Monday, December 1, 2008

தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்

அரு‌ந்த‌திய‌ர் சமுதாய‌த்‌தினரு‌க்கான த‌னி இட ஒது‌க்‌கீடு கு‌றி‌த்து ஜெய‌ல‌லிதா கூ‌றியத‌ற்கு க‌ண்ட‌னம் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர் த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி. இது கு‌றி‌த்து அவ‌ர் ‌எழுதிய கடிதத்தில், எப்போதும் எதிரிக் கட்சியாகவே எகிறிக் குதிப்பதும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதும், "எல்லாம் எமக்குத் தெரியும்'' என்ற "திருவிளையாடல்'' திரைப்படப்பாணியில் தனது தலைக்கனத்தையும் தன்முனைப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வதும் ஜெயலலிதாவின் குண விசேஷம்.அதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் அருந்ததியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்த அவரது அறிக்கையும் அமைந்திருக்கின்றது. எடுத்த எடுப்பிலேயே அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று அருந்ததிய மக்களை நான் ஏமாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அருந்ததிய மக்களை மட்டுமல்ல, அருந்தமிழ் நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் ஏய்த்து, ஏமாற்றி அரசியல் நடத்தி வருபவர்தான் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரை வேக்காட்டு அறிக்கைகளையும், நாச எண்ணம் கொண்ட நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' என்ற தஞ்சை ராமையா தாசின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன."தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை'' என்கிறார் ஜெயலலிதா தனது அறிக்கையில். அதற்கு ஆதரவாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341-வது பிரிவைக் குறிப்பிடுகிறார்.அரசியல் சட்டத்தின் 341 (1)வது பிரிவு ஒவ்வொரு மாநிலத்திலும், தாழ்த்தப்பட்டோர் யார்-யார்? என்று இந்தியக் குடியரசுத் தலைவர் வெளியிடும் அறிவிக்கை பற்றியதாகும். 341(2)வது பிரிவு இந்தியக் குடியரசுத் தலைவர் வெளியிடும் அறிவிக்கையில் எதனையும் சேர்ப்பதற்கு அல்லது நீக்குவதற்கு நாடாளுமன்றத்திற்குத் தரப்பட்டுள்ள அதிகாரம் பற்றியதாகும்.தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவிக்கையின் படி, 76 சாதியினர் தாழ்த்தப்பட்டோர் எனும் பிரிவுக்குள் அடங்குவர். இன்னும் ஆதாரம் தேவையானால், 12.3.2008 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் அந்தக் கட்சியின் முன்னோடிகளான டி.ஜெயக்குமாரும், எஸ்.அன்பழகனும் கலந்து கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விரிவான முறையில் விசாரித்தறிந்து அண்மையில் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அமைந்துள்ள ஆணைய‌த்‌தி‌ன் நிலையையும் ஆராய்ந்து தேவைப்பட்டால் அவர்களையும் கலந்து கொண்டு அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் குழு அமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.அதற்கேற்ப நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை‌யி‌ன்படி இந்த அரசு செயல்பட முனையும் போது அதற்கு மாறான முரண்பட்ட கருத்தினை ஜெயலலிதா தன் அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

No comments: