறஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி இடஒதுக்கீடு குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.மாநில அரசு பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை திரும்பப்பெற்று முன்பு இருந்தபடியே பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டிலேயே தாங்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு அளிக்கும்படி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.சிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு இந்த தனி ஒதுக்கீடு முன்பு அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை குறைத்து இருப்பதை எண்ணிப்பார்த்து தனி ஒதுக்கீடை திரும்பப் பெறுவது என்றும், சட்டத்தில் இதற்கென தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இந்த தனி ஒருக்கீட்டு ஆணையை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசு முடிவு எடுத்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, டாக்டர் பொன்முடி, சுரேஷ் ராஜன், கீதா ஜீவன் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதன் மற்றும் அதிகாரிகள் உடனருந்தனர். (டிஎன்எஸ்) Oct 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment